அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவை வரும் பிரதமரை வரவேற்க பா.ஜ., பிரமாண்ட ஏற்பாடு

Updated : பிப் 18, 2021 | Added : பிப் 18, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
கோவை: பிரதமர் மோடி கோவையில் உரை நிகழ்த்தும் பிரமாண்ட மேடை அமைப்பதற்கான பூமி பூஜை, நேற்று மங்கல இசை முழங்க கோலாகலமாக நடந்தது.கோவை 'கொடிசியா' அருகே உள்ள மைதானத்தில், வரும் 25ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடக்கிறது. அதற்கான மேடை அமைப்பதற்கான, பூமி பூஜை நேற்று நடந்தது. மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய சாலை போக்குவரத்து இணை
PM Modi, BJP, Kovai, கோவை, பிரதமர், பாஜ, மோடி

கோவை: பிரதமர் மோடி கோவையில் உரை நிகழ்த்தும் பிரமாண்ட மேடை அமைப்பதற்கான பூமி பூஜை, நேற்று மங்கல இசை முழங்க கோலாகலமாக நடந்தது.

கோவை 'கொடிசியா' அருகே உள்ள மைதானத்தில், வரும் 25ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடக்கிறது. அதற்கான மேடை அமைப்பதற்கான, பூமி பூஜை நேற்று நடந்தது. மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய சாலை போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங்., பங்கேற்று மலர்த்துாவியும், தண்ணீர் ஊற்றியும், பூமி பூஜையில் பங்கேற்றனர்.

பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொதுச் செயலாளர் செல்வகுமார், மாநில துணைத்தலைவர்கள் அண்ணாமலை, கனகசபாபதி, கோவை மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் உடனிருந்தனர்.


latest tamil news



'தி.மு.க., பிரதான எதிரி'


பா.ஜ., மாநில தலைவர் முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த 10 நாட்களுக்கு முன், தமிழகத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தை தேசிய தலைவர் நட்டா துவக்கி வைத்தார். தேர்தல் களப்பணிகளை முடுக்கிவிட, சென்னை, கோவை ஆகிய இரு இடங்களிலும் பா.ஜ., தலைமை நிர்வாகிகளுடன், மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடக்கின்றன.

பிரதமர் மோடி கோவைக்கு, 25ம் தேதி வருகிறார். பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். தொடர்ந்து, பா.ஜ., முக்கிய தலைவர்கள் வருகின்றனர். ஊழல் கறை படிந்த தி.மு.க., தான் எங்களுடைய பிரதான எதிரி. அதை மையமாக வைத்தே, எங்களது பிரசாரம் இருக்கும். இவ்வாறு, முருகன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prabakaran - cuddalore,குவைத்
18-பிப்-202122:08:07 IST Report Abuse
prabakaran azhagan டேய் நாதாரி அவன் எங்க வேண்டுமானாலும் போகட்டும். 7 வருடத்தில் கிழித்தது என்ன??? நீ சோறுதானே தின்ற??? விவசாயிகளின் போரட்டத்தை முடிக்க எதாவது செய்யலாம் தேவையில்லாமல் எதுக்கு எங்கள் காசுல ஊர் சுத்தனும் .
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
18-பிப்-202120:52:30 IST Report Abuse
Ramesh Sargam எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு இப்பவே வயிறு கலங்க ஆரம்பித்துவிட்டது. ஆம், இந்த முறை பாரத பிரதமர் எந்த தமிழ் காவியங்களிலிருந்து தமிழ் கவிதைகளை தங்குதடையின்றி, துண்டுசீட்டை பார்க்காமல் படிக்க போகிறாரோ என்று. பயம் இருக்கத்தானே செய்யும், சுடலைக்கு...
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
18-பிப்-202120:44:55 IST Report Abuse
Narayanan பிஜேபி இனியும் மத்தியில் இருக்க தகுதி இல்லை . ஏழு ஆண்டுகள் ஆன பிறகும் காங்கிரெஸ்தான் இந்த பெட்ரோல் உயர்வுக்கு காரணம் என்று சொல்லி மக்களை முட்டாள் ஆக்கவேண்டாம் . பிஜேபி வேண்டாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X