பொது செய்தி

இந்தியா

'செஞ்சுரி' அடிக்க போகும் பெட்ரோல் விலை : டிரெண்டிங்கில் கவலை

Updated : பிப் 16, 2021 | Added : பிப் 16, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். பிரீமியம் பெட்ரோலின் விலை சில ஊர்களில் 100 தொட்டுள்ளது. சாதாரண பெட்ரோல் விலையும் அதை நெருங்கி கொண்டு உள்ளது. இதனால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.நம் வாழ்வின் ஒரு அங்கமாகி விட்டது பெட்ரோல் - டீசல். இந்தியாவில் உள்ள மக்கள்தொகைக்கு பெட்ரோல் -
PetrolDieselPriceHike, PetrolPriceHike, Petrol, Diesel,

புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். பிரீமியம் பெட்ரோலின் விலை சில ஊர்களில் 100 தொட்டுள்ளது. சாதாரண பெட்ரோல் விலையும் அதை நெருங்கி கொண்டு உள்ளது. இதனால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

நம் வாழ்வின் ஒரு அங்கமாகி விட்டது பெட்ரோல் - டீசல். இந்தியாவில் உள்ள மக்கள்தொகைக்கு பெட்ரோல் - டீசலின் பயன்பாடு அதிகமாகவே உள்ளது. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மே வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்வு செய்யப்பட்டதும் ஜூன் முதல், அவற்றின் விலை மெல்ல உயர்ந்து வருகின்றன. அதிலும் கடந்த 10 தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.


latest tamil news




சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.91.45 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.84.77ஆகவும் உள்ளது. டில்லியில் பெட்ரோல் ரூ.89.29, டீசல் ரூ.79.70ஆகவும், மும்பையில் பெட்ரோல் 95.75ஆகவும், டீசல் ரூ.86.72ஆகவும் உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் சாதா பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 97.07ஆகவும், பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100ஐயும் தொட்டுள்ளது. கொரோனா தளர்வுகளுக்கு பின் பெட்ரோலுக்கான தேவை அதிகரித்து வருவதாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாலும் இந்த விலை ஏற்றம் இருப்பதாக சொல்கிறார்கள்.

பொதுவாக பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்துவிட்டால் மற்ற பொருட்களின் விலையும் மெல்ல உயர துவங்கிவிடும். இது சாதாரண மற்றும் நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும். இதனால் பொதுமக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். எதிர்கட்சியினர் தொடங்கி சாதாரண மக்கள் வரை இதுபற்றி பரவலாக பேச தொடங்கி விட்டனர். அதிலும் சமூகவலைதமான டுவிட்டரில் இந்த விவகாரம் டிரெண்டிங்கில் உள்ளது.


latest tamil news




பலரும் முந்தைய மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் இருந்த பெட்ரோல் - டீசல் விலையையும், இப்போது உள்ள விலையையும் பட்டியலிட்டு கருத்து பதிவிட்டு வருவதோடு, ஆளும் பா.ஜ., அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ''பெட்ரோல் - டீசல் விலை அதிகரிப்பு நடுத்தர மக்களை தான் பெரிதும் பாதிக்கும். ஆனால் மத்திய அரசு அதை கண்டு கொள்ளாமல் உள்ளது'' என்று சிலரும், ''இந்தியாவின் ஜிடிபி (கேஸ், டீசல், பெட்ரோல்) அசுர வளர்ச்சியில் உள்ளது'' என பதிவிட்டுள்ளனர். வட மாநிலத்தில் ஒருவர் பெட்ரோல் பங்கு முன்பாக பெட்ரோல் விலை ரூ.100ஐ தொட்டதாக குறிக்கும் விதமாக பேட், ஹேல்மட்டுடன் செஞ்சுரி அடித்தபடி இருக்கும் போட்டோ ஒன்றும் வைரலாகி உள்ளது.

பலரும் தங்களது கவலைகளை கூட மீம்ஸ்களாக வெளிப்படுத்தி வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சச்சின் டெண்டுல்கர் 99 ரன் அடித்து விட்டு 100வது ரன் எடுத்த கிரிக்கெட் காணொளியை பெட்ரோல் விலையுடன் ஒப்பிட்டு கருத்து பதிவிட்டு வருகின்றனர். சிலர் கோஹ்லி செஞ்சுரி அடிப்பார் என எதிர்பார்த்தோம், ஆனால் இங்கு பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்துள்ளது என பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - chennai,இந்தியா
17-பிப்-202116:23:25 IST Report Abuse
Raja ஆத்மநிற்பர் பாரத் திட்டத்தில் இந்தியாவிலேயே எரிபொருள் தயாரிக்கலாமே.
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
17-பிப்-202110:07:59 IST Report Abuse
ramesh பெட்ரோல் டீசல் காஸ் விலை ஏற்றம் ஓன்று போதும் தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சிக்கு முடிவுரை எழுத.என்னதான் ஸ்டாலின் அறிவிப்பை காப்பி அடித்து தள்ளுபடி அறிவித்தாலும் வாய்ப்பே இல்லை
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-பிப்-202109:48:27 IST Report Abuse
Bhaskaran 2014 காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை அடிக்கடி ஏற்றுகிறார்கள் என்று நக்கல் செய்தவர் மோடி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X