கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Updated : பிப் 16, 2021 | Added : பிப் 16, 2021 | கருத்துகள் (107+ 36)
Share
Advertisement
சென்னை : கடந்த 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த, 2009ல், நடந்த லோக்சபா தேர்தலில், சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அ.தி.மு.க., சார்பில் ராஜகண்ணப்பன் போட்டியிட்டனர். 3,354 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்,
p.chidambaram, chidambaram, sivaganga, loksabha, chennai high court, high court,  சென்னை உயர்நீதிமன்றம், சென்னை ஐகோர்ட்,  ப.சிதம்பரம், சிதம்பரம்,  சிவகங்கை, லோக்சபா தேர்தல், வெற்றி,

சென்னை : கடந்த 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த, 2009ல், நடந்த லோக்சபா தேர்தலில், சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அ.தி.மு.க., சார்பில் ராஜகண்ணப்பன் போட்டியிட்டனர். 3,354 ஓட்டுக்கள் வித்தியாசத்தில், சிதம்பரம் வெற்றி பெற்றார். இதையடுத்து, சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ராஜகண்ணப்பன், தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.


latest tamil news



10 ஆண்டுகளாக விசாரணையில் இருந்த வழக்கை, இறுதியில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், 2020 அக்டோபரில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதி தள்ளி வைத்திருந்தார். இவ்வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என உத்தரவிட்டு, குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை என ராஜகண்ணப்பன் மனுவை தள்ளுபடி செய்தார்.

Advertisement




வாசகர் கருத்து (107+ 36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
17-பிப்-202109:05:23 IST Report Abuse
அம்பி ஐயர் இந்த வழக்கிற்காக பத்து வருடம் மேல் நீதிமன்றத்தின் நேரமும் மக்களின் பணமும் வீண்....
Rate this:
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
17-பிப்-202106:55:31 IST Report Abuse
Mannai Radha Krishnan 90 வயசு கெழவிக்கு கல்யாணம் ஆனால் என்ன....ஆகாட்டி என்ன ?
Rate this:
Cancel
Gopalakrishnan Ra - Madurai,இந்தியா
17-பிப்-202106:42:32 IST Report Abuse
Gopalakrishnan Ra நீதிதேவன் தூங்கிக்கொண்டிருக்கிறான். சீக்கிரம் தட்டி எழுப்புங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X