அரசியல் செய்தி

தமிழ்நாடு

'டீ குடித்து விட்டு இரவு முழுதும் பணியாற்றுபவன் திமுக.,காரன்'

Updated : பிப் 17, 2021 | Added : பிப் 17, 2021 | கருத்துகள் (133)
Share
Advertisement
வேலுார்: ''டீ குடித்து விட்டு, இரவு முழுதும் பணியாற்றுபவன், தி.மு.க.,காரன்,'' என, தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் பேசினார்.வேலுார் மாவட்டம், காட்பாடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காந்தி நகர், சேண்பாக்கம் பகுதி ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம், காட்பாடியில் நேற்று நடந்தது. இதில், துரைமுருகன் பேசியதாவது: பல தேர்தல்களை பார்த்த நான், இரவு, பகல் பாராமல் தொகுதியை சுற்றி,
Durai Murugan, DMK, TN election

வேலுார்: ''டீ குடித்து விட்டு, இரவு முழுதும் பணியாற்றுபவன், தி.மு.க.,காரன்,'' என, தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் பேசினார்

.வேலுார் மாவட்டம், காட்பாடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காந்தி நகர், சேண்பாக்கம் பகுதி ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம், காட்பாடியில் நேற்று நடந்தது. இதில், துரைமுருகன் பேசியதாவது: பல தேர்தல்களை பார்த்த நான், இரவு, பகல் பாராமல் தொகுதியை சுற்றி, தேர்தல் பணிகளில் ஈடுபடுவேன். இத்தேர்தல் அப்படி அல்ல. கட்சியின் பொதுச் செயலராக உள்ளதால், தென் மாவட்டங்களில் தேர்தல் பயணம் செய்ய வேண்டியுள்ளது.


latest tamil news



இதனால், ஒவ்வொருவரும் துரைமுருகனாக மாறி, பணியாற்றுவதாக ஒப்புதல் அளித்துள்ளீர்கள். பூத் கமிட்டியினர், 100 ஓட்டுக்கு ஒருவர் பொறுப்பேற்க வேண்டும். ஒரு டீ குடித்து விட்டு, இரவு முழுதும் வேலை செய்பவன், தி.மு.க.,காரன் மட்டும் தான். பண பலம், படை பலத்தை ஆளும் கட்சியினர் காட்டலாம். அதை தவிடுபொடியாக்கும் வல்லமை, தி.மு.க.,வுக்கு உள்ளது. தி.மு.க., வெற்றி பெறுவதை, எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (133)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
20-பிப்-202105:51:58 IST Report Abuse
NicoleThomson வீட்டில் டி குடிப்பது தான் செலவு ,மற்றபடி ஓட்டல்களில் திருடி தின்ற பிரியாணி , பூமி பந்தில் நீர் திருடி அதனை விற்று காசு பார்த்து அதில் சரக்கு , ஷோக்கு பேர்வழிங்கடா நீங்க
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
18-பிப்-202117:19:38 IST Report Abuse
Girija தகர பெட்டியுடன் சென்னைக்கு பஞ்சம் பிழைக்க வந்தவன் கோடிகளில் புரளும் திமுக pothu selayalar
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
18-பிப்-202112:43:55 IST Report Abuse
Manian அவ்ளோ சின்ன வூடுங்களா தொரை ? இல்லை ஒங்களுக்காக ராவெல்லம் நிலத்தடி நீர் திருடினவங்களைப் பத்தி சொல்லுதிகளா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X