தி.மு.க.,வை மக்கள் மறந்துவிட்டனர்: முதல்வர் பழனிசாமி பிரசாரம்

Updated : பிப் 17, 2021 | Added : பிப் 17, 2021 | கருத்துகள் (30) | |
Advertisement
தூத்துக்குடி: ஸ்டாலின் மக்களை ஏமாற்றி நாடகம் ஆடுவது செல்லுபடியாகாது, நாட்டு மக்களை பார்க்காத கட்சி திமுக, நாட்டு மக்களை மறந்ததன் காரணமாக நாட்டு மக்கள் இன்று திமுகவை மறந்துவிட்டனர் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தமிழக முதல்வர் பழனிச்சாமி திறந்த வேனில் நின்றபடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது அவர் பேசியதாவது:
திமுக, முதல்வர் பழனிசாமி, முதல்வர் இபிஎஸ்,  மக்கள், அதிமுக, அ.தி.மு.க.,

தூத்துக்குடி: ஸ்டாலின் மக்களை ஏமாற்றி நாடகம் ஆடுவது செல்லுபடியாகாது, நாட்டு மக்களை பார்க்காத கட்சி திமுக, நாட்டு மக்களை மறந்ததன் காரணமாக நாட்டு மக்கள் இன்று திமுகவை மறந்துவிட்டனர் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தமிழக முதல்வர் பழனிச்சாமி திறந்த வேனில் நின்றபடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக கோட்டை. விவசாயி என்று நான் சொன்னால் ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது. விவசாயி, விவசாயி என்று தான் சொல்ல முடியும். திமுகவிற்கு பெட்டி வாங்கியே பழக்கம். அதனால் தான் திமுக தலைவர் ஸ்டாலின் தன்னோடு பெரிய பெட்டியினை கொண்டு செல்கிறார். விவசாயிகளைப் பாதுகாக்க கூடிய அரசு ஜெயலலிதா அரசு. விவசாயம் வளர வேண்டும் என்பதற்காக அரசு பாடுபட்டு வருகிறது. வருங்காலத்தில் வீடு இல்லாத மக்களுக்கு அரசே நிலம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கும்.


latest tamil news




ஸ்டாலின் மக்களை ஏமாற்றி நாடகம் ஆடுவது செல்லுபடியாகாது. நாட்டு மக்களை பார்க்காத கட்சி திமுக. நாட்டு மக்களை மறந்ததன் காரணமாக, நாட்டு மக்கள் இன்று திமுகவை மறந்துவிட்டனர். தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொண்டதன் காரணமாக இந்த பருவ மழையில் அனைத்து ஏரிகளும் நிரம்பி உள்ளது. ஸ்டாலின் பொய்யான தகவல்களை சொல்லி இந்த தேர்தலில் வெற்றி பெறலாம் என்று கனவு காண்கிறார். ஒருபோதும் கனவு பலிக்காது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருந்தது. ஆட்சியில் இல்லாத இப்போது அடாவடிதனத்தில் ஈடுபடுகிறார்கள் . அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்ரீவைகுண்டத்தில் மற்றொரு இடத்தில், முதல்வர் பழனிசாமி பேசுகையில், என்னுடைய தொழில் விவசாயம். அதைத்தான் நான் சொல்லி வருகிறேன். ஆனால் அதனை ஸ்டாலின் மாற்றி சொல்கிறார். ஸ்டாலின் வேண்டுமென்றே அரசை குறை கூறி வருகிறார். விவசாயிகள் விவசாய தொழிலாளிகள் ஆகியோர் பஞ்சத்தைப் போக்க கூடியவர்கள். விவசாய தொழில் பிரதான தொழில். அது வளர வேண்டும் என்பதற்காக தான் குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். வறட்சியால், மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அதற்கான கடனை தான் நாங்கள் தள்ளுபடி செய்கிறோம். அதில் என்ன தவறு. முதல்வரை விஷக்கிருமி என்று ஸ்டாலின் கூறுகிறார்.

அதிமுக அரசு எம்எல்ஏ.,க்கள் அமைச்சர்கள் ஆகியோர் மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்று அதற்கு தீர்வு கண்டு வருகிறார்கள். 9,70,000 மனுக்கள் அதிமுக சார்பில் வாங்கப்பட்டது. அதில் 5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கிடைத்தது. கொரோனா தொற்று காலத்தில் அதிமுக அரசு மக்களைக் காத்தது. கொரோனா காலத்தில் ஆயிரம் வழங்கியது அதிமுக அரசு. தை பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்காக ரூ.2500 பொங்கல் பரிசாக வழங்கியது. கிராமத்தில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் விவசாயத் தொழிலாளிகளுக்கு கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக கட்சி.

ஏரிகள் பொதுமக்கள் பங்களிப்புடன் தூர்வாரப்படுகிறது. வண்டல் மண் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பருவமழை பெய்ததால் அனைத்து குளங்களும் நிரம்பி உள்ளது. மக்களின் வாழ்க்கை தரம் உயர அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படுகிறது. அதற்காக தமிழக அரசு விருது பெற்றுள்ளது. நீட் தேர்வில் இந்தாண்டு மட்டும் 435 பேர் மருத்துவராக உள்ளனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பெரியதாழையில் 55 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் சாத்தான்குளம் பகுதியில் உயர்மட்டப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் பகுதில் 6 அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளன.

திமுக ஆட்சியில் ஒன்னும் கிடையாது. தண்ணீர் வீணாவதைத் தடுக்க தாமிரபரணி ஆற்றில் ஆழ்வார் திருநகரி பகுதியில் தடுப்பணை அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் இருந்த மின் தடையை மாற்றி தற்போது மின் மிகை மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோது திமுக அராஜகத்தில் ஈடுபடுகிறது. ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. எனவே அனைவரும் அதிமுகவிற்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
18-பிப்-202110:24:06 IST Report Abuse
S.P. Barucha இந்தியாவின் இரண்டாவது ஜாலியன் வாலாபாகை மறக்கமுடியுமா ?
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
18-பிப்-202103:30:05 IST Report Abuse
மதுரை விருமாண்டி பண்றது எல்லாமே லஞ்ச ஊழல் களவாணித்தனம்..
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
18-பிப்-202103:27:55 IST Report Abuse
மதுரை விருமாண்டி அடிமை அதிமுகவை மறக்கல்லை.. அது செஞ்ச, செய்கிற ஊழலை, பொள்ளாச்சியில் செஞ்ச செயல்களை, தமிழ்நாட்டை தாரை வார்த்ததை மறக்கல்லை ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X