
சென்னை மகாலிங்கபுரம் பகுதியைச் சார்ந்தவர் ஓவியர் அந்தோணி ராஜ்,மாற்றுத்திறனாளி.

எளிமையான குடும்பத்தில் பிறந்த இவரது கவனம் பள்ளிப்படிப்பை தாண்டியதும் ஓவியத்தின் மீது விழுந்தது.

கிண்டி உள்ளிட்ட பல்வேறு பயிற்சி மையங்களில் சேர்ந்து தனது ஒவிய திறனை வளர்த்துக் கொண்டார். தற்போது புரசைவாக்கத்தில் உள்ள ‛ஆப்பர்சூனிட்டி சிறப்பு மாணவர்களுக்கான பயிற்சி பள்ளியில்' ஓவிய ஆசிரியராக உள்ளார்.

மாற்றுத்திறனாளியான தன்னை உதாசீனப்படுத்தாமல் ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து என்னை ஓவியனாக இந்த உலகிற்கு மலர உதவியதுடன், நாலு பேருக்கு நான் உதவும் நிலையில் உயர்த்தியவர்களான பெற்றோர்கள் சவுரியப்பன்-தயாளமேரி,பள்ளி தாளாளர் கஸ்துாரி தேவராசன்,முதல்வர் அமலி வின்சென்ட்,மனைவி ஹெலன் ரோஸ்,நண்பர்கள் ராதாகிருஷ்ணன்,விக்டர்,மகள்கள் ஓவியா,ஜூலியட் ஆகியோருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்கிறார்.

சிறப்பு பள்ளியில் படிக்கும் மாணர்கள் வயதால் பதினைந்தாக இருந்தாலும் மனதால் ஐந்து வயது பையனாகத்தான் இருப்பர்.இவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வதற்கும், அவர்களாக தங்களை முன்னேற்றிக் கொள்வதற்கும் ஓவியக்கலை பெரிதும் பயன்படுகிறது.

மெதுவாக செய்வார்கள் ஆனால் சரியாக சுத்தமாக செய்வார்கள் ஓவியக்கலையில் இவர்களை ஆர்வம் கொள்ளவைத்துவிட்டால் பின்னாளில் அவர்கள் அவர்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்வர்,குடும்பத்தாருக்கு உதவியாகவும் இருப்பர்.

பள்ளி வேலை நேரம் போக மீதமிருக்கும் நேரத்தில் வீட்டில் வைத்து நிறைய ஓவியங்கள் வரைவேன் எனது ஓவியங்களுக்காக அகில இந்திய அளவில் ‛கலாகவுரவ்',‛காலமித்ரா' ஆகிய விருதுகளை பெற்றுள்ளேன்.நான் வரையும் ஓவியங்களை விற்றுவரும் பணத்தில் எனது குடியிருப்பு பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு ஓவிய போட்டி நடத்தி பரிசுகள் வழங்கி மகிழ்விப்பேன்.

ஓவியர் அந்தோணிராஜ்ஜிடம் பேசுவதற்கான எண்:97102 47156.
-எல்.முருகராஜ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE