திமுக தான் எங்களின் பிரதான எதிரி: பா.ஜ., முருகன்

Updated : பிப் 17, 2021 | Added : பிப் 17, 2021 | கருத்துகள் (51) | |
Advertisement
கோவை: ஊழல்களில் கரைப்படிந்த தி.மு.க., தான் எங்களுடைய பிரதான எதிரி என பா.ஜ., மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.கோவையில் தமிழக பா.ஜ., தலைவர் முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி சென்னை வருகையை தொடர்ந்து கோவைக்கு 25ம் தேதி வருகிறார். தொடர்ந்து தமிழகத்திற்கு பா.ஜ., முக்கிய தலைவர்கள் வருகின்றனர். கோவையில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர்
BJP, Murugan, Coimbatore, DMK, பாஜக, பாஜ, முருகன், கோவை, திமுக, எதிரி

கோவை: ஊழல்களில் கரைப்படிந்த தி.மு.க., தான் எங்களுடைய பிரதான எதிரி என பா.ஜ., மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கோவையில் தமிழக பா.ஜ., தலைவர் முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி சென்னை வருகையை தொடர்ந்து கோவைக்கு 25ம் தேதி வருகிறார். தொடர்ந்து தமிழகத்திற்கு பா.ஜ., முக்கிய தலைவர்கள் வருகின்றனர். கோவையில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார். பெட்ரோல் டீசல் விலை உயர்வு, ஓட்டு சதவீதத்தை பாதிக்காது. விலை உயர்வு தற்காலிகமானது. விலை குறைப்பு செய்ய மாநில அரசுகளின் வரிகளை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


latest tamil news


பா.ஜ., பூரண மதுவிலக்கை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தேவேந்திர குல வேளாளர்களின் பட்டியலின வெளியேற்றம் என்ற கோரிக்கை பரீசிலனையில் உள்ளது. புதுச்சேரியில் நாராயணசாமி மீது அதிருப்தி இருப்பதால் எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்கின்றனர். கிரண்பேடி நீக்கம் குறித்தோ, புதுச்சேரி விஷயத்தைப் பற்றியோ நான் பேசுவது நன்றாக இருக்காது. ஊழல்களில் கரைப்படிந்த தி.மு.க., தான் எங்களுடைய பிரதான எதிரி. அதனால் அதை மையமாக வைத்தே எங்களது பிரசாரம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
18-பிப்-202110:49:10 IST Report Abuse
Ellamman பதவி மட்டும் இல்லையென்றால் இவர் நிலை பரிதாபத்திற்கு உரியததாகிவிடும்.
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
18-பிப்-202110:29:31 IST Report Abuse
Ellamman இது தலைமை பதவிக்கு வந்து....நமீதா... ஜீவஜோதி... குசுபு போன்ற மாபெரும் ஆளுமைகளை சேர்த்து கட்சி வளர்த்த விதம் புல்லரிக்கிறது... கட்ட பஞ்சாயத்து ரௌடிகளை விழா எடுத்து கட்சியில் சேர்த்து மேலும் பெருமை சேர்த்துக்கொண்டது.... இது வந்து யார் எதிரி என்று கூறக்கேட்பது தான் காலக்கொடுமை பேசாமல் காயத்ரி ரகுராமை தலைமை பதவியில் அமர்த்துங்கள்... நன்றாக "சேவை" செய்வார்...
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
18-பிப்-202110:25:52 IST Report Abuse
Ellamman ஒரு பகுதி செயலாளராக கூட இருந்திராத ஆசாமியை மாநில பொறுப்பில் அமரவைத்தால் எப்படிப் பட்ட பின்விளைவுகள் ஏற்படும்... எப்படிப்பட்ட உளறல்கள் வெளிவரும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமான மட்டுமே இந்த எல் போர்டால் ஆகமுடியும்... பதவி போன பின்னால் ஒரு கோஷ்டி கூட இந்த உருப்படி பின்னால் ஏற்படாது....ஆனால் இதற்க்கு வாய் மட்டும் முழநீளம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X