அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் சொத்தை கொள்ளையடித்து மக்களுக்கே கொடுப்பது அசிங்கம்: ஸ்டாலின்

Updated : பிப் 19, 2021 | Added : பிப் 19, 2021 | கருத்துகள் (108)
Share
Advertisement
கோவை: மக்கள் சொத்தை கொள்ளையடித்து மக்களுக்கே கொடுப்பது அசிங்கமாக இல்லையா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.கோவையில் நடந்த ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில், மனு அளித்த பொழுது மக்களின் கோரிக்கைகளை கேட்ட பின் பொது மக்கள் மத்தியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: தேர்தலுக்காக , அரசியலுக்காக மட்டும் வருபவன் நானில்லை. எப்போதும் உங்களுடன்
mkstalin, stalin, dmk chief stalin, dmk, மு.க.ஸ்டாலின், ஸ்டாலின், திமுக தலைவர் ஸ்டாலின்,  திமுக, தி.மு.க.,

கோவை: மக்கள் சொத்தை கொள்ளையடித்து மக்களுக்கே கொடுப்பது அசிங்கமாக இல்லையா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் நடந்த ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில், மனு அளித்த பொழுது மக்களின் கோரிக்கைகளை கேட்ட பின் பொது மக்கள் மத்தியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: தேர்தலுக்காக , அரசியலுக்காக மட்டும் வருபவன் நானில்லை. எப்போதும் உங்களுடன் இருப்பவன் நான். அதிமுக அரசால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் 100 நாளில் தீர்க்கப்படவே மனுக்கள் வாங்கப்படுகின்றது. ஆட்சி அமைத்த பின் மனுக்களை விசாரிக்க தனித்துறை அமைக்கப்படும். அதிமுக செய்ய தவறிய கடமையை திமுக அரசு மக்களுக்கு செய்து கொடுக்கும். ஒரு கோடி குடும்பங்கள் இதனால் பலன் அடைவார்கள்.


latest tamil news
இப்போது நடப்பது அரசு அல்ல. ஊழல்வாதிகள் இணைந்து ஊழல் கோட்டையை ஏற்படுத்தியுள்ளனர். இதில் முக்கியமானவர் வேலுமணி. சுண்ணாம்பு பவுடர், பினாயில் வாங்கியதில் ஊழல் செய்தவர் வேலுமணி. ஊராட்சிக்கு ஒரு கோடி வீதம் 12500 ஊராட்சிகளுக்கு 12500 கோடி ஊழல் செய்துள்ளார். ஆளுங்கட்சியை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் கூட நுழைய முடியாதபடி வேலுமணி. தனக்கு வேண்டியவர்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கிறார். வேலுமணியின் சகோதரர் அன்பரசன்தான் கோவையில் அமைச்சர் போல செயல்படுகிறார். வேலுமணிக்கு வேண்டப்பட்ட நிறுவனத்தின் வருவாய் முதலில் 17 கோடியாக இருந்தது. இப்போது அந்த நிறுவனத்தின் வருவாய் 3000 சதவீதம் அதிகரித்துள்ளது.


latest tamil news
ஊழல்களை கண்டுபிடிக்கின்ற பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர். அதிமுக அராஜகம் முடிகின்ற நாள் நெருங்கி கொண்டு இருக்கின்றது. மக்கள் சொத்தை கொள்ளையடித்து மக்களுக்கே கொடுப்பது அசிங்கமாக இல்லையா. ஆட்சி மாறும் அன்று காட்சியும் மாறும். வேலுமணி அராஜகத்திற்கு முடிவு கட்ட அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை என்பதை ஆழ தோண்டி புதைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (108)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sampath - doha,கத்தார்
25-பிப்-202114:30:24 IST Report Abuse
sampath கொஞ்சமாவது பகுத்தறிவு வேணுமில்ல மக்களுக்குக்கிட்ட கொள்ளை அடித்து மனைவி , இணைவி துணைவிக்கிட்ட கொடுக்கணுமில்ல அதைத்தான் சுடலை சொல்றார்
Rate this:
Cancel
gabeer - oakville,கனடா
25-பிப்-202111:23:16 IST Report Abuse
gabeer நீங்கள் முன்னர் தமிழகத்தை ஆட்சி செய்த பொழுது ஏதாவது வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து ஏழை மக்களுக்கு உதவிகள் செய்து உண்டா ? அன்று கண்ணில் பட்ட சொத்துக்களை எல்லாம் சுருட்டி விட்டு ஏழைகளின் சொத்துக்களை பறித்து எப்படி எல்லாம் ஆட்டம் ஆடினீர்கள் அதன் பலன்தான் இப்போது எப்படியாவது வருகின்ற தேர்தலில் வெற்றி பெற வேணும் என்று நீங்கள் மக்களை ஏமாற்ற போடும் நாடகம் மனக்கோட்டை போல போயி விடும்.
Rate this:
Cancel
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம் மக்கள் சொத்தை கொள்ளை அடித்து அதை மீண்டும் மக்களிடமே தந்தால் நல்லது தானே, சரி தானே. ஓஹோ உங்களை போல் மக்கள் சொத்தை ஆட்டையை போட்டுவிட்டு அதை கொஞ்சமும் மக்களிடம் கொடுக்காமல் அடுத்த தலைமுறைக்கு அதற்கு அடுத்த தலைமுறைக்கு என உங்களை போல் சேர்த்துவைப்பதே சரி என்று சொல்ல வருகிறீர்களா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X