ரூ.24 கோடி மதிப்பிலான பாம்பு விஷம் பறிமுதல்

Updated : பிப் 18, 2021 | Added : பிப் 18, 2021 | கருத்துகள் (13) | |
Advertisement
கோல்கட்டா: வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவிற்கு கடத்த முயன்ற 2 கோப்பை நல்ல பாம்பு விஷத்தை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.24 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.மோசமான நிலையில் உள்ள கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி அளிக்கப் பயன்படும் வேதிப்பொருட்களில் நல்ல பாம்பின் நஞ்சும் கலக்கப்படுகிறது. சீனாவில் இதனை கேன்சர்
பாம்பு, விஷம், பறிமுதல்

கோல்கட்டா: வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவிற்கு கடத்த முயன்ற 2 கோப்பை நல்ல பாம்பு விஷத்தை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.24 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

மோசமான நிலையில் உள்ள கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி அளிக்கப் பயன்படும் வேதிப்பொருட்களில் நல்ல பாம்பின் நஞ்சும் கலக்கப்படுகிறது. சீனாவில் இதனை கேன்சர் நோயாளிகளுக்கு பயன்படுத்த தொடங்கியதிலிருந்து இதன் விலை மிகவும் உயர்ந்துள்ளது. நல்ல பாம்பின் ஒரு கிராம் அளவிலான விஷம் அதிகாரப்பூர்வ சந்தை மதிப்பின் படி தற்போது ரூ.8 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் ராய்கஞ்ச் பகுதியில் 1800 கிராம் எடை கொண்ட பவுடர் வடிவிலான பாம்பின் விஷம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அம்மாநிலத்தில் உள்ள எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு பாம்பு விஷம் கடத்தப்பட உள்ளதாக முன் கூட்டியே தகவல் கிடைத்துள்ளது. இதனால் தீவிர தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. செவ்வாயன்று இரவு 7.45 மணியளவில் 4 பேர் ஒரு பையுடன் இந்திய எல்லைக்குள் நுழைவது தெரிந்தது. அவர்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் எச்சரித்தனர். உடனே கொண்டு வந்த பையை விட்டுவிட்டு நால்வரும் மீண்டும் வங்கதேச எல்லைக்கு தப்பி ஓடிவிட்டனர்.


latest tamil news



அவர்கள் கொண்டு வந்த பைகளில் இரண்டு கிறிஸ்டல் குடுவைகள் இருந்தன. அதில் ஒன்றில் நல்ல பாம்பின் ஆங்கில சொல்லான கோப்ரா என்றும் ரெட் டிராகன் பிரான்ஸ் தயாரிப்பு என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த பவுடரும் சிகப்பு வண்ணத்தில் இருந்தன. இது பற்றி மாவட்ட வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அதனை நல்ல பாம்பின் விஷம் என உறுதி செய்தனர். கள்ளச்சந்தையில் அதன் மதிப்பு ரூ.24 கோடி என குறிப்பிட்டனர். இதனை இந்தியாவிற்கு கடத்தி, இங்கிருந்து சீனாவுக்கு கொண்டு செல்வது திட்டமாக இருந்திருக்கும் என கூறுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
19-பிப்-202113:01:09 IST Report Abuse
Sampath Kumar சாமிக்கு தான் வெளிச்சம்
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
19-பிப்-202100:19:58 IST Report Abuse
மதுரை விருமாண்டி வங்க தேசத்திலிருந்து சீனாவுக்கு வழியில்லைன்னுட்டு இந்தியா வழியா வந்து சீனாவுக்கு போகப்போறதை, தப்பிச்சு போறப்போ சின்ன பையை பார்டருக்கு உள்ளே விட்டுட்டு, பூரா விஷயத்தையும் இவங்க காதிலே சொல்லிட்டு ஓடிட்டானாம்.. படவா ராஸ்கல்ஸ்.. காதிலே பூ வைப்பானுங்க.. இப்படி ஒரு டன் பூமாலையா வெப்பாங்க ??
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
19-பிப்-202100:15:14 IST Report Abuse
மதுரை விருமாண்டி பாஜக பரப்புரைகளா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X