பொது செய்தி

இந்தியா

'சீனாவுடனான போர் ஒரு நொடியில் தவிர்ப்பு'

Updated : பிப் 20, 2021 | Added : பிப் 18, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி: 'கடந்த ஆண்டு, சீனா மீது இந்தியா தொடுக்க இருந்த போர், கடைசி நொடியில் தவிர்க்கப்பட்டது' என, இந்திய ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தின் வடக்கு பிராந்திய தளபதி, ஒய்.கே.ஜோஷி கூறியதாவது: ஒன்பது மாதங்களாக கிழக்கு லடாக்கில், இந்தியா - சீன ராணுவத்தினரிடையே பலமுறை உரசல் ஏற்பட்டுள்ளது. எதிர் தாக்குதல் கடந்த ஆண்டு, ஆக., 31ல், இரு நாடுகளும்
சீனா, போர், இந்தியா, ராணுவம், கைலாசா,

புதுடில்லி: 'கடந்த ஆண்டு, சீனா மீது இந்தியா தொடுக்க இருந்த போர், கடைசி நொடியில் தவிர்க்கப்பட்டது' என, இந்திய ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்தின் வடக்கு பிராந்திய தளபதி, ஒய்.கே.ஜோஷி கூறியதாவது: ஒன்பது மாதங்களாக கிழக்கு லடாக்கில், இந்தியா - சீன ராணுவத்தினரிடையே பலமுறை உரசல் ஏற்பட்டுள்ளது.


எதிர் தாக்குதல்


கடந்த ஆண்டு, ஆக., 31ல், இரு நாடுகளும் போருக்கு மிக நெருக்கமாக சென்று விட்டன. இதற்கு, ஆக., 29, 30ம் தேதிகளில், மிக முக்கியமான கைலாச மலைப் பகுதியை, இந்திய ராணுவம் பிடித்துக் கொண்டது தான் காரணம்.

இந்தியாவின் திடீர் நடவடிக்கையை சற்றும் எதிர்பாராத சீனா, ஆக., 31ல், எதிர் தாக்குதல் தொடுக்க, கைலாச மலையில் முன்னேறியது. இதனால், எந்த நேரமும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. சீனர்களை தாக்க, நம் ராணுவத்தினர் துப்பாக்கி, ராக்கெட் லான்சர்களுடன் காத்திருந்தனர். ராணுவ பீரங்கிகளும் குண்டு வீச தயார் நிலையில் இருந்தன.

கையில் உள்ள துப்பாக்கியின் விசையை அழுத்த, வீரம் தேவையில்லை. ஆனால், மிகக் கடினமான தருணத்திலும், விசையை அழுத்தாமல், நிலைமை என்னவாகும் என்பதை அனுமானிக்க, மிகுந்த துணிச்சல் தேவை. அந்த பயிற்சி நம் ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது.


கடைசி நொடி

அதனால், அன்று பொறுத்திருப்பதா அல்லது பொங்கி எழுவதா என தீர்மானிக்க முடியாத, போரின் விளிம்பு நிலையில் நாங்கள் இருந்தோம். அதனால், கடைசி நொடியில், அன்று நடக்கவிருந்த போர் தவிர்க்கப்பட்டது. கல்வான் கை கலப்பில், 60க்கும் மேற்பட்ட, சீன ராணுவத்தினரை 'ஸ்ட்ரெச்சரில்' வைத்து துாக்கிச் சென்றதை பார்த்தோம். அதில் பலர் மரணம் அடைந்திருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
23-பிப்-202117:52:37 IST Report Abuse
S.P. Barucha இந்திய ராணுவ வீரர்களுக்கு நிச்சயம் திறமையான போர் பயிற்சி வேண்டும்.
Rate this:
Cancel
19-பிப்-202119:04:32 IST Report Abuse
ஆப்பு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே துப்பாக்கி போன்ற ராணுவ ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாதுன்னு ஒபந்தம் இருப்பது தெரியாதா? அதான் போர் வரவில்லை. வெறும் உருட்டுக் கட்டைகளால் மட்டுமே தாக்கிக்.கொண்டார்கள்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
19-பிப்-202116:53:33 IST Report Abuse
sankaseshan இது மோடி சர்கார்டா, வால சுருட்டிக்கிண்டு மூலையில் உட்க்கார்ந்த காங்கிரஸ் சர்க்கார் இல்லை .
Rate this:
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
22-பிப்-202116:58:00 IST Report Abuse
Apposthalan samlinபுலரிக்குது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X