புது டில்லி: சர்ச்சை தீர்ப்பளித்த பெண் நீதிபதிக்கு காண்டம் அனுப்பி வைத்த சம்பவம் நடந்துள்ளது.
மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வரும் பெண் நீதிபதி புஷ்பா கனேதிவாலா (51) ஜன., 19 அன்று போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்தார். தோலோடு தோல் தொடர்பின்றி சிறுமியை சில்மிஷம் செய்வது போக்சோ சட்டப்படி குற்றமில்லை என தீர்ப்பளித்தார்,.
![]()
|
5 வயது சிறுமி பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மற்றொரு வழக்கை விசாரித்தவர், சிறுமியின் கையை பிடித்திருப்பதோ, பேண்ட் ஜிப் திறந்திருப்பதோ பாலியல் வன்முறை ஆகாது என கூறி குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுவித்தார்.
இந்த சர்ச்சை தீர்ப்புகளுக்கு கடும் கண்டனம் எழுந்தது. இவரது பதவிகாலத்தை குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. .இந்நிலையில் தேவஸ்ரீ திரிவேதி என்ற பெண், சர்ச்சைக்குரிய தீர்ப்பு அளித்த அந்த பெண் நீதிபதிக்கு 100-க்கும் மேற்பட்ட காண்டம்களை பார்சலில் அனுப்பி வைத்து தனது கண்டனத்தை தெரிவித்தார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement