எனது தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டேன்: ராகுல்

Updated : பிப் 17, 2021 | Added : பிப் 17, 2021 | கருத்துகள் (82)
Share
Advertisement
புதுச்சேரி: எனது தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டேன். அவர்கள் மீது எந்த கோபமும் இல்லை என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.ஒரு நாள் பயணமாக புதுச்சேரி வந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, ராஜிவ் கொலை தொடர்பாக மாணவிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு ராகுல் அளித்த பதில் : எனக்கு யார் மீதும் எந்த கோபமோ அல்லது
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுச்சேரி: எனது தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டேன். அவர்கள் மீது எந்த கோபமும் இல்லை என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் பயணமாக புதுச்சேரி வந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, ராஜிவ் கொலை தொடர்பாக மாணவிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ராகுல் அளித்த பதில் : எனக்கு யார் மீதும் எந்த கோபமோ அல்லது வெறுப்போ இல்லை. அவர்களை நான் மன்னித்து விட்டேன். நான் எனது தந்தையை இழந்து விட்டேன். அது எனக்கு மிகவும் கடினமான நேரம். எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது என தெரிவித்தார்.


latest tamil news




பின்னர் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:பல கலாசாரம் பல மொழிகளால் தான் இந்தியா பலமாக உள்ளதாக காங்கிரஸ் நம்புகிறது. கலாசாரம், பண்பாடு மாநில உரிமைகளை காங்கிரஸ் எப்போதும் பாதுகாக்கும். புதுச்சேரியை யாராவது சொந்தமாக்க விரும்பினால் அவர்கள் ஏமாந்து போவார்கள். புதுச்சேரிக்கு வெளியேஇருந்து வந்தவர்களுக்கு, மாநிலம் எப்போதும் சொந்தமாகாது. கடந்த 5 ஆண்டுகளாக புதுச்சேரி அரசை மோடி செயல்பட வில்லை.

நாட்டின் பிரதமராக இருக்கும் மோடிக்கு, புதுச்சேரி மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை. மத்திய அரசு கொடுத்த தைரியத்தினால் தான் கிரண்பேடி அதிகாரத்தை கையில் எடுத்தார். புதுச்சேரி மக்களை காப்பாற்ற தர்மயுத்தத்தில் ஈடுபட உள்ளேன். எங்களுக்கு தரும் ஓட்டு, புதுச்சேரி மக்களின் கனவுகளை நிறைவேற்றும். என்னை போன்ற மக்கள் பிரதிநிதிகளை பார்லிமென்டில் பேச அனுமதிப்பதில்லை. தமிழகத்தில் தமிழ் பேச அனுமதிப்பதில்லை. அரசை எதிர்த்து பேசினால், தீவிரவாதி என்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
19-பிப்-202116:04:38 IST Report Abuse
M S RAGHUNATHAN திரு E சுந்தரம். மிகச் சரியான பதிவு.
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
19-பிப்-202115:59:19 IST Report Abuse
M S RAGHUNATHAN இத்தனை காலம் இல்லாமல் இப்பொழுது என்ன அவசியம் மன்னிப்பதற்கு. அப்படி மன்னிப்பதாக இருந்தால் இவர் தனியே அந்த குற்றவாளிகளுக்கு கடிதம் எழுதி சிறைக்கு அனுப்பட்டும். பொது மேடையில் பேசுவது தவறு. இது இவரது அறிவிலித்தனத்தை தான் காட்டுகிறது. ஜெயின் கமிஷன் கூறியதை இவர் படித்தாரா ? "Needle of suspicion on DMK". எப்படி தி மு க உடன் கூட்டணி சேருகிறார் ? காங்கிரஸ் தலைவர்களுக்கு வெட்கம் மானம். சூடு. சொரணை கிடையாதா ?
Rate this:
Cancel
Sivak - Chennai,இந்தியா
18-பிப்-202113:05:34 IST Report Abuse
Sivak இவரு மன்னிச்சிட்டாருன்னா சட்டத்தை எல்லாம் தூரம் போட்டுட்டு கொலையாளிகளை விடுதலை பண்ணிடுவாங்களா? ஓட்டுக்காக உளரூம் பப்பு நம் நாட்டின் சாபக்கேடு ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X