சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக்கினைக் கைவிட, கோகோ கோலா தீர்மானித்து விட்டது. அடுத்து, முழுக்க முழுக்க, காகிதத்தாலேயே தயாரிக்கப்பட்ட பாட்டிலை தனது பானங்களுக்கு பயன்படுத்த, கோகோ கோலா ஆராய்ந்து வருகிறது.
இதற்கென, நெதர்லாந்திலுள்ள 'பேப்பர் பாட்டில் கம்பெனி'யுடன், கோகோ கோலா கைகோர்த்துள்ளது. 'பேபாகோ. என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம், ஒரு புதிய காகித பாட்டிலை தயாரித்துள்ளது.
இதன் உட்புறத்திலுள்ள காகிதம், கோலாவின் சர்க்கரை, சோடா,ஆக்சிஜன் போன்றவை, கெட்டுவிடாமலும், ஓட்டை விழாமலும் சமாளிக்கும் திறன் கொண்டது.சோடா வாயுவின் அழுத்தத்தை தாங்கும் திறனும் பேபாகோ பாட்டிலுக்கு உண்டு. எனவே, நெதர்லாந்தில், தாவரச் சாற்றில் தயாராகும், 'அடேஸ்' என்ற பானத்தை, காகித பாட்டிலில் விற்பனை வெள்ளோட்டம் விட கோகோ கோலா தீர்மானித்துள்ளது.
இதில் வெற்றி கிடைத்தால், அடுத்த சில ஆண்டுகளில் கோகோ கோலா பானமும் காகித பாட்டில்களில் அடைத்தே விற்கப்படும் என்று தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE