அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: ஸ்டாலினுக்கு ஏதாவது தெரியுமா?

Updated : பிப் 17, 2021 | Added : பிப் 17, 2021 | கருத்துகள் (63)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்: என்.எஸ்.காளிராஜன், சிவகாசியிலிருந்து எழுதுகிறார்: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது தங்கை கனிமொழி ஆகியோர், புதிய வேளாண் சட்டம் மற்றும் மத்திய அரசின் பட்ஜெட் பற்றி, தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.அவர்கள் இருவரும் புதிய வேளாண் சட்டம் மற்றும் பட்ஜெட் பற்றி முழுமையாக படித்து,
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


என்.எஸ்.காளிராஜன், சிவகாசியிலிருந்து எழுதுகிறார்: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது தங்கை கனிமொழி ஆகியோர், புதிய வேளாண் சட்டம் மற்றும் மத்திய அரசின் பட்ஜெட் பற்றி, தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.அவர்கள் இருவரும் புதிய வேளாண் சட்டம் மற்றும் பட்ஜெட் பற்றி முழுமையாக படித்து, அதில் உள்ள நிறை - குறைகளை சரியாக தெரிந்து கொண்டனரா என்பது, தெரியவில்லை.

பட்ஜெட் வெளியேறி, அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், 'இது மக்களுக்கு கொடுத்த லாலிபாப்' என, ஸ்டாலின் அறிக்கை விடுகிறார். முதல் முறையாக, முழுவதும் டிஜிட்டல் வடிவில், காகித பயன்பாடு இல்லாமல், இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொருளாதார நிபுணர்களே, இந்த பட்ஜெட் குறித்து முழுமையாக படித்து, அது குறித்து விமர்சனம் செய்ய, குறைந்தது, 12 மணி நேரமாவது ஆகும்.துண்டு சீட்டு இல்லாமல், சுயமாக, 10 வரி கூட பேச தெரியாத ஸ்டாலின், அந்த பட்ஜெட்டை ஒரு மணி நேரத்திற்குள் படித்து, விமர்சித்து அறிக்கை விடுகிறார்.


latest tamil newsஇவருக்கு ஓராண்டு கால அவகாசம் கொடுத்தாலும், இவரால் புதிய பட்ஜெட் பற்றி தன்னிச்சையாக விமர்சிக்க முடியாது. புதிய வேளாண் சட்டத்தின் சாதக, பாதகங்களை பற்றி இவரால் விவாதிக்க முடியாது. அது பற்றி, அவருக்கு ஏதும் தெரியாது என்பதே உண்மை. இவர் தான், தமிழகத்தின் அடுத்த முதல்வர் என, கூறிக் கொள்கிறார். அவரின் வெற்றிக்காக தங்கையும், மகனும் மட்டும் ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்கின்றனர்; கட்சியின் மூத்த தலைவர்கள் அவர்களுக்கு பணிவிடை செய்கின்றனர்.

இதையெல்லாம் பார்க்கும்போது, நமக்கு சிரிப்பு தான் வருகிறது.பட்ஜெட் மற்றும் புதிய வேளாண் சட்டம் குறித்து, பொருளாதார நிபுணருடனோ அல்லது எதிர்க்கட்சி தலைவருடனோ நேரடியாக விவாதிக்க, ஸ்டாலின் தயாரா?அப்போது நாங்கள் நம்புகிறோம், முதல்வர் ஆவதற்கான தகுதி ஸ்டாலினிடம் இருக்கிறதென்று!

Advertisement
வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Truth Triumph - Coimbatore,இந்தியா
17-பிப்-202123:26:08 IST Report Abuse
Truth Triumph எங்கள் தலைவர் 2.0 என்பது நீங்கள் அறிந்து அவர் தம் பெருமையை உணர்ந்து பின் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் .. உங்கள் போன் நம்பர் சொன்னால் உங்கள் ஆதார் நம்பர் சொல்லிவிடுவார்.. பட்ஜெட் வேளாண் சட்டம் எல்லாம் சர்வ சாதாரணம் ..அவர் மெமரி பல மில்லியன் டே ரா பைட் ... துண்டு சீட்டு உங்கள் கவனத்தை திசை திருப்ப 2.0 கையாளும் தந்திரம் ....
Rate this:
Cancel
G.Kirubakaran - Doha,கத்தார்
17-பிப்-202123:13:16 IST Report Abuse
G.Kirubakaran இருக்கும் சொத்தை காப்பாத்தவாவது ஆட்சிக்கு வர வேண்டிய கட்டாயம், திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் .இல்லையெனில் கொள்ளையடித்த எல்லா சொத்துக்களும் அரசாங்கத்தின் கையில் சென்று விடும்
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
17-பிப்-202121:22:42 IST Report Abuse
Narayanan obsoletely Satlin doesn't have any knowledge. This is confirmed by Vaiko . We have some credit to vaiko . He d that stalin doesn't know anything and he is an waste guy. stalin can clear all the petition by putting into the fire. Immediately the solution can be arrived easily like their promise during last loksabha election.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X