திருவண்ணாமலைக்கு காவடி எடுக்கும் தி.மு.க.,வினர்

Added : பிப் 19, 2021 | கருத்துகள் (24)
Advertisement
தி.மு.க.,வின் தேர்தல் வியூகத்தை, 'ஐபேக் டீம்' வகுத்தாலும், ஸ்டாலின் மருமகன் சபரீசன் கட்டுப்பாட்டில் அந்த டீம் இயங்குவதாக கட்சியினர் கூறுகின்றனர். 'ஐபேக் டீம்' விசாரித்து ஒரு பட்டியல், சபரீசன் தன் நலம் விரும்பிகளை அதில் நுழைக்க ஒரு பட்டியல், முன்னாள் பத்திரிகையாளர்கள் மூலம் உதயநிதி ஒரு பட்டியல்... என ஆளாளுக்கு காய் நகர்த்துகின்றனர். கனிமொழி, துர்கா, செல்வி

தி.மு.க.,வின் தேர்தல் வியூகத்தை, 'ஐபேக் டீம்' வகுத்தாலும், ஸ்டாலின் மருமகன் சபரீசன் கட்டுப்பாட்டில் அந்த டீம் இயங்குவதாக கட்சியினர் கூறுகின்றனர்.



latest tamil news




'ஐபேக் டீம்' விசாரித்து ஒரு பட்டியல், சபரீசன் தன் நலம் விரும்பிகளை அதில் நுழைக்க ஒரு பட்டியல், முன்னாள் பத்திரிகையாளர்கள் மூலம் உதயநிதி ஒரு பட்டியல்... என ஆளாளுக்கு காய் நகர்த்துகின்றனர். கனிமொழி, துர்கா, செல்வி போன்றவர்களும் சிலருக்கு நம்பிக்கை தந்துள்ளனர்.

யாரிடம் செல்வது, சொல்வது என, தெரியாமல், உ.பி.,க்கள் திண்டாடுகின்றனர். தனி ஒருவன் போல, அவர்களின் பார்வையில் படுவது எ.வ.வேலு மட்டுமே. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளராக அவரை ஸ்டாலின் நியமித்துள்ளார். சபரீசனுக்கும் அவர் நெருக்கம். ஸ்டாலின் வீட்டு கிச்சன் வரை சகஜமாக சென்று வரக்கூடியவர்.


latest tamil news




இதனால், ஆறு மாவட்ட, தி.மு.க.,வினரும் முன்னாள், இந்நாள், எம்.எல்.ஏ.க்களும், இன்னோவா இன்ன பிற பரிவாரங்கள் சகிதம் திருவண்ணாமலைக்கு படை எடுக்கின்றனர். வேலுவின் ஆபீசிலும் கல்லுாரியிலும் கரை வேட்டி கூட்டம் கலகலக்கிறது.ஊர் ஊராக தலைவர் பேசும் நிகழ்ச்சிக்கு, ஆள் பிடிக்க வேண்டியிருக்கிறது. அ.தி.மு.க.,வில் இருந்து, இங்கு வந்த வேலு வீட்டில் உடன்பிறப்புகள் கூட்டம் அலைமோதுகிறது. காலம் உண்மையிலேயே மாறிவிட்டது நண்பா... என்று அறிவாலயத்தில் விமர்சன குரல்கள் கேட்கின்றன!

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sethusubramaniam - chennai,இந்தியா
19-பிப்-202122:57:57 IST Report Abuse
sethusubramaniam வேல் , வேலு , இது ரெண்டுதான் இப்போ ட்ரெண்டிங் . வேலைக்காகுமான்னு பார்க்கணும்
Rate this:
Cancel
19-பிப்-202117:05:06 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் வேலு வீட்டிற்கு தான் காவடியா , உபிகள் என்றுமே திருந்த மாட்டார்கள்
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
19-பிப்-202115:13:25 IST Report Abuse
M.COM.N.K.K. என்ன காவடி எடுத்தாலும் மலையின் உச்சியை அடைவது முடியவே முடியாதையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X