அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : காந்திக்கே 'டிபாசிட்' கிடைக்காது!

Updated : பிப் 18, 2021 | Added : பிப் 18, 2021 | கருத்துகள் (50)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இந்தக் காலத்தில் யாரும், தலைவரின் முகம் பார்த்து ஓட்டுப் போடுவதில்லை; அந்தந்த பகுதி நிர்வாகியின் செயல்பாட்டைப் பார்த்து தான், ஓட்ட போடுகின்றனர்' என, காங்கிரசைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இந்தக் காலத்தில் யாரும், தலைவரின் முகம் பார்த்து ஓட்டுப் போடுவதில்லை; அந்தந்த பகுதி நிர்வாகியின் செயல்பாட்டைப் பார்த்து தான், ஓட்ட போடுகின்றனர்' என, காங்கிரசைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரம் கண்டுபிடித்துள்ளார். ஆனால், சிதம்பரத்தின் கணிப்பு, ரொம்ப தப்பு!தி.மு.க.,வை உருவாக்கிய அண்ணாதுரை, நடிகராக இருந்த, எம்.ஜி.ஆரிடம் என்ன சொன்னார் தெரியுமா...latest tamil news'தம்பி ராமச்சந்திரா... உன்னிடம், நான் நிதியை எதிர்பார்க்கவில்லை. தேர்தல் பிரசாரத்தின் போது, உன் கவர்ச்சி நிறைந்த முகத்தைக் காட்டினால் போதும்; அதுவே, 30 லட்சம் ஓட்டுக்களை, தி.மு.க.,விற்கு பெற்றுத் தரும்' என்றார். தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த காமராஜர், 'நாங்கள் படுத்தபடியே, தேர்தலில் வெற்றி பெறுவோம்' என்றார். பாவம் காமராஜரும், காங்கிரசும் தோல்வி அடைந்தது தான் மிச்சம். கழுத்தில் ஆப்பரேஷன் செய்த நிலையில் இருந்த, எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை காட்டியே, 1967ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., மாபெரும் வெற்றி பெற்ற கதையை எல்லாம், ப.சிதம்பரம் மறந்து விட்டாரா என்ன?

எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றிக்கும், ஜெயலலிதா அரசியலில் நுழைந்ததற்கும், சினிமா செல்வாக்கு தானே காரணம்.கட்சி தலைவருக்கு இருக்கும் செல்வாக்கு தான், வேட்பாளரை வெற்றி பெற செய்கிறது. கட்சி வேட்பாளராக, குற்றவாளியை நிறுத்தினாலும், அவர் வெற்றி பெறுகிறாரே... எப்படி? வேட்பாளரின் நேர்மை, ஒழுக்கம் பார்த்து, மக்கள் ஓட்டு போடுவதில்லைஎன்பதால் தான்.ஒரு நடிகைக்கு கொடுத்த ஆதரவை, நம் மக்கள், அறிவுஜீவிகளுக்கு கொடுத்ததே இல்லை. 'ஒரு தொகுதியில் காந்தியும், கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமியும் போட்டியிட்டால், காந்தி மகானுக்கு, டிபாசிட் கூட கிடைக்காது' என, அன்றே அடித்துச் சொன்னார், 'கல்கண்டு' ஆசிரியர் தமிழ் வாணன்.


latest tamil newsராமநாதபுரம் தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட சண்முக ராஜேஸ்வர சேதுபதி மன்னர், சாதாரண, தி.மு.க., வேட்பாளரிடம் தோற்றார். காமராஜர், தன் சொந்த தொகுதியான விருதுநகரில், ஒரு மாணவரிடம் தோல்வியைத் தழுவினார். அண்ணாதுரை காஞ்சிபுரத்தில், ஒரு தொழிலதிபரிடம் தோற்றார். மூதறிஞர் ராஜாஜி, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. அயோக்கியர் எல்லாம் அரசியலுக்கு வந்த பின், வேட்பாளர் தரம் பார்த்து ஓட்டு போடுவதில்லை. அதை இப்படியும் கூறலாம்... மக்கள், தரம் பார்த்து ஓட்டு போடாததால், அயோக்கியர் எல்லாம் வேட்பாளராக களம் இறங்குகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-பிப்-202119:52:17 IST Report Abuse
தமிழவேல் பல நாடுகளில், முதலில் அதிபரின் தேர்தல் நடைபெறுகின்றது. மொத்த மக்களும் அதிபரை தேர்தெடுக்கின்றார்கள். இதனால், ஆள்,கட்சி பார்த்து தேர்ந்தெடுக்கப் படுகின்றார். அதன் பின் நெருக்கத்தில் பார்லி தேர்தல் நடத்தப படுகின்றது.. இதனால், பெரும்பாலும் அதிபரின் கட்சிதான் ஆட்சிக்கு வரும். தேர்தல்கள் எப்போதும் 2 தடவைகளாக நடைபெறும். முதல்வாரத்தில் (ஞாயிறில்) அனைத்து கட்சிகளும் தனித்த தனியே நின்று தனது பலத்தை நிரூபிப்பார்கள். இதில் 50 சதத்தை யாராவது எடுத்தால், முதல் சுற்றிலேயே அவர் தேர்ந்தெடுக்கப் படுவார். இரண்டாவது சுற்றில் 20 % திற்கு மேல் எடுத்தவர்கள் மட்டுமே நிற்கலாம். இதில் 50 சதத்தை தாண்டியவர் தேர்தெடுக்கப் படுவார். 50 சதத்தை தாண்டியதால், இதுதான் சரியான மெஜாரிட்டி ஆகும். நமது தேர்தலில், 6 பேர் நின்று அதில், 5 பேர் ஆளுக்கு 15 சதமும், ஒருவர் மட்டும் 25 ம் எடுத்தால், 100 இல் 25 எடுத்தவரை எப்படி மெஜாரிட்டி என்று அறிவிக்க முடியும் ? இதில் ஒவ்வொருகட்சியும் தனது பலத்தை அறியலாம். கூட்டணி, பெட்டிகள் கைமாறுவது என்பது கிடையாது. (இதை மூன்றாவது முறையாக எழுதுகின்றேன்.)
Rate this:
Cancel
mohankumar - Trichy,இந்தியா
18-பிப்-202118:11:34 IST Report Abuse
mohankumar சிதம்பரம் தேர்தலில் நின்றால் அவர் முகத்திற்காக எவனும் (சிதம்பரத்திற்கு ) ஓட்டுபோடமாட்டான் காங்கிரஸ்காரன் கூட ஓட்டுப்போட மாட்டான்
Rate this:
Cancel
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
18-பிப்-202117:07:44 IST Report Abuse
Palanisamy T @என்.மல்லிகை மன்னன், மதுரை - 'கல்கண்டு' ஆசிரியர் தமிழ் வாணன் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். அவர் காலத்தில் அவரின் கல்கண்டு வார இதழ்களில் வெளியாகும் கேள்வி பதில்களுக்கு நல்ல நகைச் சுவையாகப் பதில் சொல்லுவார். அவரின் பதில்களில் அத்தனை நகைச் சுவைகள் , அறிவுச் சார்ந்தப் பதிலகள் நிறைய இருக்கும். அன்று அவர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைப் பற்றியும், வங்கதேச போர் விடுதலைப் பற்றியும் அவ்வளவுத் தெளிவாக எழுதியுள்ளார். அரசியல் கட்டுரைகள் நிறையவே எழுதியுள்ளார். மற்ற நாட்டு இளைஞர்களையும் கவர்ந்தவர். அவரின் பேச்சைக் கேட்டாலே அவ்வளவு இனிமைகள். தமிழோடு விளையாடுவார். அவருக்கு நிகர் அவரேதான். இவ்வளவுக் காலங்கள் உருண்டோடியும் தமிழகம் இன்னும் அவரை மறக்க வில்லை. நினைப்பதற்க்கே மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. அவரின் நூட்களை நம் இளைஞர்கள் படிக்க வேண்டும். அவரை மேற்கோள் காட்டியதற்கு உங்களுக்கு எனது மனப் பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X