பா.ஜ.,வில் இணைகிறார் 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன்

Updated : பிப் 20, 2021 | Added : பிப் 18, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
திருவனந்தபுரம்: 'மெட்ரோ மேன்' என, அழைக்கப்படும் ஸ்ரீதரன், பா.ஜ.,வில் இணைய முடிவு செய்துள்ளார்.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த சில மாதங்களில், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற, பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது.இந்நிலையில், இங்கு, முக்கிய புள்ளியாக கருதப்படும், மெட்ரோ மேன் என,
 பா.ஜ., மெட்ரோ மேன், ஸ்ரீதரன்,

திருவனந்தபுரம்: 'மெட்ரோ மேன்' என, அழைக்கப்படும் ஸ்ரீதரன், பா.ஜ.,வில் இணைய முடிவு செய்துள்ளார்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த சில மாதங்களில், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற, பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், இங்கு, முக்கிய புள்ளியாக கருதப்படும், மெட்ரோ மேன் என, அழைக்கப்படும் ஸ்ரீதரன், 88, பா.ஜ.,வில் இணைய முடிவு செய்துள்ளார். டில்லி மெட்ரோவின் முன்னாள் தலைவரான இவர், ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் கொச்சி மெட்ரோ ரயில் திட்டங்களில், மூத்த பொறியாளராக பணியாற்றி உள்ளார். கொங்கன் ரயில் திட்டத்தில், இவரின் பங்கு முக்கியமானது. பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் பெற்றவர்.

இது குறித்து ஸ்ரீதரன் கூறியதாவது:பா.ஜ.,வில் இணைய முடிவு செய்துள்ளேன். கடந்த, 10 ஆண்டுகளாக, கேரளாவில் வசித்து வருகிறேன். பல அரசுகளை பார்த்துவிட்டேன். எனினும், மக்களுக்கு செய்ய வேண்டியவற்றை, எந்த அரசும் செய்யவில்லை. எனவே, பா.ஜ.,வில் இணைந்து, மக்களுக்கு என்னால் முடிந்ததை, என் அனுபவத்தை வைத்து செய்ய உள்ளேன். தங்கள் சொந்த நலன்களுக்காக, இந்தியாவை தவறாக சித்தரிக்க, காங்., உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் முயற்சித்து வருகின்றன. கட்சி மேலிடம் விரும்பினால், வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DMK வுக்கு வெற்றிக்கொடி கட்டு - முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்,இந்தியா
19-பிப்-202121:40:53 IST Report Abuse
 DMK வுக்கு  வெற்றிக்கொடி கட்டு பனிக்காலத்தில் கேரளத்திற்கு, எதுவும் செய்யாமல், தள்ளாத வயதில், ஏதாவது செய்ய BJP ல் சேர முடிவெடுத்துள்ளது 60 வயதை கடந்தவர்கள் மூளை செத்தவர்கள் என்ற BJP கொள்கையை அறிந்தா, அறியாமலா? சமவெளி பகுதிகள், குறைவாக உள்ள கேரளத்தில், பெருந்தொழில்களுக்கான வாய்ப்பு மிகவும் குறைவு.வளைகுடா வேலைவாய்ப்புகள் மூலம் கேரளம் தன்னை தானே வளர்த்துக்கொண்டுள்ளது.மதக்கலவரம் வராமல் பார்த்துக்கொள்வது மெட்ரோமனின் பணியாக இருக்கட்டும்
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
20-பிப்-202120:54:36 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுமாபெரும் சாதனை படைத்த பொறியாளரை ஒருவரை மூளை செத்தவர் என்று சொல்லி என்னை நானே தாழ்த்திக்கொண்டேன்...
Rate this:
Cancel
19-பிப்-202121:15:18 IST Report Abuse
ஆப்பு இத்தனை வருஷம் காங்கிரசில் இருந்தாரா? பி.ஜெ.பி ல 75 வயதுக்கு மேலே சேருவது வேஸ்ட்.
Rate this:
Cancel
19-பிப்-202119:12:15 IST Report Abuse
kulandhai Kannan கடந்த பத்தாண்டுகளாக (முஸ்லீம்கள் அதிகமுள்ள) பொன்னணி மாவட்டத்தில் வாழ்ந்ததன் விளைவுதான் இது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X