அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் தே.ஜ., ஆட்சி: கிஷன் ரெட்டி

Updated : பிப் 20, 2021 | Added : பிப் 18, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, இணை பொறுப்பாளராக, மத்திய அமைச்சர் வி.கே.சிங் ஆகியோரை, பா.ஜ., நியமித்துள்ளது. அவர்கள், சென்னை வந்தனர். தமிழக பா.ஜ., தலைமை அலுவலகத்தில், சென்னை சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆகியோரை சந்தித்து பேசினர். அதன்பின், அறிவுசார் பிரிவு சார்பில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
தமிழகம்,  தேஜ,  கிஷன் ரெட்டி, வி.கே.சிங்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, இணை பொறுப்பாளராக, மத்திய அமைச்சர் வி.கே.சிங் ஆகியோரை, பா.ஜ., நியமித்துள்ளது. அவர்கள், சென்னை வந்தனர்.

தமிழக பா.ஜ., தலைமை அலுவலகத்தில், சென்னை சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆகியோரை சந்தித்து பேசினர். அதன்பின், அறிவுசார் பிரிவு சார்பில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பேசியதாவது:

தமிழகத்தில், பல ஆண்டுகளாக, 'பா.ஜ., தென் மாநிலங்களுக்கு எதிரானது; உயர் ஜாதி கட்சி' என, தவறான பிரசாரம் செய்து வருகின்றனர். வட கிழக்கு மாநிலங்களில், 70 சதவீத மக்கள், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள். அங்கும் இதே பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அங்கு, பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி ஆட்சி நடக்கிறது.தென் மாநிலங்களிலும், அந்த நிலை வரும். தற்போது, கர்நாடகாவில், பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. வரும் தேர்தலில், புதுச்சேரியில், பா.ஜ., ஆட்சி அமைக்கும். தெலுங்கானாவில், அடுத்து வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., அரசு அமையும்.

தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்.பீஹார், உத்தர பிரதேசம், ஹரியானா, ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களில், குடும்ப கட்சிகளை, மக்கள் புறக்கணித்து, தேசிய கட்சியை அங்கீகரித்துள்ளனர். குடும்ப கட்சிகளுக்கு, இந்தியாவில் இனி எதிர்காலம் கிடையாது. பத்து ஆண்டுகளாக, தமிழகத்தில் குடும்ப கட்சி நிராகரிக்கப்பட்டு உள்ளது. வரும் தேர்தலிலும், மக்கள் நிராகரிப்பர். அதிர்ஷ்டவசமாக, இந்தியாவிற்கு நல்ல தலைவர் கிடைத்துள்ளார். திறமையான தலைவர், நாட்டை வழிநடத்துகிறார்.

எந்த பக்கமிருந்து பார்த்தாலும், ஊழல் இல்லை. வரும் தேர்தலில், பிரதமருக்கும், பா.ஜ.,விற்கும் ஆதரவு கொடுங்கள். நாட்டிற்காகவே, ஒவ்வொரு திட்டங்களையும் செயல்படுத்துகிறோம். இது, குடும்ப கட்சி அல்ல. நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி. இவ்வாறு, அவர் பேசினார். மத்திய அமைச்சர் வி.கே.சிங் பேசியதாவது: முதலில் நாடு; அடுத்து கட்சி; அதன்பின், தனிப்பட்ட நபர்கள் என்பது, பா.ஜ., கொள்கை.

மத்தியில், பா.ஜ., அரசு வந்த பின், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன; பொருளாதாரம் உயர்ந்து உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள், ஜாதி, மத பேதமின்றி, அனைத்து பிரிவினரையும் சென்றடைந்துள்ளன. லஞ்சத்தை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-பிப்-202121:18:35 IST Report Abuse
ஆப்பு தே.ஜ கூட்டணி ஆட்சின்னு இப்பவே மந்திரி பதவிக்கு அடிபோடுறாரு. கட்டுமரம் போல பா.ஜ ஆளுங்களுக்கும் இதயத்தில் சிம்மாசனமே போட்டுருவாரு இடைப்பாடியார்.
Rate this:
Cancel
P.Narasimhan - Tirupattur, Tirupattur Dist,இந்தியா
19-பிப்-202115:18:22 IST Report Abuse
P.Narasimhan "தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்" - ஆப்ஷன் 1. அதிமுக கூட்டணி ஆட்சி அமையும்.ஆப்ஷன் 2.திமுக கூட்டணி ஆட்சி அமையும்
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
19-பிப்-202108:30:08 IST Report Abuse
VENKATASUBRAMANIAN தமிழகத்தை குடும்பம் ஆண்டது போதும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். நல்லவர்கள் ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழர்கள் முட்டாள்கள் இல்லை. ஒரு சிலர் கும்பிடறேன் சாமி போல் பிரியாணிக்கும் குவார்டெர்க்கும் விலை போகலாம். எல்லோரும் அப்படி இல்லை
Rate this:
19-பிப்-202112:09:35 IST Report Abuse
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்உங்கள் ஊரில் எடுயூரப்ப அவர் மகன் MP , ஏன் தேவா கௌடா அவர் மகன் குமாரசாமி இவன் எல்லாம் உன் நொள்ளை கண்ணிற்கு தெரியலையா என்ன...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X