தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

அரசியல் கடலில் தத்தளிக்கும் கப்பல்!

Updated : பிப் 18, 2021 | Added : பிப் 18, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
கனவு காணும் வாழ்க்கை யாவும்கலைந்து போகும் கோலங்கள்...துடுப்பு கூட பாரம் என்றுகரையை தேடும் ஓடங்கள்...இந்த பாடல் வரிகளை கேட்கும்போது, தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.அந்த கட்சியை விஜயகாந்த் தொடங்கிய காலத்தில் இருந்து, கலர் கலராக அவர்கள் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். யார் வைத்த சூனியமோ... ஒவ்வொரு தேர்தலின் முடிவிலும், அந்த
dmdk, Vijayakanth, TN election

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்...
துடுப்பு கூட பாரம் என்று

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்... துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்... இந்த பாடல் வரிகளை கேட்கும்போது, தே.மு.தி.க., நிர்வாகிகள், தொண்டர்களின் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியதில்லை. விஜயகாந்த் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து, கலர் கலராக அவர்கள் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். யார் வைத்த சூனியமோ... ஒவ்வொரு தேர்தலின் முடிவிலும், அந்த கனவுகள் எல்லாம், மழையில் நனைந்த மாக்கோலமாக கரைந்து ஓடி காணாமல் போகிறது. தொடக்க ஜோரில், தனித்து போட்டியிட்டு, இரட்டை சதவீத ஓட்டு வங்கியை கைப்பற்றியபோது, நாடே அந்த கட்சியை திரும்பி பார்த்தது . விஜயகாந்தை கூட்டணியில் சேர்க்க, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் போட்டி போட்டதே இதற்கு சான்று.

கரையை தேடும் ஓடங்கள்...

இந்த பாடல் வரிகளை கேட்கும்போது, தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

அந்த கட்சியை விஜயகாந்த் தொடங்கிய காலத்தில் இருந்து, கலர் கலராக அவர்கள் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். யார் வைத்த சூனியமோ... ஒவ்வொரு தேர்தலின் முடிவிலும், அந்த கனவுகள் எல்லாம், மழையில் நனைந்த மாக்கோலமாக கரைந்து ஓடி காணாமல் போகிறது.

தொடக்க ஜோரில், தனித்து போட்டியிட்டு, இரட்டை சதவீத ஓட்டு வங்கியை கைப்பற்றியபோது, நாடே திரும்பி பார்த்தது அந்த கட்சியை. விஜயகாந்தை கூட்டணியில் சேர்க்க, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் போட்டி போட்டதே சான்று.ஆனால், எதிர்க்கட்சி தலைவர் என்ற பெரிய அந்தஸ்தையும் அங்கீகாரத்தையும் பெற்ற பிறகு, கேப்டனின் கப்பல், திசை மாறி தடுமாறியது.

ஜெயலலிதாவுடன் மோதலால், உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி உடைந்தது. அது, அவர் கைநழுவ விட்ட அட்டகாசமான வாய்ப்பு. பொறுமையும் உரிய நேரம் வரை பொருத்திருப்பதும் அரசியலின் முக்கியமான பாடங்கள். இரண்டிலும் ஃபெயில் ஆகிவிட்டார்.

கருணாநிதி இரு கரம் நீட்டி காத்திருந்த, 2014 ல், பா.ஜ., தலைமையிலான மூன்றாவது அணியில் இணைந்து பெரும் தோல்வியை சந்தித்தது, தே.மு.தி.க., ஆனாலும், 2016ல், 'பழம் நழுவி பாலில் விழும்' என, எதிர்பார்த்து காத்திருந்தார் கருணாநிதி. அவரோடு சேராமல், தன்னை முதல்வர் நாற்காலியில் அமர வைப்பதாக சத்தியம் செய்த, வைகோவை நம்பி கம்யூனிஸ்டுகள், சிறுத்தைகள், உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து, மக்கள் நலக்கூட்டணியின் சுக்கானை பிடித்தார், விஜயகாந்த்.


latest tamil news


கப்பல் தரை தட்டி பெரும் சேதம் ஏற்பட்டதே மிச்சம். 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க.,சார்பில் ஸ்டாலின் சென்று, விஜயகாந்தை உடல்நலம் விசாரித்து அச்சாரம் போட்டார். ஆனால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இணைந்து ஓட்டு வங்கியில் எட்டு சதம் இழந்தது, தே.மு.தி.க., அதன் பிறகு தலைவரின் உடல்நிலை அவரது செயல்பாட்டை பாதித்ததால், கட்சியில் அது எதிரொலித்தது.

இந்த தேர்தலில், இரண்டு தொகுதியாவது ஜெயித்தாக வேண்டும். இல்லை என்றால், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் காலாவதி ஆகிவிடும்.இதனால், இம்முறை, தே.மு.தி.க.,வை இழுக்க, அ.தி.மு.க., - தி.மு.க., இரண்டுமே ஆர்வம் காட்டவில்லை. 'வந்தால் ஏற்போம்' என்ற மனநிலையில், தி.மு.க., உள்ளது. 'போவதானால் போங்கள்' என்ற மனநிலையில், அ.தி.மு.க., தலைமை உள்ளது.

சென்னை வந்த பிரதமர் நிகழ்ச்சியில், தே.மு.தி.க., பிரதிநிதிகளும் பங்கேற்றதன் வாயிலாக, அந்த கூட்டணி உறுதி என்று தொண்டர்கள் நம்புகின்றனர். 'தே.மு.தி.க., போட்டியிட்ட தொகுதிகளில், பா.ம.க., வேலை பார்க்கவில்லை. 2014, 2019 தோல்விகளுக்கு இதுதான் காரணம். எனவே, பா.ம.க., அல்லாத கூட்டணியில் சேர வேண்டும்' என்று அவர்கள் சொல்கின்றனர். பா.ம.க.வும் பிரதமரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால், இந்த விருப்பம், போகாத ஊருக்கு வழி தேடும் முயற்சிதான்.

முதல் பாராவை மறுபடியும் படிக்கலாம்...

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-பிப்-202120:51:08 IST Report Abuse
Santhakumar Srinivasalu கிராக்கி பண்ணாம குடுக்குற தொகை மற்றும் தொகுதிகளை வாங்கி கட்சியை வெட்டி பந்தா இல்லாமல் காப்பாற்றுவது தான் தேமுதிக லுக்கு நல்லது.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-பிப்-202117:33:54 IST Report Abuse
J.V. Iyer ஒருவரை மட்டும் கட்சி நம்பி இருந்தால் இப்படித்தான் இருக்கும் என்பது தே.மு.தி.க. நல்ல உதாரணம். கேப்டன் எப்படி பேச்சு குன்றி போனார் என்று வாட்சப்பில் வலம் வரும் செய்தி உண்மையா? அதைப்பற்றி ஏன் யாரும் வாய் திறக்க மாற்றீங்க?
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
18-பிப்-202117:33:30 IST Report Abuse
karutthu அன்று மட்டும் அவர் ஜெயலலிதாவை அனுசரித்து போயிருந்தால் மூன்றாவது பெரியக்கட்சியாக இருந்திருக்கும் கட்சியும் செல்வாக்காக இருக்கும் இவர் அரசியல் பாடம் கற்கவில்லை இப்போ அவர் உடல்நிலை காரணமாக ஓய்வில் இருக்கிறார் எங்கள் அன்னான் புன்னகை மன்னன் பிரச்சார பீரங்கியுடன் கூட்டு சேர்ந்து அனைத்தையும் இழந்து கஷ்டப்படுகிறார் ..கட்சியும் இவருடைய மனைவி ,மற்றும் மச்சான் வசம் போய்விட்டது அவருடன் பண்ட்ருட்டியும் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X