ரஞ்சன் கோகாய்க்கு எதிராக உள்ளதை மறுக்க முடியாது: உச்சநீதிமன்றம்

Updated : பிப் 18, 2021 | Added : பிப் 18, 2021 | கருத்துகள் (16) | |
Advertisement
புதுடில்லி: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டின் பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்குமோ என்பது குறித்த விசாரணை வழக்கை முடித்து வைத்துள்ள நீதிமன்றம், அவருக்கு எதிராக சதி இருப்பதை மறுக்க முடியாது என தெரிவித்துள்ளது.கடந்த 2014 ல் உச்சநீதிமன்றத்தில் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 2018 ல் ரஞ்சன் கோகாய் வீட்டு அலுவலகத்தில் பணிக்காக
ரஞ்சன் கோகாய், உச்சநீதிமன்றம், ranjan ghokoi, சுப்ரீம் கோர்ட், supreme court

புதுடில்லி: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டின் பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்குமோ என்பது குறித்த விசாரணை வழக்கை முடித்து வைத்துள்ள நீதிமன்றம், அவருக்கு எதிராக சதி இருப்பதை மறுக்க முடியாது என தெரிவித்துள்ளது.

கடந்த 2014 ல் உச்சநீதிமன்றத்தில் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 2018 ல் ரஞ்சன் கோகாய் வீட்டு அலுவலகத்தில் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த போது, அவர் தன்னிடம் பல முறை நடந்து கொள்ள முயற்சித்ததாகவும், அதற்கு தான் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டை கோகாய் மறுத்தார். இதனையடுத்து, தற்போதைய தலைமை நீதிபதி பாப்டே, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி விசாரணை நடத்தி, கோகோய் நிரபராதி என சான்று அளித்தது.

ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக இருந்த போது குடிமக்கள் பதிவேடு குறித்து சில கடினமான முடிவுகளை எடுத்ததால், அவரை ஏதாவது ஒன்றில் சிக்க வைக்க சதி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்த, நீதிபதி பட்நாயக் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
கோகாய்க்கு எதிரான புகாரில் உள்ள சதி குறித்தும், நீதிபதியை சரிகட்ட ஊழியர்கள் மூலம் இடைத்தரகர்கள் முயற்சி செய்கிறார்களா எனவும் விசாரணை நடத்தவும் குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த குழுவானது, கோகாய் மீதான புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்படவில்லை. நீதிபதிகளுக்கு எதிராக பின்னப்படும் சதி குறித்து விசாரணை நடத்தவே அமைக்கப்பட்டதாக தெரிவித்தது.


latest tamil newsஇந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை முடித்து வைத்த உச்சநீதிமன்றம், நீதிபதி பட்நாயக் தலைமையிலான குழுவானது கோகாய்க்கு எதிராக சதி இருப்பதை மறுக்க முடியாது என தெரிவித்துள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான அவரது கருத்துகள் பின்னணியில் இந்த சதி உருவாக்கப்பட்டிருக்கும். தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக கோகாய் கடுமையான கருத்துகளை முன்வைத்தார். இதனால், சிலர் வருத்தமடைவதற்கு வலிமையான காரணங்கள் உள்ளன. வழக்கு தொடர்பான மின்னணு ஆவணங்களை மீட்பதில் சாத்திய குறைவு உள்ளது. இதனால் வழக்கை முடித்து வைக்கிறோம் என தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manitha neyam - tamilnadu,இந்தியா
19-பிப்-202110:30:33 IST Report Abuse
manitha neyam இவர் ரொம்ப யோக்கியர், நீதியை விற்று ராஜ்யசபா பதவி வாங்கிய கயவன்
Rate this:
Cancel
SKANDH - Chennai,இந்தியா
19-பிப்-202109:18:49 IST Report Abuse
SKANDH Suo_Motu_case_final_order.pdf
Rate this:
Cancel
Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்
19-பிப்-202106:24:44 IST Report Abuse
Padmanaban Jayakrishnan இருக்கலாம் என்பது யூகம். அது முடிவு ஆகாது. அந்த சதி என்ன என்று கண்டுபிடிக்க இன்னும் 10 வருடம் ஆகும். ஆனால் உண்மை மட்டும் வெளிவராது. அவர் உண்மையில் சிக்கவைக்கப்பட்டிருந்தால் அவர் வழங்கிய தீர்ப்புகள் யாருக்கு சாதகமாக இருந்ததோ அவர்கள் தான் இந்த குற்றச்சாட்டின் சூத்திரதாரிகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X