அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிர்வாக திறமையற்ற ஓ.பி.எஸ்.,: ஜெ.,கடிதம் காட்டி ஸ்டாலின் பேச்சு

Updated : பிப் 20, 2021 | Added : பிப் 18, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
உத்தமபாளையம்: ''துணை முதல்வர் ஓ.பி.எஸ்., நிர்வாக திறமையற்றவர் என்பதற்கு, முன்னாள் முதல்வர் ஜெ., அவருக்கு எழுதிய கடிதமே சான்று,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் நடந்த, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பிரசார நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:தேனி மாவட்டத்தைச் சேர்ந்த துணை முதல்வர் ஓ.பி.எஸ்., நாட்டுக்கும், மக்களுக்கும், ஏன் தொகுதிக்கும்
நிர்வாக திறமை, ஓ.பி.எஸ்., ஜெ., கடிதம், ஸ்டாலின்

உத்தமபாளையம்: ''துணை முதல்வர் ஓ.பி.எஸ்., நிர்வாக திறமையற்றவர் என்பதற்கு, முன்னாள் முதல்வர் ஜெ., அவருக்கு எழுதிய கடிதமே சான்று,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.


தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் நடந்த, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பிரசார நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:தேனி மாவட்டத்தைச் சேர்ந்த துணை முதல்வர் ஓ.பி.எஸ்., நாட்டுக்கும், மக்களுக்கும், ஏன் தொகுதிக்கும் ஒன்றும் செய்யவில்லை. இவரை, இரண்டு முறை முதல்வராக்கிய முன்னாள் முதல்வர் ஜெ.,க்கும், மூன்றாவது முறையாக முதல்வராக்கிய சசிகலாவிற்கும், துணை முதல்வராக்கிய முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கும் உண்மையாக இல்லை.

ஜெ., மரணத்தில் மர்மம் உள்ளது என, முதலில் கூறிய ஓ.பி.எஸ்., சமாதியில் தர்மயுத்தம் நடத்தினார். பின், இ.பி.எஸ்.,சிடம் சேர்ந்து, துணை முதல்வரானார். அ.தி.மு.க., அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில் சட்டசபையில் எதிர்த்து ஓட்டளித்தவர், சட்டப்படி துணை முதல்வராக இருக்கக் கூடாது.மோடி தன்னை முதல்வராக்கிவிட மாட்டாரா. சசிகலா அறிவிக்க மாட்டாரா என்று நினைத்து தான், அயோத்திக்கு கிடைத்த பரதன் என்று விளம்பரம் தருகிறார். அயோத்தி பற்றி பேச, அவருக்கு அருகதை இல்லை.

பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த ஓ.பி.எஸ்., நிர்வாக திறமை இல்லாதவர் என்பதற்கு, 2002 மார்ச் 7ல், அவருக்கு ஜெ., எழுதிய கடிதமே சான்று. அதில், 'முறையாக திட்டமிடாததாலும், மந்தமான நிர்வாகத்தாலும், மத்திய அரசு வழங்கிய நிதி, முழுமையாக பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. இது, எனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது' என குறிப்பிட்டிருந்தார்.

கடந்த, 2001ல் இவரது சொத்து மதிப்பு, 17 லட்சத்து, 44 ஆயிரத்து 840 ரூபாய். ஐந்து ஆண்டுகளுக்கு பின், 1 கோடியே, 77 லட்சம் ரூபாய் என உயர்ந்தது. அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இன்றைக்கு இவரது சொத்து, பல ஆயிரம் கோடி ரூபாய். தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், துணை முதல்வர் சொத்து குவிப்பு தொடர்பான விசாரணை கண்டிப்பாக நடைபெறும். தி.மு.க.,வின் 11வது மாநில மாநாடு, மார்ச், 14ல் திருச்சியில் நடைபெறும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
19-பிப்-202119:04:50 IST Report Abuse
Narayanan stalin as usual read the sentence wrongly. Jaya said panneer is a "capable" administrator . while reading this stalin read as "incapable". whether stalin read or speaks everything is faults statement only. Tamilnadu people aware this. Also you are capable to change the sentences in the letters.
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
19-பிப்-202118:53:58 IST Report Abuse
RaajaRaja Cholan உன் திறமைக்கு தான் உன் தந்தை அவர் காலத்திலேயே முதல்வர் ஆக்க விருப்பப்படவில்லையே , பேச்சை பாரு , யோக்கியதை பாரு , எகத்தாளம் பார்
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
19-பிப்-202117:13:48 IST Report Abuse
Darmavan இவர் அப்பவோடு சேர்ந்து அடித்த கொள்ளைக்கு எப்போது விசாரணை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X