தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

இது நானா சேர்த்த கூட்டம்! அ.தி.மு.க.வில் ஒரு கலாட்டா

Updated : பிப் 17, 2021 | Added : பிப் 17, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
தலைவர்கள் வரும்போது, வரலாறு காணாத கூட்டம் வரவேற்பு கொடுக்க வேண்டும் என்பது, எல்லா கட்சியிலும் எழுதப்படாத விதி. ஆனால், இப்போது எந்த தலைவருக்கும் தானாய் கூடும் கூட்டம் என்பது, கட்சிக்காரர்களோடு முடிந்து விடுகிறது. அதிலேயே பலர், பாதியில் நழுவி விடுகின்றனர். அன்றாட பிழைப்புக்காக உழைத்து பிழைக்கும் பொது மக்கள் இந்த திசைக்கே வருவதில்லை.இதனால் தான், ஆள் பிடிக்கும்
admk, aiadmk, அதிமுக

தலைவர்கள் வரும்போது, வரலாறு காணாத கூட்டம் வரவேற்பு கொடுக்க வேண்டும் என்பது, எல்லா கட்சியிலும் எழுதப்படாத விதி. ஆனால், இப்போது எந்த தலைவருக்கும் தானாய் கூடும் கூட்டம் என்பது, கட்சிக்காரர்களோடு முடிந்து விடுகிறது. அதிலேயே பலர், பாதியில் நழுவி விடுகின்றனர். அன்றாட பிழைப்புக்காக உழைத்து பிழைக்கும் பொது மக்கள் இந்த திசைக்கே வருவதில்லை.

இதனால் தான், ஆள் பிடிக்கும் வழக்கம் தோன்றியது. அந்தந்த கட்சியின் பண பலத்துக்கு ஏற்ப, ஆட்களை திரட்டி காட்டுகின்றனர். கூட்டணி கட்சிக்காக ஆள் சேர்க்கும் கட்டாயம், பெரிய கட்சிகளுக்கு கிடையாது. ஆனால், கூட்டணி கட்சி மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தால், மேட்டரே வேறுதானே. அப்படித்தான், பிரதமரை வரவேற்க பெரும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது, அ.தி.மு.க., மேலிடம். பத்தாயிரம் பேரை திரட்டி வர, தென் சென்னை தெற்கு மாவட்ட செயலர் அசோக்கிற்கு உத்தரவிட்டது. அதற்கான செலவுக்காக, 20 லட்சம் பெற்றுக் கொண்டார் அவர்.


latest tamil news


தலைவர்கள் வரும்போது, வரலாறு காணாத கூட்டம் வரவேற்பு கொடுக்க வேண்டும் என்பது எல்லா கட்சியிலும் எழுதப்படாத விதி. அப்படித்தான், பிரதமரை வரவேற்க பெரும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது அதிமுக மேலிடம். பத்தாயிரம் பேரை திரட்டி வர வேண்டும் என்று தென் சென்னை தெற்கு மாவட்ட செயலர் அசோக்கிற்கு உத்தரவிடப்பட்டது. அதற்கான செலவுக்காக 20 லட்சம் பெற்று கொண்டார் அவர். அந்த தொகையில் பாதியை, அசோக் அமுக்கி விட்டார் என்று இபிஎஸ், ஓபிஎஸ்க்கு புகார் போனது. அனுப்பியவர், வேளச்சேரி அதிமுக செயலாளர் மூர்த்தி. தலைக்கு 200 ரூபாய் கொடுத்து ஐந்தாயிரம் பேரை மட்டும் அழைத்து வந்துவிட்டு, மீதி பணத்தை ஆட்டைய போட்டுவிட்டார் என்பது மூர்த்தி வாதம். அசோக், மூர்த்தி இருவருக்கும் ஏழாம் பொருத்தம். துணை முதல்வர் ஆசியால் அசோக் பதவி பெற்றவர். மூர்த்திக்கு மைத்ரேயன், விருகை பாபு போன்றவர்களின் ஆதரவு இருக்கிறது. புகார் விவகாரத்தை, திமுகவின் ஐடி டீம் வரைலாக்கியதால், அதிமுக மேலிடம் டென்ஷன் ஆகிவிட்டது. மூர்த்திக்கு நெருக்கடி முற்றியது. 'என்னோட லெட்டர் பேடை திருடி, யாரோ லெட்டர் எழுதி, என் கையெழுத்த போட்டு மேல அனுப்பிருக்காங்க. போலீஸில் புகார் குடுக்க போறேன்' என்று ஒரே போடாக போட்டார் மூர்த்தி. அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே. அசோக்காவது, 20ல் பத்தை செலவு செய்திருக்கிறார். தென்சென்னை வடக்கு மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில், அதுவும் கிடையாதாம்!


ஆனால், அந்த தொகையில் பாதியை அமுக்கி விட்டார் அசோக் என, இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்.க்கு புகார் போனது. அனுப்பியவர், வேளச்சேரி பகுதி அ.தி.மு.க., செயலர் மூர்த்தி. 'ஒரு மணி நேரம் நிக்கணும். தலைக்கு 200 ரூபா குடுத்து அஞ்சாயிரம் பேர மட்டும் வரவச்சு, மீதிய ஸ்வாஹா பண்ணிட்டார்' என்பது, மூர்த்தி வாதம்.

அசோக், மூர்த்தி இருவருக்கும் ஏழாம் பொருத்தம். துணை முதல்வர் ஆசியால் பதவி பெற்றவராம் அசோக். மூர்த்திக்கு மைத்ரேயன், விருகை பாபு போன்றவர்கள்தான் சப்போட். விவகாரம், தி.மு.க., 'ஐ.டி., டீமால்' வைரல் ஆக்கப்பட்டதால், மேலிடம் டென்ஷன் ஆகிவிட்டது. மூர்த்திக்கு நெருக்கடி.

“என்னோட லெட்டர் பேடை திருடி, யாரோ லெட்டர் எழுதி, என் கையெழுத்த போட்டு மேல அனுப்பிருக்காங்க. புகார் குடுக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்ட்டு இருக்கேன்,” என்றார், நமது நிருபர் போன் போட்டபோது. அரசியலில் இதெல்லாம் சகஜம். அசோக்காவது, 20 ல் பத்தை செலவு செய்திருக்கிறார். தென்சென்னை வடக்கு மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில், அதுவும் கிடையாதாம்!

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
17-பிப்-202118:25:27 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இந்த மாதிரி சந்தர்ப்பத்தை விட்டு விட்டால், தொண்டர்கள் சம்பாதிப்பது எப்படி?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-பிப்-202117:42:13 IST Report Abuse
J.V. Iyer மற்ற நாடுகளில் தெருவை சுத்தம் செய்பவர்கள் சுத்தம் செய்யும் முன், சுத்தம் செய்தபின் கைப்பேசியில் தேதி, நேரத்தோடு போட்டோ எடுத்து அனுப்பவேண்டும். அதுப்போல கணக்கை சுத்தமாக வைத்திருந்தால், போட்டோவுடம் நிரூபிக்கலாமே?
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-பிப்-202119:42:08 IST Report Abuse
தமிழவேல் உண்மை, மோடிஜி சுத்தம் செய்யும் போது மட்டும்தான் போட்டோ அனுப்புகின்றார்....
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
18-பிப்-202101:17:21 IST Report Abuse
தல புராணம்ஆளை வெச்சி குப்பையை கொட்டி அதை பென்ஸ் காரில் வந்து இறங்கி ... ஹூம் அந்த ஒத்தை வேலையை கூட இப்போ நம்ம கவர்னர் செய்யிறதில்லை.....
Rate this:
Cancel
Senthil Kumar - chennai,இந்தியா
17-பிப்-202116:48:14 IST Report Abuse
Senthil Kumar இங்கே ஒரு அடிமை கைகூலிகூட கூவ வரமாட்டான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X