தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

அமைச்சர்களை எதிர்த்து போட்டியிட மா.செ.,க்களுக்கு ஸ்டாலின் 'கிடுக்கி'

Updated : பிப் 17, 2021 | Added : பிப் 17, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
கருணாநிதியும், ஜெயலலிதாவும் இருந்த வரை, அவர்களின் கட்சியினர் எதிரும் புதிருமாக இருந்தனர். இருவரும் இறந்த பிறகு, அந்த நிலை மாறி விட்டது. இ.பி.எஸ்., பொறுப்பேற்ற பின், தி.மு.க.,வின் மாவட்ட செயலர்களும், எம்.எல்.ஏ.,க்களும் அமைச்சர்களுடன் இணக்கமான உறவை வளர்த்துக் கொண்டனர்.அதன் பலனாக, அரசு பணிகளுக்கான டெண்டர்கள், எம் - சாண்ட் குவாரிகள், டாஸ்மாக் மதுபான பார்கள் உள்ளிட்ட பணம்
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்

கருணாநிதியும், ஜெயலலிதாவும் இருந்த வரை, அவர்களின் கட்சியினர் எதிரும் புதிருமாக இருந்தனர். இருவரும் இறந்த பிறகு, அந்த நிலை மாறி விட்டது. இ.பி.எஸ்., பொறுப்பேற்ற பின், தி.மு.க.,வின் மாவட்ட செயலர்களும், எம்.எல்.ஏ.,க்களும் அமைச்சர்களுடன் இணக்கமான உறவை வளர்த்துக் கொண்டனர்.

அதன் பலனாக, அரசு பணிகளுக்கான டெண்டர்கள், எம் - சாண்ட் குவாரிகள், டாஸ்மாக் மதுபான பார்கள் உள்ளிட்ட பணம் கொழிக்கும் தொழில்களை செய்யும் அதிர்ஷ்டம் கிடைத்தது, திமுக நிர்வாகிகளுக்கு. அநேகமாக, இது எல்லா மாவட்டத்திலும் மக்களுக்கு தெரிந்த ரகசியம். சட்டசபையில், நேரடியாகவே அமைச்சர்களிடம், கோரிக்கை வைத்து காரியம் சாதித்து வந்தனர். ஆட்சியில் இல்லாததால், வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் உடன்பிறப்புக்கள், இ.பி.எஸ் ஆட்சியில் காசு பார்க்கட்டுமே... என்று அறிவாலயமும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.


latest tamil news


கருணாநிதியும், ஜெயலலிதாவும் இருந்த வரை, அவர்களின் கட்சியினர் எதிரும் புதிருமாக இருந்தனர். இருவரும் இறந்த பிறகு, அந்த நிலை மாறி விட்டது. திமுகவின் மாவட்ட செயலாளர்களும், எம்எல்ஏக்களும் அமைச்சர்களுடன் இணக்கமான உறவை வளர்த்து கொண்டனர். அதன் பலனாக, அரசு பணிகளுக்கான டெண்டர்கள், எம். சாண்ட் குவாரிகள், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்ட பணம் கொழிக்கும் தொழில்களை செய்யும் அதிர்ஷ்டம் திமுக நிர்வாகிகளுக்கு கிடைத்தது. சட்டசபையில், நேரடியாகவே அமைச்சர்களை சந்தித்து, கோரிக்கை வைத்து காரியம் சாதித்து வந்தனர். ஆட்சியில் இல்லாததால், வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் உடன்பிறப்புக்கள், நாலு காசு பார்க்கட்டுமே என்று அறிவாலயமும் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.


ஆனால், தேர்தல் நேரத்திலும் அவர்களின், அ.தி.மு.க., விசுவாசம் தொடர்வது, ஸ்டாலினுக்கு அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது. தன்னை கடுமையாக விமர்சனம் செய்யும் அமைச்சர்களுக்கு, கட்சி நிர்வாகிகளோ மாவட்ட செயலாளர்களோ பதிலடி கொடுப்பதில்லை என்பதில் செம கோபம். அமைச்சர்களுக்கு எதிராக,பலவீனமான ஆட்களை வேட்பாளராக நிறுத்த, சில மாவட்ட செயலர்கள் முடிவு செய்திருந்த விஷயமும் அவர் காதுக்கு எட்டியது. இதற்கு, 'செக்' வைக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அமைச்சரை எதிர்த்து, அந்தந்த மாவட்ட தி.மு.க., செயலர் போட்டியிட வேண்டும் என, கூறியுள்ளார். இதை கேட்ட மாவட்ட செயலர்கள், ஸ்தம்பித்து நிற்கின்றனர். மறு பக்கம், பல அமைச்சர்களும் இந்த தகவல் தெரிந்து பீதியில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Radj, Delhi - New Delhi,இந்தியா
17-பிப்-202121:35:08 IST Report Abuse
Radj, Delhi சூப்பர் தலைவா... அப்படி செய்தால் தான் திமுக அதிக இடங்களில் வெற்றி பெரும். வாழ்த்துக்கள் தலைவா....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-பிப்-202117:43:50 IST Report Abuse
J.V. Iyer பணத்திற்காக எதையும் செய்வார்கள் இந்த கொள்ளைக்காரர்கள்.
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
17-பிப்-202116:27:53 IST Report Abuse
Rengaraj ஸ்லீப்பர் செல்கள், உடன்பிறப்புகள் என்ற போர்வையில் தி.மு.க.வில் கூட இருக்கிறார்கள் போலும். பணம் பாதாளம் வரைக்கும் பாய்ந்து கொண்டு இருக்கும் என்று சொல்வார்கள் தலைமை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X