பொது செய்தி

இந்தியா

எல்லையில் படைகள் வாபஸ்: சீன ராணுவம் திடீர் சுறுசுறுப்பு

Updated : பிப் 18, 2021 | Added : பிப் 16, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
லடாக்: சீன ராணுவம், லடாக் எல்லையிலிருந்து, எதிர்பார்த்ததை விட, மிகவும் வேகமாக படைகளை வாபஸ் பெறத் துவங்கியுள்ளது.லடாக் எல்லையில், சீன ராணுவம், கடந்த ஜூன் மாதம் அத்துமீறி நடத்திய தாக்குதலால் கடும் பதற்றம் ஏற்பட்டது. எல்லையில், இரு நாடுகளும் படைகளை குவித்தன. பதற்றத்தை குறைக்க, இரு நாடுகளின் ராணுவ கமாண்டர்கள் அளவில் நடந்த ஒன்பது சுற்று பேச்சின் முடிவில், எல்லையிலிருந்து
எல்லை, படைகள் வாபஸ், சீன ராணுவம், சுறுசுறுப்பு

லடாக்: சீன ராணுவம், லடாக் எல்லையிலிருந்து, எதிர்பார்த்ததை விட, மிகவும் வேகமாக படைகளை வாபஸ் பெறத் துவங்கியுள்ளது.

லடாக் எல்லையில், சீன ராணுவம், கடந்த ஜூன் மாதம் அத்துமீறி நடத்திய தாக்குதலால் கடும் பதற்றம் ஏற்பட்டது. எல்லையில், இரு நாடுகளும் படைகளை குவித்தன. பதற்றத்தை குறைக்க, இரு நாடுகளின் ராணுவ கமாண்டர்கள் அளவில் நடந்த ஒன்பது சுற்று பேச்சின் முடிவில், எல்லையிலிருந்து படைகளை விலக்கிக் கொள்ள, இரு நாடுகளும் சம்மதித்தன.இதன்படி, இரு நாடுகளும்,எல்லையிலிருந்து படைகளை விலக்கி வருகின்றன. இந்தியாவை விட, சீனா அதிவேகமாக படைகளை வாபஸ் பெறுகிறது. 200க்கும் அதிகமான பீரங்கிகள், 100க்கும் அதிகமான கனரக வாகனங்களையும், சீன ராணுவம் வாபஸ் பெற்றள்ளது.

பாங்காங் ஏரி பகுதியில், பல்வேறு மலைமுகடுகள் உள்ளன. இதில், மூன்றாம் எண் முகடுக்கு, இந்திய படைகள் திரும்பி வருகின்றன. நான்காம் எண் முகடு வரை, சீன ராணுவம் ஊடுருவியிருந்தது. இப்போது, எட்டாம் எண் முகடுக்கு, சீன படைகள் வேகமாக திரும்புகின்றன. மூன்று - எட்டாம் எண் முகடுகளுக்கு இடையே உள்ள பகுதியில், இரு நாட்டு ராணுவமும், எந்த ரோந்து பணியும் மேற்கொள்ள கூடாது என, பேச்சில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த, 24 மணி நேரத்துக்குள், பாங்காங் ஏரியின் வடக்கு பகுதியிலிருந்து, சீன படைகள் அனைத்தும் வாபஸ் பெற்றுவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.படைகள் முழுமையாக வாபஸ் பெற்ற பின், இரு நாடுகளுக்கு இடையே, ராணுவ கமாண்டர்கள் அளவில், அடுத்த கட்ட பேச்சு நடக்க உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
17-பிப்-202110:54:08 IST Report Abuse
நக்கீரன் சீனா விவகாரத்தில் இதுவரையில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மிகவும் சிறப்பாக செய்யப்பட்டு வந்துள்ளது. மோடிஜி தலைமையிலான அரசைப்போன்று ஒரு வலிமையான அரசை சீனாக்காரன் இதுவரையில் இந்தியாவில் பார்த்திருக்க மாட்டான். இந்தியா தொடர்ந்து தன்னுடைய ராஜ தந்திர நடவடிக்கைகளை வைத்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையில் ஒரு நிரந்தர உறுப்பு நாடு அந்தஸ்தை பெற வேண்டும். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
17-பிப்-202110:18:13 IST Report Abuse
சம்பத் குமார் 1). சீனா புத்திசாலிதனமாக செயல்படுகிறது.2). அதாவது கொரோனாவினால் உலகம் முழுவதும் அந்நாட்டிற்கு கெட்ட பெயர்.3). இரண்டாவது என்னதான் தற்பொழுது ஒரு short term போர் நடந்தாலும் இழப்புகள் அதிகமாக சீனா பக்கம்தான் இருக்கும். ஏனெனில் இமயமலை முகடுகளில் நம் வீரர்கள் நன்கு போர் செய்ய பழகியுள்ளனர். 4). வெற்றி தோல்வி என்பது இல்லாமல் போக வாய்ப்பு தெரிகிறது.5). உள்நாட்டில் மக்கள் அதிருப்தி மற்றும் தைவான் பிரச்சினை முதலிடம்.6). வழக்கம்போல பாகிஸ்தானின் ஏமாற்று வேலை அதாவது சில்க் சாலை வசதிகளில் சீனா எந்த பண உதவியும் செய்யவில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டது. 7). முக்கியமாக ஜோ பிடன் நிர்வாகம் இந்தியாவுடன் நெருக்கமாக சென்றுவிட கூடாது என்பதில் சீனா குறியாக உள்ளது.8). படைகளை விலக்கிவிட்டால் நாம் சீனாவின் செயல்பாடுகளில் அதிகம் கவனம் செலுத்த மாட்டோம் மற்றும் அமெரிக்கா மற்றும் இதர நாடுகள் இராணுவ ரீதியாக பெரிதாக இந்தியாவுடன் நட்பு ஏற்படுத்த வழியில்லை என்பதே அவர்களது நோக்கம். நன்றி ஐயா.
Rate this:
Cancel
Modikumar - West Mambalam,இந்தியா
17-பிப்-202110:10:22 IST Report Abuse
Modikumar சீனா ஒரு நரி என்பது நம் பிரதமருக்கும் தெரியும் நம் ராணுவ உளவு துறைக்கும் தெரியும். சீனா படைவிலக்களில் ஒரு உள்குத்து உள்ளது என்பது எல்லோரும் அறிவர். திரைமறைவில் உலகளவில் இந்தியாவுக்கு சாதகமாக பல காய்களை பிரதமர் டீம் நகர்த்திக் கொண்டுள்ளது. தக்க சமயத்தில் ஒருக்கல்லில் இரு மாங்காய் அடிப்பார் நம் பிரதமர். விரைவில் pok மற்றும் cok இந்திய ஆலுகையின் கீழ் வரும். ஜைஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X