கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு? அரசு செவிமடுக்க ஐகோர்ட் உத்தரவு

Updated : பிப் 18, 2021 | Added : பிப் 16, 2021 | கருத்துகள் (8+ 33)
Share
Advertisement
மதுரை : 'படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த, தமிழக அரசுக்கு, நீதிமன்றம் வேண்டுகோள் விடுக்கிறது. நீதிமன்றத்தின் குரலுக்கு தமிழக அரசு செவி மடுக்குமா?' என, உயர் நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியது.மதுரை, நரசிங்கம் தட்டான்குளத்தைச் சேர்ந்த தாஹா முகமது தாக்கல் செய்த மனு: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எதிரே, ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது.இடையூறுஅருகே,
தமிழகம், பூரண மதுவிலக்கு, அரசு, ஐகோர்ட், உத்தரவு, உயர் நீதிமன்ற கிளை

மதுரை : 'படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த, தமிழக அரசுக்கு, நீதிமன்றம் வேண்டுகோள் விடுக்கிறது. நீதிமன்றத்தின் குரலுக்கு தமிழக அரசு செவி மடுக்குமா?' என, உயர் நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியது.

மதுரை, நரசிங்கம் தட்டான்குளத்தைச் சேர்ந்த தாஹா முகமது தாக்கல் செய்த மனு: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எதிரே, ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது.


இடையூறு


அருகே, தட்டான்குளம் மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. 'குடி'மகன்களால் மாணவியர் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும்.'குடி'மகன்கள் மது குடித்து, காலி பாட்டில்களை பள்ளி வளாகத்திற்குள் வீசி எறிகின்றனர். மதுரை கலெக்டருக்கு மனு அனுப்பினோம். கடையை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு, குறிப்பிட்டார்.

நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.

டாஸ்மாக் தரப்பு, 'பிப்., 28க்குள் கடை வேறு இடத்திற்கு மாற்றப்படும்' என உத்தரவாதம் அளித்தது.

இதை பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இதுபோல் டாஸ்மாக்கிற்கு எதிராக, இந்நீதிமன்றத்திற்கு பல்வேறு பொதுநல வழக்குகள் வருகின்றன. குடியிருப்பு, பள்ளி, கல்லுாரி, வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள டாஸ்மாக்கை அகற்றக் கோரிய பல்வேறு மனுக்கள், டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் உட்பட, பல்வேறு அதிகாரிகளிடம் நிலுவையில் உள்ளன. அந்த ஆட்சேபனைகளை பரிசீலித்து, பிப்., 28க்குள் தீர்வு காண வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து, மேலாண்மை இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.


மது ஆறு


பள்ளி அல்லது குடியிருப்பு பகுதி அருகே வைப்பதற்கு, டாஸ்மாக் கடையானது, புத்தகக் கடையோ, மளிகைக் கடையோ அல்ல. நாட்டில் மது அதிகம் நுகரும் மாநிலங்களில், கர்நாடகாவிற்கு அடுத்து, தமிழகம் உள்ளது. தமிழக ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ, மூலை முடுக்குகளில் எல்லாம் மது ஆறாக ஓடுகிறது. மதுவால், இந்தியாவில் ஆண்டுக்கு, 2.6 லட்சம் பேர் இறக்கின்றனர் என உலக சுகாதார நிறுவனம், 2018ல் அறிக்கை வெளியிட்டது. மதுவால் சமூகத்தில் நடக்கும் செயல்களை பார்த்துக் கொண்டு, நீதிமன்றம் பாராமுகமாக இருக்க முடியாது.

பல்வேறு தீமைகளுக்கு ஆணிவேர் மதுதான். பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக தினமும் நடக்கும் எண்ணற்ற குற்றங்கள் மற்றும் பல குடும்பங்கள் நொறுங்கிப் போக காரணம் மது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரைத் துடைத்து பாதுகாக்கும் வகையில், படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த, தமிழக அரசுக்கு இந்நீதிமன்றம் வேண்டுகோள் விடுக்கிறது. இதை இந்நீதிமன்றத்தின் வேண்டுகோளாக மட்டுமன்றி, பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவிகள், குழந்தைகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்தின் குரலாக பார்க்க வேண்டும். இந்நீதிமன்றத்தின் குரலுக்கு தமிழக அரசு செவி மடுக்குமா? இவ்வாறு கேள்வி எழுப்பி, வழக்கை பைசல் செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (8+ 33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
magan arumugam - london,யுனைடெட் கிங்டம்
17-பிப்-202123:31:21 IST Report Abuse
magan arumugam First close all liquor factory's
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
17-பிப்-202122:51:19 IST Report Abuse
Vijay D Ratnam அநேகமாக தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு என்பது எடப்பாடி பழனிச்சாமி தேர்தலுக்கு முன் திமுகவுக்கு மீண்டும் தலைதூக்க முடியாத அளவுக்கு கொடுக்கும் ஃபைனல் பன்ச் ஆக இருக்கலாம். தமிழ்நாட்டில் ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு மட்டுமல்ல சாராய ஆலை அதிபர்கள் அனைவரும் திமுகவை சேர்ந்தவர்கள்தானே. ஒரு சாராய ஆலை மிடாஸ் மன்னார்குடி சசிகலா குடும்பத்துக்கு சொந்தமானது. மார்ச் முதல் வாரம் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கொள்ளையடித்து வசமாக சிக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு வெளியாகி திமுக கதறிக்கொண்டு நிற்கும் நேரத்தில் முதல்வர் எதிரணியின் கஜானாவுக்கு டைம்பாம் வைத்து அதிர்ச்சியில் உறைய வைக்கலாம் என்றே தோன்றுகிறது.
Rate this:
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
17-பிப்-202111:53:17 IST Report Abuse
Ramalingam Shanmugam ஒன்றும் வேண்டாம் ஆதார் கார்டுக்கு விற்பனை செய்யுங்க ஒருவருக்கு ஒரு quarter என்று தானாக குறையும் அரசுக்கு மனம் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X