பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம் சரணாலயங்களுக்கு பறவைகள் வருகை அதிகரிப்பு

Updated : பிப் 19, 2021 | Added : பிப் 19, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை நான்கு சரணாலயங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி 2 நாட்களாக நடந்தது. இதில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பறவைகள் வந்திருப்பது தெரியவந்துஉள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல், மேல செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள்
 ராமநாதபுரம் சரணாலயங்களுக்கு பறவைகள் வருகை அதிகரிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை நான்கு சரணாலயங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி 2 நாட்களாக நடந்தது. இதில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பறவைகள் வந்திருப்பது தெரியவந்துஉள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல், மேல செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக வருகின்றன.குறிப்பாக கூழைக்கடா, செங்கால் நாரை, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை இனப்பெருக்கம் செய்வதற்காக அக்டோபர் மாதம் வந்து மார்ச் வரை தங்கிஅதன்பின் இடம்பெயர்கின்றன.நேற்று முன்தினம், நேற்றும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

சென்னையைச் சேர்ந்த பறவையியலாளர் சந்திரசேகரன், திருச்சி ரில்சன், ராமநாதபுரம் உதவி வன பாதுகாவலர் கணேச லிங்கம், கீழக்கரை வனத்துறை அதிகாரி பழனிக்குமார், வனவர் ராஜ்சேகர் மற்றும் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, சேதுபதி அரசு கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.பறவைகள் எண்ணிக்கை அதிகரிப்புதொலை நோக்கி உதவியுடன் பறவைகளின் நிறம், கால் இவற்றின் அடிப்படையில் பறவைகள் என கணக்கெடுக்கப் பட்டுள்ளது. நேற்று (பிப்.,18ல்) மேலச்செல்வனுர், காஞ்சிரங்குடி, சித்தார்கோட்டை ஆகிய சரணாலயங்களில் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

இவ்விடங்களில் 35ஆயிரம் பறவைகள் உள்ளது. தேர்த்தங்கல், சக்கரக்கோட்டை, பெரியகண்மாய் ஆகிய பகுதிகளை சேர்த்தால் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பறவைகள் உள்ளன.வழக்கமாக ராமநாதபுரம் சரணாலயங்களில் 35 வகையான வெளிநாடு, உள்ளூர் 25 ஆயிரம் பறவைகள் சீசன் காலக்கட்டத்தில் வந்து செல்கின்றன. இவ்வாண்டு மழைபெய்து நீர்நிலையில் தண்ணீர் உள்ளதால் பறவைகள் வருகை இருமடங்கு அதிகரித்துள்ளது.இன்று காலை பறவைகள் குறித்த சிறப்பு கையேடு வெளியிடப்படுகிறது, என வனத்துறையினர் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X