'நாசா' வின் செவ்வாய் பயணம்: முக்கிய பங்காற்றிய இந்தியர்

Updated : பிப் 18, 2021 | Added : பிப் 18, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
புளோரிடா:செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ளும், 'நாசா'வின் முயற்சியில், இந்தியாவில் பிறந்த பெண் விஞ்ஞானி, டாக்டர் சுவாதி மோகனுக்கு மிகப் பெரிய பங்களிப்பு உள்ளது. செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக, 'ரோவர்' என்ற ஆய்வு வாகனத்தை அனுப்பியுள்ளது, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா. கடந்தாண்டு, ஜூலை, 30ல், புளோரிடாவின் கேப் கேனவரல்

புளோரிடா:செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ளும், 'நாசா'வின் முயற்சியில், இந்தியாவில் பிறந்த பெண் விஞ்ஞானி, டாக்டர் சுவாதி மோகனுக்கு மிகப் பெரிய பங்களிப்பு உள்ளது.latest tamil news
செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக, 'ரோவர்' என்ற ஆய்வு வாகனத்தை அனுப்பியுள்ளது, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா. கடந்தாண்டு, ஜூலை, 30ல், புளோரிடாவின் கேப் கேனவரல் விமானப்படை தளத்தில் இருந்து, இது அனுப்பி வைக்கப்பட்டது. செவ்வாய் கிரகத்தில், ஒரு செவ்வாய் கிரக ஆண்டு, அதாவது பூமியைப் பொறுத்தவரை, இரண்டு ஆண்டுகள், அங்கு சுற்றி, பல்வேறு ஆய்வுகளை, ரோவர் வாகனம் மேற்கொள்ள உள்ளது.


செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்தனவா, அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்ற ஆய்வை ரோவர் வாகனம் மேற்கொள்ள உள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆய்வில், இந்தியாவில் பிறந்த, நாசா விஞ்ஞானி, டாக்டர் சுவேதா மோகனுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வு வாகனத்தை அனுப்பும் இந்த திட்டம், 2013ல் துவங்கியதில் இருந்தே அதில் ஈடுபட்டு வந்தார் சுவாதி. ஜி.என். அண்ட் சி எனப்படும் வழிகாட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக இருந்தார்.


latest tamil newsரோவர் வாகனம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதற்கான தொழில்நுட்பத்தை, இவர் உருவாக்கியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்த சுவாதி, தன், 1 வயதில், அமெரிக்காவுக்கு சென்றார். பள்ளியில் படிக்கும்போது, குழந்தைகள் நல மருத்துவராக வேண்டும் என நினைத்துள்ளார். அதே நேரத்தில், 'ஸ்டார் டிரெக்' என்ற, 'டிவி' நிகழ்ச்சியைப் பார்த்து, புதிய உலகங்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது.

விண்வெளி ஆய்வில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுடன், ஆராய்ச்சி முடித்து, டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். நாசாவின், சனி கிரகத்துக்கான பயணம், நிலவுக்கான பயண திட்டங்களிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
19-பிப்-202112:29:46 IST Report Abuse
Dr. Suriya அதனாலதான் சொல்றேன் தமிழா நீங்கள் தெலுங்கு சொடலையை ஆதரிக்காதே என்று ......
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-பிப்-202105:56:10 IST Report Abuse
J.V. Iyer இந்தியாவில் கிடைக்காத சந்தர்ப்பம் வெளிநாடுகளில் அதிகம் கிடைப்பதால் இந்தியர்கள் மின்னுகின்றனர்.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
19-பிப்-202103:54:31 IST Report Abuse
oce இனி மனிதன் விண் பரப்பை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும். அப்போது தான் பூமியிலிருந்து ஊர் பயணம் போல் வேற்று கிரகங்களுக்கு சுலபமாக மனிதன் சென்று தங்கி வர முடியும். சுவாசத்தில் மூன்று நான்கு விநாடிகளுக்கொரு தடவை உள்ளே போய் வெளியே வரும் காற்றின் அளவை படிப்படியாக குறைக்க அரை மணிக்கு ஒரு முறை மூச்சு காற்றை உள்ளே இழுத்து வெளியே விட பிராணயாம பயிற்சி தேவை. வெளிக் காற்றில் கலந்துள்ள பிராணவாயுவை மட்டும் பிரித்து நுரையீரல் தாங்கும் அளவுக்கு அதனுள் செலுத்தி தேக்கி வைத்து மீளவும் வெளிக்காற்று உள்ளிழுப்பை அதுவரை நிறுத்தி பிராண வாயவால் நுரையீரலில் இருந்தே மூளையயும் இருதயத்தையும் இயக்கும் முறைக்கு மனிதன் மாறவேண்டும். மனிதன் வான் வழியை பல வித சிக்னல்களை அனுப்ப பயன் படுத்த துவங்கி விட்டதால் அதே சாதனத்தை மின் அணு தொழில் நுட்பத்தில் பயன்படுத்தி மேற் கண்ட. நிதான சுய சுவாச சுழற்சி முறைக்கு மாற முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X