வாஷிங்டன்: துணை அதிபர் கமலா ஹாரிஸின் மருமகள் மீனா ஹாரிஸ் தனது பிராண்டை உயர்த்துவதற்காக அத்தை பெயரை பயன்படுத்துவதை நிறுத்துமாறு வெள்ளை மாளிகை கேட்டுக் கொண்டுள்ளது.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் மருமகள் மீனா ஹாரிஸ் வழக்கறிஞர் மற்றும் தொழில்முனைவோர் ஆவார். சில புத்தகங்களும் எழுதியுள்ளார். சமூக ஊடகங்களில் பிரபல இருக்கும் அவரை பல லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். அவரின் நடவடிக்கைகளால் வெள்ளை மாளிகைக்கும், அவரது அத்தைக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கடுமையாக விமர்சித்தும் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டார். தன்னை கமலாவின் மருமகள் என முன்னிறுத்திக் கொள்ளும் அவர் இத்தகைய கருத்து வெளியிட்டது சர்ச்சையானது.
இது இரு தரப்பு உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் அவரது கருத்து தனி ஒரு குடிமகளின் கருத்து. அது எந்தவிதத்திலும் இரு தரப்பு உறவை பாதிக்காது என வெள்ளை மாளிகை கூறியது. இந்நிலையில் வெள்ளை மாளிகை மீனா ஹாரிஸுக்கு அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் எந்தவொரு வணிக நடவடிக்கைகளுக்கும், தனது பிராண்ட் மதிப்பை கூட்டுவதற்கும் அத்தை பெயரை பயன்படுத்தக் கூடாது என அதில் கூறியுள்ளனர்.

“துணை அதிபரும், அவரது குடும்பத்தினரும் உயர்ந்த நெறிமுறைகளை கடைப்பிடிப்பவர்கள். மேலும் எந்த ஒரு வணிக நடவடிக்கைகளுக்கும் அவரின் பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்பது வெள்ளை மாளிகையின் கொள்கை.” என துணை அதிபரின் பத்திரிகை செயலாளர் சபரினா சிங் தெரிவித்துள்ளார். மீனா ஹாரிஸ் தனது அத்தை பெயரில் ஆடைகளை வடிவமைத்து விற்று வந்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளை மாளிகையின் அறிவுறுத்தலால் இனி அதனை அவர் தொடர முடியாது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE