அறிவியல் ஆயிரம்
ஒருமுறை தடுப்பூசி
உலகில் பயன்பாட்டுக்கு வந்துள்ள கொரோனா தடுப்பூசி இரண்டு 'டோஸ்' செலுத்தப்பட வேண்டும். இந்நிலையில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப் பட்டு குணமடைந்தவர்களுக்கு, அமெரிக்காவின் 'பைசர்' நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் மட்டுமே சிறந்த பலனை தருகிறது என இஸ்ரேல் ஆய்வில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு,கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருந்தாலும், இல்லாவிட்டாலும் 'பைசர்' முதல் டோஸ் சிறப்பாக செயல்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் சுரங்கம்
உலக சமூகநீதி தினம்
மக்கள் அனைவருக்கும் கல்வி, வேலை, சுகாதாரம், உணவு, பொருளாதாரம், பாலினம், மொழி உட்பட எவ்வித பாகுபாடும் இல்லாமல் ஒரே சமூகமாக மகிழ்வுடன் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் பிப்.20ல் உலக சமூகநீதி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2007ல் இத்தினம் உருவாக்கப் பட்டது. 'டிஜிட்டல் பொருளாதாரத்தில் சமூகநீதிக்கான அழைப்பு' என்பது இந்தாண்டு மையக்கருத்து. சமூக வளர்ச்சிக்கு 'சமூகநீதி' மிக அவசியம். மக்களிடையே வறுமை, வேலைவாய்ப்பின்மையை போக்கவும் இத்தினம் வலியுறுத்துகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE