கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அவதூறு வீடியோ பதிவேற்றிய வழக்கு: கர்ணனுக்கு ஜாமின் மறுப்பு

Updated : பிப் 16, 2021 | Added : பிப் 16, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை : சமூக வலைதளங்களில், அவதுாறாக வீடியோ பதிவுகளை வெளியிட்ட வழக்கில், முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு ஜாமின் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து, கோல்கட்டா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்றவர் சி.எஸ்.கர்ணன். உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினர், பெண் வழக்கறிஞர்கள்,
அவதூறு வீடியோ  வழக்கு:   கர்ணன், ஜாமின் மறுப்பு

சென்னை : சமூக வலைதளங்களில், அவதுாறாக வீடியோ பதிவுகளை வெளியிட்ட வழக்கில், முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு ஜாமின் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து, கோல்கட்டா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்றவர் சி.எஸ்.கர்ணன். உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினர், பெண் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்களை பற்றி, அவதுாறாக பேசி, சமூக வலைதளங்களில் வீடியோ பதிவுகளை வெளியிட்டார்.


latest tamil news




இவருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப் பதிந்து 2020 டிசம்பரில் கைது செய்தனர். ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார்.


மனுவை விசாரித்த, நீதிபதி வி.பாரதிதாசன் பிறப்பித்த உத்தரவு:வீடியோ பதிவுகளை பரிசீலித்த போது , செய்வது தவறு என தெரிந்தும், கர்ணன் வேண்டுமென்றே செய்திருப்பதற்கு, ஆரம்ப முகாந்திரம் உள்ளது.தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டு, மனு தாக்கல் செய்ய, மனுதாரர் விரும்பவில்லை.

ஆனால் ஜாமின் கோரியுள்ளார். ஜாமினில் விடுவித்தால், இதே செயலை, எதிர்காலத்தில் செய்ய மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மனுதாரரை, ஜாமினில் விடுவித்தால், புலன் விசாரணையில் குறுக்கிடலாம். எனவே ஜாமின் மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
17-பிப்-202111:02:43 IST Report Abuse
Nellai tamilan இதே முறையை கொலைகாரர்களுக்கும் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கும் ஜாமின் தரும் போது பின்பற்றினால் நலம்
Rate this:
Cancel
Kalai Arashan - Quito,ஈக்வடார்
17-பிப்-202109:47:14 IST Report Abuse
Kalai Arashan நீதிக்கு தண்டனை இது என்ன சோதனை. வேதனையளிக்கும் கர்ணனுக்கு ஜாமின் மறுப்பு. நீ தமிழன் என்பதாலா?
Rate this:
சத்தியம் - Bangalore,இந்தியா
17-பிப்-202114:35:40 IST Report Abuse
சத்தியம்தமிழன் என்றால் கொம்பு முளைத்தவனா ....தவறு யார் செய்தாலும் தவறுதான்........
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
17-பிப்-202109:34:03 IST Report Abuse
Sampath Kumar அவர் சொன்னது உண்மைதான் .இவரு போல பிரசாந்த் போசன் சொன்னபோது நீதிமன்றம் விக்கித்து நின்றது கேவலம் கடிசியில் தண்டனை ஒரு ரூபாய்?? என்ன ஒரு நீதி ? நீதி செய்து விட்டது இந்த நாட்டிற்கு சுதந்திரம் இனி தேவை இல்லை .தட்டி ஏடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகிவிட்டான் இறைவா என் நாட்டை காப்பாற்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X