பொது செய்தி

இந்தியா

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயிகள்: டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : பிப் 17, 2021 | Added : பிப் 17, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நெட்டிசன்கள் #FarmersMakeIndia என்னும் ஹேஸ்டேக்கை டுவிட்டரில் டிரெண்டாக்கியுள்ளனர்.மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் 80 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் கடும் குளிர் உட்பட பல்வேறு
FarmersMakeIndia, FarmersProtests, Twitter Trend, விவசாயிகள், போராட்டம், ஆதரவு, டுவிட்டர், டிரெண்டிங்

புதுடில்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நெட்டிசன்கள் #FarmersMakeIndia என்னும் ஹேஸ்டேக்கை டுவிட்டரில் டிரெண்டாக்கியுள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் 80 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் கடும் குளிர் உட்பட பல்வேறு காரணங்களால் இதுவரை 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 11 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனையடுத்து குடியரசு தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது ஏற்பட்ட வன்முறைக்கு பிறகு, அரசுடன் பேச்சுவார்த்தை தடைப்பட்டது.


latest tamil news


சமீபத்தில் பார்லி.,யில் பேசிய பிரதமர் மோடி, பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக அறிவித்தார். இதற்குப் பதிலளித்த விவசாயச் சங்கங்கள், ''அரசு தேதியையும் நேரத்தையும் அறிவித்தால் பேச்சுவார்த்தை நடத்த இப்போதும் தயார்' எனக் கூறியது. அதேபோல், வேளாண் சட்டங்களை 18 மாதங்கள் வரை நிறுத்தி வைக்கத் தாயாராக உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், சட்டங்களை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என விவசாயச் சங்கங்கள் அறிவித்தன.


latest tamil news


இந்நிலையில், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். விவசாயிகள் தான் நமது நாட்டின் முதுகெலும்பு என்றும் அதனை காக்க வேண்டும் எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர், 'விவசாயிகள் இல்லையேல் உணவில்லை' என்றும், சிலர், 'விவசாயிகளின் உரிமைகள் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்' என்றும், சிலர், 'விவசாயிகள் நமது நாட்டின் வேர் போன்றவர்கள், அவர்களின் உரிமைகளை பறிப்பது வேர்களை வெட்டுவதற்கு சமம்' எனவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால், டுவிட்டரில் #FarmersMakeIndia என்னும் ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
18-பிப்-202104:55:58 IST Report Abuse
தல புராணம் அப்புறம் கூ விலே என்ன டிரெண்டிங்.. மோடி வாழ்கவா?
Rate this:
Cancel
Sam Rajarajan - Erode,இந்தியா
18-பிப்-202104:48:38 IST Report Abuse
Sam Rajarajan மத்திய அரசின் ஆணவத்தை காட்டுகிறது
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
18-பிப்-202103:25:25 IST Report Abuse
M  Ramachandran வெளிநாட்டு சக்திகளுக்கு வூக்கம் அளிப்பவர்கள் நம்நாட்டுக்கு மக்களுக்கும் எத்தகைய துரோகம் செய்கிறார்கள். துரோகத்தை மன்னிக்க கூடாது.விவசாயிகள் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்திலும் உள்ளார்கள் பஞ்சாபியரும் அதன் பக்கத்திலுள்ள மாநிலங்கள் மாட்டு மல்ல. சமீப காலமாக எதிர் காட்சிகள் அயல் நாட்டுடன் ( நம் முண்ணேற்றத்தய் விரும்பாத நாடுகள் ) சேர்ந்து அரசிலுக்காக செய்வது பச்சை துரோகம். மக்களுக்கு இது புரியவேண்டும். நாடு நாட்டு ஒற்றுமை முக்கியம். இத்தகைய போக்கு உள்ளவர்களை அகற்றவேண்டியது கட்டாயம். நாட்டை துண்டாடி அதில் தங்கள் நலம் காண விளைவது மிக்க மோசமான செயல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X