சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

உடலை சோதிக்கும் பட்டைகள்!

Added : பிப் 18, 2021
Share
Advertisement
வளையும் தன்மையுள்ள கருவிகளை தயாரிக்கும் மின்னணுவியல் பிரிவு வேகமெடுக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், வளையக்கூடிய நோயறிதல் பட்டை ஒன்றைஉருவாக்கியுள்ளனர்.இந்தப் பட்டையை உடலில் ஒட்டிக்கொள்ளவேண்டும். பின் அதை அணிந்துள்ளவரின் இதயச் சமிக்ஞைகள், ரத்த அழுத்தம் மற்றும், பலவகை உயிரிவேதிப் பொருட்களையும் பட்டை அளந்து சொல்லிவிடும்.தபால் வில்லை
 உடலை சோதிக்கும் பட்டைகள்!

வளையும் தன்மையுள்ள கருவிகளை தயாரிக்கும் மின்னணுவியல் பிரிவு வேகமெடுக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், வளையக்கூடிய நோயறிதல் பட்டை ஒன்றைஉருவாக்கியுள்ளனர்.

இந்தப் பட்டையை உடலில் ஒட்டிக்கொள்ளவேண்டும். பின் அதை அணிந்துள்ளவரின் இதயச் சமிக்ஞைகள், ரத்த அழுத்தம் மற்றும், பலவகை உயிரிவேதிப் பொருட்களையும் பட்டை அளந்து சொல்லிவிடும்.

தபால் வில்லை அளவே உள்ள இந்த மின்னணுப் பட்டையில் பல ஹைடெக் உணரிகள் உள்ளன. உதாரணமாக, ரத்த அழுத்தத்தை அளக்க, ஒரு உணரி, மீஒலி அலைகளை உடலுக்குள் செலுத்தி, ரத்தநாளங்களின் அழுத்தத்தை அளக்கிறது.

பிற உணரிகள், அணிந்துள்ளவறின் வியர்வையிலிருந்து வேதிப் பொருட்களை அளந்து சொல்கின்றன. இந்தப் பட்டைக்கான மின்சாரத்தை வெளி இணைப்பு மூலம்தான் தரவேண்டும். பட்டை அனுப்பும் அளவைகளை வெளியே உள்ள ஒரு கருவியில் பார்க்க முடியும்.உணரிகள் அனுப்பும் சமிக்ஞைகள் ஒன்றோடு ஒன்று இடையீடுகளை ஏற்படுத்தாத வண்ணம், உணரிகளை வடிவமைத்திருப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உடலில் அணியக்கூடிய, வளையும் தன்மையுள்ள கருவிகளால் நோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்க முடியும். அதேபோல, ஆபத்து ஏற்படும் முன்பாகவே சிகிச்சை உதவியை நாடவும் அது உதவும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X