தூக்கிலிருந்து தாயை காப்பாற்ற 12 வயது மகன் ஜனாதிபதிக்கு கருணை மனு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தூக்கிலிருந்து தாயை காப்பாற்ற 12 வயது மகன் ஜனாதிபதிக்கு கருணை மனு

Added : பிப் 19, 2021 | கருத்துகள் (32)
Share
லக்னோ: குடும்பத்தையே கொன்று குவித்த வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற பெண் குற்றவாளிக்கு கருணை வழங்க வேண்டும் என குற்றவாளியின் 12 வயது மகன் ஜனாதிபதிக்கு மனு அளித்துள்ளார். உ.பி.,யில், அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷப்னம். இவர், சலீம் என்பவரை காதலித்தார். இதற்கு, ஷப்னம் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 2008ல் காதலன் சலீமுடன் சேர்ந்து, வீட்டிலிருந்த ஏழு பேரையும்
 Death row convict Shabnam's 12-year-old son petitions the President seeking mercy for his mother

லக்னோ: குடும்பத்தையே கொன்று குவித்த வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற பெண் குற்றவாளிக்கு கருணை வழங்க வேண்டும் என குற்றவாளியின் 12 வயது மகன் ஜனாதிபதிக்கு மனு அளித்துள்ளார்.

உ.பி.,யில், அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷப்னம். இவர், சலீம் என்பவரை காதலித்தார். இதற்கு, ஷப்னம் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 2008ல் காதலன் சலீமுடன் சேர்ந்து, வீட்டிலிருந்த ஏழு பேரையும் கத்தியால் குத்தி கொன்றதை ஷப்னம் ஒப்புக் கொண்டார்.


latest tamil newsஷப்னத்தி்ற்கு மாவட்ட நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை, அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010லும், உச்ச நீதிமன்றம், 2015லும் உறுதி செய்தன. ஷப்னத்தின் கருணை மனுவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். முதன்முறையாக பெண் குற்றவாளியான ஷப்னத்துக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியானது.


இந்நிலையில் ஷப்னத்தின் 12 வயது மகன் ஜனாதிபதிக்கு மீண்டும் கருணை மனு அளித்துள்ளார். அதில் தனது தாய்க்கு கருணை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளான்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X