சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : பிப் 17, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்பறக்கும் கார்அமெரிக்காவில் மணிக்கு 161 கி.மீ., வேகத்தில் செல்லும் உலகின் முதல் பறக்கும் காருக்கு, அந்நாட்டின் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எப்.ஏ.ஏ.,) அனுமதி வழங்கியுள்ளது. முதற்கட்டமாக விமானி, விமான பள்ளிகள் பயிற்சிக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. 2022க்குள் முழு அளவில் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 10 ஆயிரம் அடி உயரம் வரை

அறிவியல் ஆயிரம்
பறக்கும் கார்
அமெரிக்காவில் மணிக்கு 161 கி.மீ., வேகத்தில் செல்லும் உலகின் முதல் பறக்கும் காருக்கு, அந்நாட்டின் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எப்.ஏ.ஏ.,) அனுமதி வழங்கியுள்ளது. முதற்கட்டமாக விமானி, விமான பள்ளிகள் பயிற்சிக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. 2022க்குள் முழு அளவில் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 10 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும். இதன் இறக்கையின் நீளம் 27 அடி. இதன் இன்ஜின் 100 எச்.பி., திறன் கொண்டது. இது தொடர்ந்து 643 கி.மீ., துாரம் வரை பறக்கும் திறன் கொண்டது. இதன் எடை 590 கிலோ.
தகவல் சுரங்கம்
ஞானபீட விருது
இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருது ஞானபீட விருது. இது 1965 முதல் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. சாகித்ய அகாடமி விருதைப் போல அனைத்து மொழி எழுத்தாளர்களுக்கும் வழங்கப்படுவது இல்லை. ஏதேனும் ஒரு சிறந்த எழுத்தாளருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. முதன்முதலாக சங்கரா குருப் என்ற மலையாள எழுத்தாளர் 'ஓடக்குழல்' நாவலுக்காக இவ்விருதைப் பெற்றார். தமிழ் மொழி சார்பில் முதன்முதலாக 1975ல் அகிலனின் 'சித்திரப்பாவை'க்கு ஞானபீட விருது கிடைத்தது. பின் 2002ல் எழுத்தாளர் ஜெயகாந்தன் இவ்விருதை பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X