அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் வரும் பின்னே; பரிசுகள் வரும் முன்னே!

Updated : பிப் 20, 2021 | Added : பிப் 18, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
திருப்பூர்: கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில், வீடு வீடாக சென்று, வேட்டி, சேலை, எவர்சில்வர் தட்டு போன்றவற்றை, அ.தி.மு.க.,வினர், ஜெ., பிறந்த நாள் விழா பரிசாக வழங்கி வருகின்றனர்.வரும், 24ல், ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில், வீடு வீடாக, ஜெ., முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் கட்சி நிர்வாகிகள் படம் மற்றும் பெயர்கள்
தேர்தல், பரிசு, அதிமுக,அ.தி.மு.க., ஜெயலலிதா

திருப்பூர்: கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில், வீடு வீடாக சென்று, வேட்டி, சேலை, எவர்சில்வர் தட்டு போன்றவற்றை, அ.தி.மு.க.,வினர், ஜெ., பிறந்த நாள் விழா பரிசாக வழங்கி வருகின்றனர்.

வரும், 24ல், ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில், வீடு வீடாக, ஜெ., முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் கட்சி நிர்வாகிகள் படம் மற்றும் பெயர்கள் அச்சிடப்பட்ட துணிப்பையில், எவர்சில்வர் தட்டு, ஒரு சேலை, ஒரு வேட்டி வைத்து, அ.தி.மு.க.,வினர் வழங்க துவங்கியுள்ளனர். சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், ஜெ., பிறந்த நாள் பரிசு வீடு தேடி வருவதால், வாக்காளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அவிநாசி அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி ஏற்பாட்டில், ஜெ., பிறந்த நாள் விழா பரிசு வழங்கி வருகிறோம். கட்சி நிர்வாகிகள் மற்றும் அனுதாபிகள் குடும்பத்துக்கு, சேலை, வேட்டி, எவர்சில்வர் தட்டு என, 500 ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருள் வழங்கி வருகிறோம்.ஒவ்வொரு தொகுதியிலும், 75 ஆயிரம் குடும்பங்கள் வீதம் கணக்கிட்டு, பரிசு பொருள் வினியோகம் துவங்கியுள்ளது. மூன்று மாவட்டங்களில், 21 தொகுதிகளில், 15 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-பிப்-202118:31:21 IST Report Abuse
ராவணன் வேலுமணியை வெற்றி பெற ஓர் இளைஞன் வருகிறான்..வெற்றி பெற்று சரித்திரத்தில் இடம் பெறுவான்..
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
19-பிப்-202118:28:55 IST Report Abuse
Dr. Suriya அவங்க பக்கத்துக்கு (திமுக) இப்போ யாருக்கும் பொறந்ததனால் அல்லது நினைவு நாள் வரலையா? உடன்பிறப்புகள் கேட்குறாங்க ....
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
19-பிப்-202116:11:08 IST Report Abuse
Darmavan மக்களுக்கு அறிவு இருந்தால் இதற்கு மயங்க மாட்டார்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X