கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியமாக உள்ளது: ராகுல்

Updated : பிப் 17, 2021 | Added : பிப் 17, 2021 | கருத்துகள் (33) | |
Advertisement
புதுடில்லி: கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு அதீத நம்பிக்கையுடன் அலட்சியமாக செயல்படுவதாக காங்., எம்.பி., ராகுல், குற்றம்சாட்டியுள்ளார்.உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் முதல் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்கிடையே பிரிட்டன், தென் ஆப்ரிக்கா,
Government, Grossly Negligent, Over Confident, Covid-19, Rahul Gandhi, கொரோனா, மத்திய அரசு, அதீத நம்பிக்கை, அலட்சியம், ராகுல்

புதுடில்லி: கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு அதீத நம்பிக்கையுடன் அலட்சியமாக செயல்படுவதாக காங்., எம்.பி., ராகுல், குற்றம்சாட்டியுள்ளார்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் முதல் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்கிடையே பிரிட்டன், தென் ஆப்ரிக்கா, பிரேசிலில் கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று மக்களிடையே அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த உருமாறிய கொரோனாவால் இந்தியர்களும் பாதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.


latest tamil news


இது குறித்து ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரல் பல்ராம் பார்க்கவா கூறுகையில், 'பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் உருமாறிய வைரஸ் பாதித்த 4 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கிருந்து, இந்தியா திரும்பி வந்துள்ளனர். அவர்களுடன் பயணம் செய்த மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், பிரேசிலில் உருமாறிய கொரோனாவினால் ஒருவர் பாதிக்கப்பட்டது, பிப்., முதல் வாரத்தில் கண்டறியப்பட்டது. அவரும் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்,' எனக்கூறினார்.


latest tamil news




பிரேசில், தென் ஆப்ரிக்காவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், இந்தியாவில் ஊடுருவியதாக வெளியான இந்த செய்தியை காங்., எம்.பி., ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, 'கொரோனா விவகாரத்தில் இந்திய அரசு அலட்சியமாகவும், அதீத நம்பிக்கையிலும் உள்ளது. கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை,' எனப் பதிவிட்டுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-பிப்-202117:33:18 IST Report Abuse
J.V. Iyer கூரில்லாமல் பேசுவதில் தத்தி பாப்பு ராகுல்ஜிக்கு முதலிடம். எல்லாம் தெரிந்தவர் என்று நினைப்பு. இந்தியாவில் அரசு எப்படி செயல்படுகிறது என்றே இவருக்கு தெரியாதா? இவ்வளவு மக்கா இவர்?
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
17-பிப்-202116:36:29 IST Report Abuse
Rengaraj ராகுல் மைண்ட் வாய்ஸ் - ""என்னது தடுப்பூசி.. கண்டுபிடிச்சாச்சா? ரெண்டாவது டோஸும் போட்டாச்சா சொல்லவே இல்லை நான் பாட்டுக்கு லாக் டவுன் நிலைமையை நினைச்சு பார்த்து பேசிட்டேன் """"
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
17-பிப்-202116:06:10 IST Report Abuse
Loganathaiyyan பப்பு என்ன சொல்ல வருகின்றார் என்றால் அந்த கோவிட் எதிர்ப்பு ஊசி மருந்து கமிஷன் எனக்கு கொடுக்காததால் " கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியமாக உள்ளது"
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X