டில்லியில் ராகுலுடன் சித்து ஆலோசனை

Added : பிப் 17, 2021
Share
Advertisement
டில்லியில் காங்., முன்னாள் தேசிய தலைவர் ராகுலை, நேற்று சந்தித்த, கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, அரசியல் நிலவரம் குறித்து, ஆலோசனை நடத்தினார்.பெங்களூரு, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து, விமானத்தில் நேற்று காலை, டில்லி சென்ற சித்தராமையா, மதியத்துக்கு பின் ராகுலை சந்தித்தார்.கர்நாடகாவின் அரசியல் நிலவரம், இட ஒதுக்கீடு கேட்டு, வெவ்வேறு

டில்லியில் காங்., முன்னாள் தேசிய தலைவர் ராகுலை, நேற்று சந்தித்த, கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, அரசியல் நிலவரம் குறித்து, ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து, விமானத்தில் நேற்று காலை, டில்லி சென்ற சித்தராமையா, மதியத்துக்கு பின் ராகுலை சந்தித்தார்.கர்நாடகாவின் அரசியல் நிலவரம், இட ஒதுக்கீடு கேட்டு, வெவ்வேறு சமுதாயங்கள் நடத்தும் போராட்டம் என, பல விஷயங்கள் குறித்தும், அவரிடம் விவரித்தார்.

இதே வேளையில், கர்நாடகாவின் அண்டை மாநிலங்களான கேரளா, தமிழகம் உட்பட, வெவ்வேறு மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இப்போதிருந்தே, தயாராக வேண்டும்.அம்மாநிலங்களில் வெற்றி பெறுவதன் மூலம், தோல்வியால் துவண்டுள்ள காங்கிரசுக்கு, புத்துணர்ச்சி ஊட்ட வேண்டும் என,ராகுல் ஆலோசனை கூறியுள்ளார்.பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு, அமல்படுத்திய விவசாய திட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் 77 நாட்களாக போராட்டம் நடத்துகின்றனர். இதை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை.

விவசாயிகளுக்கு ஆதரவாக, காங்கிரஸ் இன்னும் வலுவாக குரல் கொடுக்க வேண்டும் என, சித்தராமையா கூறியதாக தெரிகிறது.கர்நாடகாவில், பா.ஜ., ஆட்சி மீது, மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த, காங்., திட்டமிடுகிறது. ஆனால் கட்சியின் சில தலைவர்கள், முட்டுக்கட்டையாக உள்ளனர் எனவும் ராகுலிடம் தகவல்கள் பரிமாறி கொண்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.

-நமது சிறப்பு நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X