தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

ஆதரவு 4; எதிர்ப்பு 14: குழப்பத்தில் கமல்

Updated : பிப் 19, 2021 | Added : பிப் 17, 2021 | கருத்துகள் (50)
Share
Advertisement
கூட்டணி செட் ஆகவில்லை என்பதால், 234ல் இருந்து 108க்கு இறங்கி வந்திருக்கிறார் கமல். அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தி, தமிழக அரசியலை புரட்டி போட நினைத்தவர், பாதிக்கும் கீழே விட்டுக் கொடுத்ததே பெரிய விஷயம். ஆனால், அவரது கட்சி நிர்வாகிகள் அதையும் பேராசை என, நினைக்கின்றனர்.'ப்ராக்டிகலா திங்' பண்ணுங்க தலைவரே.. போட்டியிடுறது பெரிசில்லை... ஜெயிக்கணும்... ஏதாவது கூட்டணில
Kamal, Kamal Haasan, MNM, TN election, கமல், கமல்ஹாசன்

கூட்டணி செட் ஆகவில்லை என்பதால், 234ல் இருந்து 108க்கு இறங்கி வந்திருக்கிறார் கமல். அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தி, தமிழக அரசியலை புரட்டி போட நினைத்தவர், பாதிக்கும் கீழே விட்டுக் கொடுத்ததே பெரிய விஷயம். ஆனால், அவரது கட்சி நிர்வாகிகள் அதையும் பேராசை என, நினைக்கின்றனர்.

'ப்ராக்டிகலா திங்' பண்ணுங்க தலைவரே.. போட்டியிடுறது பெரிசில்லை... ஜெயிக்கணும்... ஏதாவது கூட்டணில சேர்ந்து, 10 சீட் கிடைச்சா கூட, அஞ்சாறு அல்லது ஏழெட்டு தேத்திரலாம்... சட்டசபைல ஆஜர் ஆயிட்டா நல்ல ஆரம்பம்' என்கின்றனர். என்ன செய்யலாம் என்று கையை பிசைகிறார், உலக நாயகன்.

லோக்சபா தேர்தலுடன் நடந்த, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட, 18 தொகுதி இடைத்தேர்தலில், கூட்டணி அமைக்க முயன்று முடியாமல் போன காட்சிகள், கமல் மனக்கண்ணில் ப்ளாஷ்பேக் ஓடியிருக்க வேண்டும். விடாமுயற்சியின் பலனாக, இந்திய குடியரசு, வளரும் தமிழகம் என, இரண்டு கட்சிகளை சேர்த்தார். தோல்விக்கு பிறகு தான் தெரிந்தது, வளரும் தமிழகம் கட்சிக்கு, நிர்வாகிகள் கூட இல்லை என்கிற விஷயம். எனவே தான், இம்முறை ஜாக்கிரதையாக ப்ளஸ், மைனஸ் அலசுகிறார்.

கூட்டணி செட் ஆகவில்லை என்பதால், 234ல் இருந்து 108க்கு இறங்கி வந்திருக்கிறார் கமல். அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தி தமிழக அரசியலை புரட்டி போட நினைத்தவர், பாதிக்கும் கீழே விட்டுக் கொடுத்ததே பெரிய விஷயம். ஆனால், அவரது கட்சி நிர்வாகிகள் அதையும் பேராசை என்று நினைக்கின்றனர். ‛ப்ராக்டிகலா யோசிங்க பண்ணுங்க தலைவரே, போட்டியிடுறது பெரிசில்லை, ஜெயிக்கணும். ஏதாவது கூட்டணில சேர்ந்து, பத்து சீட் கிடைச்சா கூட, அஞ்சாறு அல்லது ஏழெட்டு தேத்திரலாம். சட்டசபைல ஆஜர் ஆயிட்டா நல்ல ஆரம்பம்' என்கின்றனர். என்ன செய்யலாம் என்று கையை பிசைந்துகொண்டு இருக்கிறார் நம்மவர். லோக்சபா தேர்தலுடன், 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தபோது கூட்டணிக்கு முயன்றார் கமல். விடாமுயற்சியின் பலனாக, இந்திய குடியரசு, வளரும் தமிழகம் என, இரண்டு கட்சிகளை சேர்த்தார். தோல்விக்கு பிறகுதான் தெரிந்தது, 'வளரும் தமிழகம்' கட்சிக்கு, நிர்வாகிகள் கூட இல்லை என்கிற விஷயம். எனவேதான், இந்தமுறை ஜாக்கிரதையாக ப்ளஸ், மைனஸ் அலசுகிறார். முதல் கட்ட பிரசாரத்தை முடித்தபோது அவர் உணர்ந்த முதல் விஷயம், கட்சி இன்னும் கிராமங்களுக்கு எட்டவில்லை என்பது. கூட்டணி என்ற வாகனத்தின் அவசியமும் புரிந்தது. ஆம் ஆத்மியின் கேஜ்ரிவால் மட்டும், நண்பனின் தவிப்பை உணர்ந்து உதவிக்கரம் நீட்டினார். அதன் விளைவுதான், 234 என்பதை அடித்து, 108 எழுதியது. தொகுதிகள் லிஸ்ட்டும் ரெடி. கமலை சுற்றி நிற்போர், 18 முக்கிய நிர்வாகிகள். அதில் துணை தலைவர் உள்ளிட்ட நால்வரை தவிர, 14 பேரும், 108க்கு எதிர்ப்பு. ‛பத்தோ, பதினைந்தோ; திமுகவோ, அதிமுகவோ எது கூப்பிட்டாலும் போய் விடலாம்' என்கின்றனர் கோரசாக. ‛ஊழல் திமுக; அதிமுகவை ஒழிக்கத்தான் அரசியலுக்கு வந்தேன்' என பேசிவிட்டு, இப்போது எந்த முகத்தோடு கழகங்களை சந்திப்பது என்று குழப்பத்தில் இருக்கிறாராம் உலக நாயகன்.

முதல் கட்ட பிரசாரத்தை முடித்தபோது அவர் உணர்ந்த முதல் விஷயம், கட்சி இன்னும் கிராமங்களுக்கு எட்டவில்லை என்பது. கூட்டணி என்ற வாகனத்தின் அவசியமும் புரிந்தது. ஆம்-ஆத்மி கெஜ்ரிவால் மட்டும், நண்பனின் தவிப்பை உணர்ந்து உதவிக்கரம் நீட்டினார்.

அதன் விளைவு தான், 234 என்பதை அடித்து, 108 எழுதியது. தொகுதிகள் லிஸ்ட்டும் ரெடி.கமலை சுற்றி நிற்போர், 18 முக்கிய நிர்வாகிகள். அதில் துணை தலைவர் உள்ளிட்ட நால்வரை தவிர, 14 பேரும், 108க்கு எதிர்ப்பு. 'பத்தோ, பதினைந்தோ... தி.மு.க.,வோ, அ.தி.முக.,வோ... எது கூப்பிட்டாலும் போய் விடலாம்' என்கின்றனர் கோரசாக..

'ஊழல் தி.மு.க., - அ.தி.மு.க.,வை ஒழிக்கத்தான் அரசியலுக்கு வந்தேன்' என கூறிவிட்டு, எந்த முகத்தோடு கழகங்களை சந்திப்பது என்பதில் அவருக்கு குழப்பம். 'நேற்று பேசியது நாற வாய்; இன்று பேசுவது வேற வாய்' என்று வைகை புயல் சொன்ன அரசியல் தத்துவம் தெரியாது போலும்!

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravikumar - MUSCAT,ஓமன்
24-பிப்-202115:51:27 IST Report Abuse
ravikumar இது எல்லாம் அரசியல சகஜம்
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
24-பிப்-202105:22:29 IST Report Abuse
Milirvan இனம் இனத்தோடே சேரும்' ங்கிறாப்புல டீம்கா கூட கூட்டு வச்சிடு கமாலு.. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா மக்களுக்கு.. இன்னா'ங்குற..?
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
23-பிப்-202117:01:38 IST Report Abuse
S.Ganesan சினிமாவுக்கு வந்த கூட்டத்தின் எதிர்பார்ப்பு , மனநிலை வேறு. ஒட்டு போடும் கூட்டத்தின் மனநிலை மற்றும் எதிர்பார்ப்பு வேறு என்று இவருக்கு எப்போது புரியும் ? சினிமாவுக்கு வருவோர் பொழுது போக்கிற்காக வருகிறார்கள். இவர் காதசிக்கு வருவோர் ஏதாவது ஆதாயம் தேடி வருகிறார்கள். டிக்கெட் வாங்கியவர்கள் எல்லாம் ஒட்டு போடும் அளவிற்கு இவர் எம்ஜிஆர் அல்ல.
Rate this:
Nisha Rathi - madurai தி.மு.க என் முதல் எதிரிதி.மு.கவை அழிப்பது எங்கள் நோக்கம் ,இந்தியா
24-பிப்-202110:33:17 IST Report Abuse
Nisha Rathiமுதலில் இந்த மனுஷன் ஒரு ஹிந்து விரோதி இந்து தெய்வங்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தும் இந்த மனுஷனை நம்பி எப்படி இந்து மக்கள் வோட்டு போடுவார்கள் இந்த ஆளு கிறிஸ்தவர்களை மட்டும் நம்பக்கூடியவன் தயவுசெய்து இவனை நம்பி வோட்டு போடாதீர்கள் நண்பர்களே...
Rate this:
periasamy - Doha,கத்தார்
25-பிப்-202116:15:08 IST Report Abuse
periasamyஏன் இப்படி மதம் மதம் மதம்பிடுச்சு அலையிறீங்கள் கொரோனாவில் எங்கே போச்சு உங்கள் மதமும் நம்பிக்கைகளும் மனிதர்கள்தானே சாதி மதம் பார்க்காமல் ஒருவருக்கு உதவினார்கள் நான் கால் நூற்றாண்டுக்கு மேலாக இஸ்லாமியர்கள் மட்டுமே வாழும் நாட்டில்தான் வாழ்கிறேன் இங்கே கூட மதப் பாகுபாடுகளை நான் உணர்த்து கிடையாது இத்துணை ஆண்டுகளில் விரல் விட்டு என்னும் அளவிலானவர்களே சந்தித்துள்ளேன். சாதி மதம் வன்மத்தை தூண்டாதீர்கள் அதனால் இழப்புகள்தானே ஒழிய எந்த பலனுமில்லை நம் முன்னோர்கள் வாழ்ந்ததை போல் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற நம்பிக்கையோடு மனிதம் தழைக்க செயல்படுங்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X