பொது செய்தி

தமிழ்நாடு

மதுராந்தகம் ஏரி புனரமைப்பு பணி ரூ.120 கோடி அரசு ஒதுக்கீடு

Added : பிப் 18, 2021
Share
Advertisement
சென்னை - மதுராந்தகம் ஏரி புனரமைப்பு பணிகளுக்கு, அரசு, 120 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை, பொதுப்பணித்துறை துவங்கியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது, மதுராந்தகம் ஏரி. இது, 694 மில்லியன் கனஅடி கொள்ளளவு உடையது.இந்த ஏரியின் பிரதான கரை, 3,950 மீட்டர் நீளம் உடையது. இதன் நீர்பிடிப்பு பகுதி, 2,613

சென்னை - மதுராந்தகம் ஏரி புனரமைப்பு பணிகளுக்கு, அரசு, 120 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை, பொதுப்பணித்துறை துவங்கியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது, மதுராந்தகம் ஏரி. இது, 694 மில்லியன் கனஅடி கொள்ளளவு உடையது.இந்த ஏரியின் பிரதான கரை, 3,950 மீட்டர் நீளம் உடையது. இதன் நீர்பிடிப்பு பகுதி, 2,613 ஏக்கர் பரப்பு உடையது. மதுராந்தகம் ஏரி வாயிலாக, 1,852 ஏக்கர் நிலங்களுக்கு பாசனவசதி கிடைத்து வருகிறது. வடகிழக்கு பருவமழைக்காலங்களில், வந்தவாசி தாலுகாவில் துவங்கும் கிளியாறு, உத்திரமேரூர் தாலுகாவில் துவங்கும் நெல்வாய்மடுவு வாயிலாக, இந்த ஏரிக்கு நீர்வரத்து கிடைக்கிறது. ஏரி முழுக்கொள்ளளவை எட்டும்போது, அதில் இருந்து கல்லாறு வழியாக பாலாற்றில், உபரிநீர் வெளியேறி வருகிறது. இதன் வாயிலாக, மதுராந்தகம் மற்றும் செய்யூர் தாலுகாவில் உள்ள, 30க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு நீராதாரம் கிடைக்கிறது.இந்த ஏரியின் நீர் கொள்ளளவு, 1986ம் ஆண்டு, 609 மில்லியன் கனஅடியில் இருந்து, 694 மில்லியன் கனஅடியாக உயர்த்தப்பட்டது.முறையான பராமரிப்பின்மை காரணமாக, மதுராந்தகம் ஏரி அதன் கொள்ளவை இழந்துள்ளது. இதனால், மழைக்காலங்களில் கிடைக்கும் நீர், கோடைக்காலத்திற்கு முன்பே வறண்டுவிடுவதால், ஏரி பாலைவனம் போல மாறிவிடுகிறது.இந்த ஏரியை புனரமைத்து, நீர்கொள்ளளவை அதிகரிக்க வேண்டும் என்பது, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. தற்போது, இந்த ஏரியை புனரமைப்பதற்கு, அரசு, 120 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியில், ஏரியின் கொள்ளளவை அதிகரிக்கும் வகையில், துார்வாரப்படவுள்ளது. இதன்வாயிலாக கிடைக்கும் மண், கரைகளை உயர்த்தை அதிகரிப்பதற்கு பயன்படுத்தப்படவுள்ளது.இதுமட்டுமின்றி, நீர்வரத்துக்கான வழிகளும் புனரமைக்கப்படவுள்ளது. இப்பணிகளை மேற்கொள்வதால், ஏரியின் கொள்ளளவு, 791 மில்லியன் கனஅடியாக உயர்த்தப்பட இருக்கிறது. அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், இப்பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்ததாரர் தேர்வை பொதுப்பணித்துறை விரைவில் துவங்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X