பிரதமர் மோடிக்கு எதிராக, 'டுவிட்டரில்' குரல் கொடுத்த, நடிகை ஓவியாவை, பிரசாரத்துக்கு வளைத்துள்ளது தி.மு.க.,
'களவாணி' படம் வாயிலாக, நடிகை ஆனவர், ஓவியா. கேரளாவை சேர்ந்த இவர், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியால் பிரபலமானார். ஆனால், அவர் தேர்ந்தெடுத்த படங்கள் ஓடாததால் ஓரங்கப்பட்டார். சென்னை வந்த பிரதமருக்கு எதிராக, 'டுவிட்டர்' தளத்தில், சின்னதாக ஒரு பதிவு போட்டார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது; பணமும் கிடைத்தது.
தி.மு.க.,வுக்கு தேர்தல் ஆலோசனை கூறும், 'ஐபேக்' நிறுவனம், ஓவியாவை, ஒரு கோடி சம்பளம் கொடுத்து தி.மு.க., பிரசாரகியாக அமர்த்தியுள்ளது. 'இது டிரெய்லர் தான்... படமே இனிமே தான் பாக்க போறீங்க...' என, தனது பாணியில், சொல்கிறாராம் ஓவியா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE