கிறிஸ் மோரிசுக்கு ரூ.16.25 கோடி: இந்தியன் பிரிமியர் லீக் ஏலத்தில் 'விறுவிறு'

Updated : பிப் 18, 2021 | Added : பிப் 18, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை:இந்தியன் பிரிமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிசை ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது.இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 14வது சீசன் இந்தியாவில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் வீரர்களுக்கான 'மினி' ஏலம் சென்னையில் நடந்தது. 61 காலியிடத்துக்கு 292 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். 164 இந்திய வீரர்கள், 125 வெளிநாட்டு வீரர்களுடன், 3 ஐ.சி.சி., உறுப்பு
IPLAuction2021, IPL Auction, chris moris, glenn maxwell,

சென்னை:இந்தியன் பிரிமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிசை ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது.

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 14வது சீசன் இந்தியாவில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் வீரர்களுக்கான 'மினி' ஏலம் சென்னையில் நடந்தது. 61 காலியிடத்துக்கு 292 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். 164 இந்திய வீரர்கள், 125 வெளிநாட்டு வீரர்களுடன், 3 ஐ.சி.சி., உறுப்பு அணிகளின் வீரர்கள் இடம் பெற்றனர்.


'லக்கி' மேக்ஸ்வெல்
latest tamil news
கருண் நாயர், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ராய் என முதல் மூன்று வீரர்களை யாரும் வாங்கவில்லை. அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித்தை ரூ.2.20 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியது. 'ஆல் ரவுண்டர்' மேக்ஸ்வெல்லை வாங்க (அடிப்படை விலை ரூ. 2 கோடி) மீண்டும் கடும் போட்டி ஏற்பட்டது. துவக்கத்தில் ரூ. 3 கோடிக்கு கோல்கட்டா கேட்டது. பின் சென்னை, பெங்களூரு அணிகள் முட்டி மோதின. தொகை அதிகரிக்க, சென்னை அணி விலகிக் கொண்டது. கடைசியில் 12 மடங்கிற்கும் அதிகமாக ரூ. 14.25 கோடி கொடுத்து பெங்களூரு அணி மேக்ஸ்வெல்லை வாங்கியது.


மோரிசிற்கு 'ஜாக்பாட்'latest tamil news
தென் ஆப்ரிக்க அணி 'ஆல் ரவுண்டர்' கிறிஸ் மோரிசிற்கும் (அடிப்படை விலை ரூ. 75 லட்சம்) 'டிமாண்டு' அதிகமாக இருந்தது. மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் மாறி மாறி கேட்டன. கடைசியில் ரூ. 16.25 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது.


மொயீனுக்கு எவ்வளவுசமீபத்தில் சென்னையில் நடந்த டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட் சாய்த்தவர் சுழற்பந்து வீச்சு 'ஆல் ரவுண்டர்' மொயீன் அலி. இவரை வாங்க சென்னை, பஞ்சாப் இடையே போட்டி காணப்பட்டது. கடைசியில் ரூ. 7 கோடிக்கு சென்னை அணி மொயீன் அலியை வாங்கியது.


வீரர்கள் ஏலம் விபரம்வீரர்கள் - ஏலத் தொகை - ஏலம் எடுத்த அணி

கிறிஸ்மோரிஸ் - ரூ.16.25 கோடி - ராஜஸ்தான்
ஜேமிசன் -ரூ.15 கோடி- ராஜஸ்தான் ராயல்
கிளென் மேக்ஸ்வெல் ரூ.14.25 கோடி- பெங்களூரு
ரிச்சர்ட்சன்-ரூ.14 கோடி -பஞ்சாப்
கிருஷ்ணப்பா கவுதம்-ரூ.9.25 கோடி -சென்னை
மெரிடித்-ரூ.8 கோடி- பஞ்சாப்

மொயின் அலி - ரூ.7 கோடி- சென்னை
தமிழக வீரர் ஷாரூக்கான் - ரூ.5.25 கோடி - பஞ்சாப்
இந்திய வீரர் ஷிவம் துபே - ரூ.4.40 கோடி- ராஜஸ்தான்

வங்க சாஹிப் அல் ஹசன் - ரூ.3.20 கோடி- கோல்கட்டா


ஸ்டீவ் ஸ்மித்- ரூ.2.20 கோடி- டில்லி

டேவிட் மலான் -ரூ.1.50 கோடி- பஞ்சாப்

ஆடம் மில்னே - ரூ.3.2 கோடி- மும்பை
சேதன் சாகரியா- ரூ.1.20 கோடி ராஜஸ்தான்

முஸ்தாபிஜூர் ரஹ்மான்- ரூ.1. கோடி- ராஜஸ்தான்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-பிப்-202119:39:35 IST Report Abuse
theruvasagan அந்த காலத்தில் கருப்பர இனத்தவரை ஆப்ரிக்காவிலிருந்து பிடித்து வந்து வெள்ளையர்கள் ஏலத்தில் அடிமைகளாக விற்பார்கள். அது இன்று சட்ட விரோதம். ஆனால் விளையாட்டின் பெயரால் இப்போது நடக்கும் ஏலம் சட்டபூர்வமானது. ஏலம் எடுத்தவர்களும் அதை நடத்துபவர்களும் அதைபோல நூறு மடங்கு மடங்கு சம்பாதிக்க வசதியாக தங்கள் கைகாசை கரியாக்க பார்வையாளர்கள் என்ற பெயரில் இங்க லட்சக்கணக்கான கிறுக்கனுங்க இருக்கானுங்க.
Rate this:
jagan - Chennai,இலங்கை
18-பிப்-202121:53:49 IST Report Abuse
jagan"ஏலம்" தவறான சொல் பயன்பாடு . அமெரிக்காவில் இதை வேலைக்கு ஆள் எடுக்கும் ட்ராப்ட்டிங் (drafting) எண்டு சொல்வார்கள். நம்ம ஆளுங்களுக்கு வேலையும் தெரியாது சொல் பயன்பாடும் தெரியாது 😂😂😂😂...
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
19-பிப்-202103:56:44 IST Report Abuse
Sanny @ Theruvasagam ஜி, அது கறுப்பினத்தவரை வாழ்நாள் அடிமையாக ஏலத்தில் வாங்கினாங்க. இது தட்காலிக அடிமை ஏலம் அவ்வளவுதான் வித்தியாசம், கறுப்பினத்தவர் அவங்க நேரம் வந்தால் மேல போய்விடுவாங்க, ஆனால் இவங்க நேரம் முடிந்தால் ஜாலிதான். லொள்ளு....
Rate this:
Cancel
Elango - Sivagangai,இந்தியா
18-பிப்-202118:30:08 IST Report Abuse
Elango கோப்பை வெல்லும் அணி மட்டுமே பணத்தை அல்லுவார்கள் என்று நினைத்தோம் ஆனால் எல்லா அணியினரும் கோடி கணக்கில் வருவாய் பெறுகின்றனர் மக்கள் ஏமாளிகள்,கோமாளிகள்.....இதற்காக தான் கொரனா காலத்திலும் நடத்தியே தீர வேண்டும் என்று ஒற்றை காலில் நின்றிருகீரார்கள்....இனி ஒரு போட்டியையும் கான போவதில்லை செல்வந்தற்களே உங்கள் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும்....
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
19-பிப்-202103:59:40 IST Report Abuse
Sanny @ elango Sivagangai ஜி, போட்டியை பார்க்காவிட்டாலும் சூதாட்டத்தில் 1000 மடங்கு சம்பாதித்துவிடுவாங்களே, அதுக்கு என்ன செய்ய....
Rate this:
Cancel
18-பிப்-202117:42:33 IST Report Abuse
raghasrin இது ஒரு கேலிகூத்து. பணம் படைத்தவர்களின் களியாட்டம் திறமைமிக்க நம்நாட்டு வீரர்களை எப்படி ஊக்குவிக்க போகிறார்கள்??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X