எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

கிரண் பேடியை நீக்க என்ன காரணம்?

Updated : பிப் 18, 2021 | Added : பிப் 17, 2021 | கருத்துகள் (11+ 115)
Share
Advertisement
ஐந்து ஆண்டுகளாக புதுச்சேரி அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கவர்னர் கிரண் பேடி, திடீரென நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி உத்தரவு வரும் வரை, கிரணுக்கே அது தெரியாது. கடைசி நிமிடம் வரை அவர், அலுவலக வேலையில் மும்முரமாக இருந்தார்.கிரண் பல நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தார். அது மாநில அரசின் உரிமைகளில் குறுக்கிடுவதாக, முதல்வர் நாராயணசாமி நினைத்தார். இதில்,
கிரண் பேடி, புதுச்சேரி, கவர்னர், நீக்கம், நாராயணசாமி, நமச்சிவாயம்,

ஐந்து ஆண்டுகளாக புதுச்சேரி அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கவர்னர் கிரண் பேடி, திடீரென நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி உத்தரவு வரும் வரை, கிரணுக்கே அது தெரியாது. கடைசி நிமிடம் வரை அவர், அலுவலக வேலையில் மும்முரமாக இருந்தார்.

கிரண் பல நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தார். அது மாநில அரசின் உரிமைகளில் குறுக்கிடுவதாக, முதல்வர் நாராயணசாமி நினைத்தார். இதில், இருவருக்கும் மோதல் துவங்கியது. ரோட்டில் உட்கார்ந்து போராடும் அளவுக்கு நாராயணசாமி மனம் நொந்தார்.
ஏரி குளங்களை துார்வாரி, நீர்நிலைகளை பாதுகாப்பதில் கிரண் அக்கறை காட்டினார். பொது மக்களை நேரடியாக சந்தித்து, புகார் மனுக்கள் அளிக்க, கவர்னர் மாளிகையை திறந்து விட்டார்.

ஐந்து வருடமாக புதுச்சேரி அரசுக்கு சிம்ம சொப்பணமாக இருந்த கவர்னர் கிரண் பேடி, திடீரென நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி உத்தரவு வரும் வரை கிரணுக்கே அது தெரியாது. கடைசி நிமிடம் வரை அவர் அலுவலக வேலையில் மும்முரமாக இருந்தார்.  கிரண், பல நிர்வாக சீர் திருத்த நடவடிக்கைகளை எடுத்தார். அது மாநில அரசின் உரிமைகளில் குறுக்கிடுவதாக நினைத்தார் முதல்வர் நாராயணசாமி. இதில் இருவருக்கும் மோதல் தொடங்கியது. ரோட்டில் உட்கார்ந்து போராடும் அளவுக்கு நாராயணசாமி மனம் நொந்துபோனார். ஏரி குளங்களை தூர்வாரி, நீர்நிலைகளை பாதுகாப்பதில், கிரண் அக்கறை காட்டினார். பொதுமக்கள் நேரடியாக சந்தித்து, புகார் மனுக்கள் அளிக்க, கவர்னர் மாளிகையை திறந்து விட்டார். சிலர் இதற்காக அவரை பாராட்டினாலும், மறுபுறம்  அரசு மருத்துவ கல்லூரியில் இடஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு, காவலர் பணி நியமனம் போன்ற விஷயங்கள் நடக்காமல் தடுப்பதாக அரசு குற்றம் சாட்டியது. சனிப் பெயர்ச்சி அன்று கொரோனாவை சாக்கிட்டு பக்தர்களை தடுத்தார் என்று பாஜவினரே கொதித்தனர். ஒரு வழியாக, ஆட்சி காலம் முடியும் நேரத்தில், காங்கிரஸ் கோட்டையில் ஓட்டைகள் விழுந்தன. ஒவ்வொரு எம்எல்ஏவாக வெளியேறி பாஜவுக்கு தாவினர். அமைச்சராக செல்வாக்குடன் வலம் வந்த நமச்சிவாயம், பாஜவுக்கு போனபோது நாராயணசாமி ஆடிப்போனார். இவை எல்லாமே, கிரண் மூலம் மத்திய அரசும், பாஜவும் நடத்தும் தாக்குதல் என்று அவர் நம்பினார். எனவே, ஜனாதிபதியை சந்தித்து கிரண் மீது பெரிய புகார் பட்டியல் கொடுத்து, அவரை மாற்றுமாறு கோரிக்கை வைத்தார். பாஜவில் சேர்ந்த அவரது முன்னாள் சகா நமச்சிவாயமும் அதே யோசனையை உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும், பாஜ தலைவர் நட்டாவிடமும் வைத்தார் என்பது பலருக்கு தெரியாது. 'திகார் ஜெயில் கைதிகளை அடக்கி ஆண்ட ஞாபகத்தில், புதுவையிலும் ஒரு போலீஸ் அதிகாரி போல கிரண் நாட்டாமை செய்கிறார். இதனால் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்டார். அவரை வைத்துக் கொண்டே சட்டசபை தேர்தலை சந்தித்தால் பாஜவுக்கு அடி விழும்' என்பது நமச்சிவாயத்தின் வாதம். இதுதான், கிரண் நீக்கத்துக்கு காரணம் என்று சொல்கிறார்கள். ஆனால், ஐந்தாண்டுகள் அவர் சர்வ சுதந்திரமாக செயல்பட அனுமதித்த மத்திய அரசு, சடாரென ஒரே இரவில் அதிரடியாக அவரை நீக்கியது என்றால், அதற்கு வலுவான வேறு காரணம் இருக்க வேண்டும் என்கிறார்கள் விமர்சகர்கள். இல்லை என்றால், பதவிக்காலம் முடியும் வரை விட்டிருக்கலாம்; அல்லது வேறு மாநிலத்துக்கு மாற்றி இருக்கலாம். ஏதோ ஒரு வகையான கோபத்தின் எதிரொலிதான் இந்த தண்டனை என்று ஊகிக்கின்றனர். கர்வம் மிகுந்தவர் என்றாலும், கிரண் ஒரு நேர்மையான அதிகாரியாக பணிக்காலம் முடித்தவர். எனவே, தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த டில்லியில் தயாரிக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்த அவர் மறுத்திருக்கலாம். அதற்காக அழுத்தம் வந்தபோது தனக்கே உரிய பாணியில் எடுத்தெறிந்தும் பேசி இருக்கலாம். அதன் விளைவுதான் இந்த கல்தா என்கிறார்கள். அடுத்து வரும் நாட்களில் புதுவையில் நடக்கும் காட்சிகளை கவனித்தால் இந்த ஊகம் சரியானதா? அபத்தமானதா? என்பது தெரிந்து விடும்.


சிலர் இதற்காக அவரை பாராட்டினாலும், மறுபுறம், அரசு மருத்துவக் கல்லுாரியில் இடஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு, காவலர் பணி நியமனம் போன்ற விஷயங்கள் நடக்காமல் தடுப்பதாக, அரசு குற்றம் சாட்டியது. சனிப் பெயர்ச்சி அன்று கொரோனாவை சாக்கிட்டு, பக்தர்களை தடுத்தார் என்று, பா.ஜ.,வினரே கொதித்தனர்.

ஆட்சி காலம் முடியும் நேரத்தில், காங்கிரஸ் கோட்டையில் ஓட்டைகள் விழுந்தன. ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வாக வெளியேறி, பா.ஜ.,வுக்கு தாவினர். அமைச்சராக செல்வாக்குடன் வலம் வந்த நமச்சிவாயம், அப்படி போனபோது, நாராயணசாமி ஆடிப்போனார். இவை எல்லாமே, கிரண் மூலம் மத்திய அரசும், பாரதிய ஜனதாவும் நடத்தும் தாக்குதல் என, அவர் நம்பினார்.
எனவே, ஜனாதிபதியை சந்தித்து, கிரண் மீது பெரிய புகார் பட்டியல் கொடுத்து, அவரை மாற்ற கோரிக்கை வைத்தார்.

பா.ஜ.,வில் சேர்ந்த அவரது முன்னாள் சகா நமச்சிவாயமும், அதே யோசனையை உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும், பா.ஜ., தலைவர் நட்டாவிடமும் வைத்தார் என்பது பலருக்கு தெரியாது. 'திகார் ஜெயில் கைதிகளை அடக்கியாண்ட ஞாபகத்தில் புதுவை யிலும் ஒரு போலீஸ் அதிகாரி போல கிரண் நாட்டாமை செய் கிறார்; இதனால், மக்கள் மத்தியில் 'அன்பாப்புலர்' ஆகிவிட்டார். அவரை வைத்துக் கொண்டே சட்டசபை தேர்தலை சந்தித்தால், பா.ஜ.,வுக்கு அடி விழும்' என்பது, நமச்சிவாயத்தின் வாதம்.இதுதான், கிரண் நீக்கத்துக்கு காரணம் என, கூறப்படுகிறது.ஆனால், ஐந்தாண்டுகள் அவர் சர்வ சுதந்திரமாக செயல்பட அனுமதித்த மத்திய அரசு, சடாரென ஒரே இரவில் அதிரடியாக கிரண் பேடியை நீக்கியது என்றால், அதற்கு வலுவான வேறு காரணம் இருக்க வேண்டும் என்கின்றனர், விமர்சகர்கள். இல்லை என்றால், பதவிக்காலம் முடியும் வரை விட்டிருக்கலாம் அல்லது வேறு மாநிலத்துக்கு மாற்றி இருக்கலாம். ஏதோ ஒரு வகையான கோபத்தின் எதிரொலி தான் இந்த தண்டனை என்று ஊகிக்கின்றனர்.

கர்வம் மிகுந்தவர் என்றாலும், கிரண் ஒரு நேர்மையான அதிகாரியாக பணிக்காலம் முடித்தவர். எனவே, தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த, டில்லியில் தயாரிக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்த அவர் மறுத்திருக்கலாம். அதற்காக அழுத்தம் வந்தபோது, தனக்கே உரிய பாணியில் எடுத்தெறிந்தும் பேசி இருக்கலாம். அதன் விளைவு தான் இந்த, 'கல்தா' என்கின்றனர்.

அடுத்து வரும் நாட்களில், புதுவையில் நடக்கும் காட்சிகளை கவனித்தால், இந்த ஊகம் சரியானதா, அபத்தமானதா என்பது தெரிந்து விடும்.

Advertisement
வாசகர் கருத்து (11+ 115)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-பிப்-202112:11:02 IST Report Abuse
Malick Raja புதுவையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது.. ரெங்கசாமியே கானல் நீராகி போனார்.. நமச்சல் எல்லாம் கொஞ்ச நேரம்தான் இருக்கும் .. நாராயாணா மாறுதல் இருப்பது உறுதி ..
Rate this:
Cancel
Dawamani - Kajang,மலேஷியா
18-பிப்-202111:53:34 IST Report Abuse
Dawamani If India is to move forward and develop, it needs excellent civil service delivery. Presently, Indian civil service is corrupt to the core. Kiran Bedi will be the right person for re-engineering of Indian civil service
Rate this:
Cancel
P.ELAMARAN - riyadh,சவுதி அரேபியா
18-பிப்-202111:28:09 IST Report Abuse
P.ELAMARAN தைரியம் இருந்தால் கிரண்பேடியை புதுவை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பாருங்கள் ..உள்ளதும் போச்சே நமச் சிவாயா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X