பொது செய்தி

இந்தியா

மத்திய ரிசர்வ் படையில் பணியாற்ற புல்வாமா 'ஹீரோ' குழந்தைகள் விருப்பம்

Updated : பிப் 19, 2021 | Added : பிப் 19, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
டேராடூன்: காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த வீரரின் மகளும், மகனும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில், 2019, பிப்., 14ல், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள், 40 பேர் பலியாயினர். உயிர் தியாகம் செய்த, உத்தரகண்ட் மாநிலம் டேராடூனைச்
Pulwama Hero, CRPF, Mohan Lal kids

டேராடூன்: காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த வீரரின் மகளும், மகனும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில், 2019, பிப்., 14ல், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள், 40 பேர் பலியாயினர். உயிர் தியாகம் செய்த, உத்தரகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த, உதவி சப் - இன்ஸ்பெக்டர், மோகன் லாலுக்கு, வீரதீர செயலுக்கான ஜனாதிபதி போலீஸ் பதக்கம், சமீபத்தில் வழங்கப்பட்டது.

ராணுவ வாகனங்கள் செல்லும்போது, புல்வாமாவில் கண்காணிப்பு பணியில் இருந்தார் மோகன் லால். அப்போது, சாலையின் குறுக்கே, ஒரு கார் நுழைவதை பார்த்தார். உடனடியாக அந்த காரை எச்சரித்தார். கார் வேகமாக சென்றதால், தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுட்டபடியே காரை நோக்கி விரைந்தார். ஆனால், வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட அந்த கார், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில், மோகன் லால் உட்பட, 40 பேர் உயிரிழந்தனர்.


latest tamil newsஉயிர் தியாகம் செய்த மோகன் லாலின் மகள், குமாரி கங்கா, 19, தற்போது, மருத்துவம் பயின்று வருகிறார். மகன், ஸ்ரீராம், 17, பிளஸ் 2 படித்து வருகிறார். படிப்பை முடித்த உடன், தந்தையின் வழியில், சி.ஆர்.பி.எப்.,பில் இணைந்து, நாட்டுக்கு சேவை புரிய விரும்புவதாக, இருவரும் கூறியுள்ளனர்.

'பாகிஸ்தானுக்கு ஒரு விஷயம் கூற விரும்புகிறோம். நீங்கள், பயங்கரவாதிகளை உருவாக்குங்கள். ஆனால், நாங்கள், ஹீரோக்களை உருவாக்குகிறோம்' என, இருவரும் கூறியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nagendirank - Letlhakane,போஸ்ட்வானா
20-பிப்-202114:41:31 IST Report Abuse
nagendirank வீர குழந்தைகளுக்கு தலை வணங்குவோம். ஊழல் அரசியல் வாதிகளை பற்றிய செய்திகளை தினம் படிப்பதை விட , நாட்டுக்கு உழைத்த வீர தீர செய்லகளை படித்தால் நல்லது
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
19-பிப்-202118:45:42 IST Report Abuse
M  Ramachandran அந்த கடைசீ இரண்டு வரிகள் உள்ளதை தொடுகின்றன அனுபவ வாதிகள் கூட இப்படி கூற மாட்டார்கள். அந்த குழந்தைகள் கூறி யுள்ளனர். இங்குள்ள தமிழகத்திலுக்குள்ள ஜென்மங்கள் இதை பார்த்தாவது திருந்துமா? குவாட்டர் அடிப்பொடிகள் தாங்கள் அடிப்பொடிகள் தான் என்று நினைத்தால் என்னசெயய்வது. அவர்கள் தலையெழுத்து.
Rate this:
Cancel
vivek c mani - Mumbai,இந்தியா
19-பிப்-202115:58:56 IST Report Abuse
vivek c mani தேசத்தை காத்து தியாகம் செய்ய துணியும் இந்த மாணவர்கள் நாட்டின் நல் எதிர்காலத்திற்கு வழிசெய்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X