காட்பாடி : துரைமுருகனுக்கு வழிவிடும்படி, அவரது ஆதரவாளர்கள், கட்சியினரிடம் கெஞ்சி வருகின்றனர்.
வேலுார் மாவட்டம், காட்பாடி சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில், எட்டாவது முறையாக துரைமுருகன் போட்டியிடுகிறார். காட்பாடியில் துரைமுருகனே மீண்டும் போட்டியிட வேண்டும் என, அவரது வயதை குறிப்பிடும் வகையில், 83 பேர், தி.மு.க.,வில் விருப்ப மனு தாக்கலுக்கு தயார் செய்யப்பட்டு உள்ளனர்.

ஆனால், துரைமுருகனின் எதிர்ப்பாளர்கள் சிலர், அவருக்கு பயத்தை உண்டாக்கும் வகையில், 24 இளைஞர்களை, காட்பாடியில் விருப்ப மனு தாக்கல் செய்ய, திட்டமிட்டு வருகின்றனர்.இதையறிந்த துரைமுருகன், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
மூத்த நிர்வாகிகள் சிலரை விட்டு, பேச்சு நடத்துகிறார். அப்போது, 'துரைமுருகன் சந்திக்கும் கடைசி தேர்தல் இது. எப்படியாவது, அவரை ஜெயிக்க வைக்க வேண்டும். நமக்குள் போட்டி வேண்டாம்' என, அவர்கள் கெஞ்சி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE