சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : பிப் 18, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்புதிய அறிகுறிகொரோனா பாதிப்புக்கு காய்ச்சல், இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல், வாசனை, சுவை இழப்பு, மூச்சுத்திணறல் போன்றவை அறிகுறியாக உள்ளன. இந்நிலையில் புதிதாக குளிர், பசியின்மை, தலைவலி, தசைவலி ஆகிய நான்கு அறிகுறி ஏற்படுவதாக லண்டன் இம்பீரியல் கல்லுாரி ஆய்வு தெரிவித்துள்ளது. 2020 ஜூன் முதல் 2021 ஜனவரி வரை நோயாளிகளிடம் ஆய்வு செய்ததில் சில இதர அறிகுறி அடிக்கடி

அறிவியல் ஆயிரம்

புதிய அறிகுறி


கொரோனா பாதிப்புக்கு காய்ச்சல், இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல், வாசனை, சுவை இழப்பு, மூச்சுத்திணறல் போன்றவை அறிகுறியாக உள்ளன. இந்நிலையில் புதிதாக குளிர், பசியின்மை, தலைவலி, தசைவலி ஆகிய நான்கு அறிகுறி ஏற்படுவதாக லண்டன் இம்பீரியல் கல்லுாரி ஆய்வு தெரிவித்துள்ளது. 2020 ஜூன் முதல் 2021 ஜனவரி வரை நோயாளிகளிடம் ஆய்வு செய்ததில் சில இதர அறிகுறி அடிக்கடி தென்பட்டன. ஆனால் இவை ஒற்றை தலைவலி, இருதயம், நீரிழிவு போன்ற நோய்களிலும் ஏற்படுகின்றன, எனவே இது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளனர்.

தகவல் சுரங்கம்

அமைதி வீரர்கள்


உலக நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்தும் பணியில் ஐ.நா., சபையின் அமைதிப்படை ஈடுபடுகிறது. போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இவர்களின் சேவை முக்கிய பங்காற்றுகிறது. உலகின் பெரும்பாலான நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள், இந்த அமைதிப்படையில் பணியாற்றுகின்றனர். இதற்கு தேவையான நிதி, உலக நாடுகளால் வழங்கப் படுகிறது. இதில் அதிக நிதியை (28%) அமெரிக்கா வழங்குகிறது. 2வது இடத்தில் சீனா (10%) உள்ளது. இப்படையில் 2016 பிப். கணக்கின்படி உலகின் 124 நாடுகளை சேர்ந்த 1,05,314 வீரர்கள் பணியாற்றுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X