பெண் மாவோயிஸ்ட் விடுவிப்பு மனு தாக்கல்

Added : பிப் 19, 2021 | |
Advertisement
கோவை : கோவை வனப்பகுதியில் கைதான பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீ மதி, வழக்கிலிருந்து விடுவிக்க கோரி, மனு தாக்கல் செய்தார்.தமிழகம் - கேரள எல்லையை ஒட்டியுள்ள அட்டப்பாடி, மஞ்சகண்டி வனப்பகுதியில், 2019, அக்டோபரில், கேரள நக்சல் தடுப்பு பிரிவுக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் நடந்த பயங்கர துப்பாக்கி சண்டையில், நான்கு மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இதில், கர்நாடக மாநிலம், சிக்மகளூர்,

கோவை : கோவை வனப்பகுதியில் கைதான பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீ மதி, வழக்கிலிருந்து விடுவிக்க கோரி, மனு தாக்கல் செய்தார்.

தமிழகம் - கேரள எல்லையை ஒட்டியுள்ள அட்டப்பாடி, மஞ்சகண்டி வனப்பகுதியில், 2019, அக்டோபரில், கேரள நக்சல் தடுப்பு பிரிவுக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் நடந்த பயங்கர துப்பாக்கி சண்டையில், நான்கு மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இதில், கர்நாடக மாநிலம், சிக்மகளூர், பெகாருவை சேர்ந்த பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீ மதி,25, தப்பி ஓடினார். ஆனைகட்டி சோதனை சாவடியில் நடந்த சோதனையின்போது, பஸ்சில் வந்த ஸ்ரீ மதியை, கியூ பிராஞ்ச் போலீசார், கடந்தாண்டு மார்ச்சில் கைது செய்தனர்.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது சார்பில், வழக்கிலிருந்து விடுவிக்க கோரி, மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசு தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, இரு தரப்பு வாதத்திற்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X