அரசியல் செய்தி

தமிழ்நாடு

இன்னும் நிறைய இருக்கு: விஜயபாஸ்கர் தகவல்

Added : பிப் 17, 2021
Share
Advertisement
புதுக்கோட்டை:''பயிர்க்கடன் ரத்து போன்று, பல அறிவிப்புகள் இன்னும் வர உள்ளன,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.புதுக்கோட்டை அருகே ஏ.மாத்துாரில், நேற்று நடந்த மினி கிளினிக் திறப்பு விழாவில், அவர் பேசியதாவது:தமிழகத்திலேயே இரண்டாவது அரசு பல் மருத்துவமனை, புதுக்கோட்டையில் துவங்கப்பட உள்ளது. 100 கோடி ரூபாய் மதிப்பில், புதுக்கோட்டையில், 'ஸ்மார்ட்



புதுக்கோட்டை:''பயிர்க்கடன் ரத்து போன்று, பல அறிவிப்புகள் இன்னும் வர உள்ளன,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை அருகே ஏ.மாத்துாரில், நேற்று நடந்த மினி கிளினிக் திறப்பு விழாவில், அவர் பேசியதாவது:தமிழகத்திலேயே இரண்டாவது அரசு பல் மருத்துவமனை, புதுக்கோட்டையில் துவங்கப்பட உள்ளது. 100 கோடி ரூபாய் மதிப்பில், புதுக்கோட்டையில், 'ஸ்மார்ட் சிட்டி' என அழைக்கப்படும் துணைக்கோள் நகரம் அமைக்க, பூமி பூஜை விழா விரைவில் நடத்தப்பட உள்ளது.கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி ஆகிய ஏழு மாவட்ட விவசாயிகளின், 100 ஆண்டு கோரிக்கையான காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு, அடிக்கல் நாட்டு விழா, வரும், 21ம் தேதி விராலிமலை அருகே நடக்கிறது. முதல்வர் இ.பி.எஸ்., அடிக்கல் நாட்டுகிறார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கூட்டுறவு வங்கியில், அவர்கள் வாங்கிய கடன்களை முதல்வர் ரத்து செய்துள்ளார். இதுபோன்று பல அறிவிப்புகள் இன்னும் வர உள்ளன. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X