புதுடில்லி: அதிகளவு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் இந்தியா 3வது இடத்தை பெற்றுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜன.,16ம் தேதி முதல் உலகின் மாபெரும் தடுப்பூசி திட்டம் துவங்கப்பட்டது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அவர்களுக்கு கடந்த 13ம் தேதி முதல் 2வது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. நேற்று வரை இந்தியாவில் 94 லட்சத்து 22 ஆயிரத்து 22 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 61,96,641 சுகாதார பணியாளர்கள் (முதல் டோஸ்), 3,69,167 சுகாதார பணியாளர்கள் (2-வது டோஸ்) மற்றும் 28,56,420 முன்கள பணியாளர்கள் (முதல் டோஸ்) தடுப்பூசி பெற்றுள்ளனர்.

இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற்றவர்களில் 58.20 சதவீதம் பேர் 7 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அதிகபட்சமாக கர்நாடகாவில் 14.74 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இதன் மூலம் உலக அளவில் அதிக டோஸ்கள் பயன்படுத்திய நாடுகளில் இந்தியா 3-வது இடத்தை பெற்றுள்ளது. முதல் 2 இடங்களில், அமெரிக்காவும், இங்கிலாந்தும் உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE