சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

விசாரணை கமிஷன் எதற்கு?

Added : பிப் 19, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
விசாரணை கமிஷன் எதற்கு?வி.எம்.கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும், முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷனுக்கு, 10வது முறையாக, மேலும் ஆறு மாத காலத்திற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.கடந்த, 2017 செப்., 25-ம் தேதி, இந்த விசாரணை ஆணையம் அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது. அப்போது, மூன்று மாதங்களுக்குள்


விசாரணை கமிஷன் எதற்கு?வி.எம்.கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும், முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷனுக்கு, 10வது முறையாக, மேலும் ஆறு மாத காலத்திற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.கடந்த, 2017 செப்., 25-ம் தேதி, இந்த விசாரணை ஆணையம் அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது. அப்போது, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்தும், ஒன்றுமே நடக்கவில்லை.அவகாசம் கேட்பதும், அளிப்பதும் வேண்டுமென்றே காலம் கடத்தி, வழக்கை நீர்த்துப் போக செய்யும் யுக்தி தான். இன்னும், ஆறு மாதங்கள் என்ன... ஆறு ஆண்டுகள் நீட்டித்தாலும், விசாரணை ஆணையம் எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யாது.
மக்கள் வரிப்பணத்தில், இன்னும் பல கோடி ரூபாயை, அந்த ஆணையம் விழுங்கும். அதனால் அரசியல்வாதிகளுக்கும், விசாரணை ஆணையத்தில் உள்ள அதிகாரிகளுக்கும் எந்த கவலையும் இல்லை. வருமானம் கிடைக்கிறதே, அது போதும்!பொதுமக்களிடம் கசக்கிப்பிழிந்து பெறப்படும் வரிப் பணத்தை, இப்படி பாழாக்கலாமா?யாராவது, இந்த விசாரணை கமிஷன் எனும் மாய வித்தைக்கு முடிவு
கட்டுங்களேன்.


அதற்கு என்ன உத்தரவாதம்?கே.ஆர்.பிரேம்குமார், பெங்களூருரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வெவ்வேறுவிதமான கொள்கை உடைய அரசியல் கட்சிகள், தேர்தல் வந்ததும் கூட்டணிக்கு அலைவது, வெட்கக்கேடானது.எதிரெதிர் துருவமாக இருக்கும், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., என, ஏதாவது ஒன்றுடன் கூட்டணி சேர, பேரம் பேசும் அரசியல் கட்சிகள் அனைத்தும், சுயநலவாதிகளால் தான் நிர்வகிக்கப்படுகிறது.தேர்தல் முடிந்ததும், இக்கட்சியினர் அராஜகத்தில் ஈடுபடுதல், ஆளுங்கட்சியை மிரட்டுதல், ஆட்சியை கவிழ்த்தல் போன்ற வேலைகளில் இறங்குவர்.எனவே, 'அடுத்த சட்டசபை பொதுத்தேர்தல் வரை, கூட்டணியில் தொடர்ந்து இருந்து, ஆட்சிக்கு ஆபத்தில்லாமல் இருப்போம்' என, உறுதி அளிக்கும் கட்சிகளை மட்டுமே, திராவிட கழகங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.தேர்தலில் தனித்து போட்டியிடும் கட்சியை நம்பலாம். ஆனால் கூட்டணியோடு களமிறங்கும் உதிரிக்கட்சியை தான், மக்கள் நம்பவே கூடாது.உதாரணத்திற்கு நாம், அ.தி.மு.க.,விற்கு ஓட்டு அளிக்க விரும்புகிறோம். ஆனால் நம் தொகுதியில், அதன் கூட்டணிக் கட்சி போட்டியிடுகிறது. அதற்கு நாம் ஓட்டளித்து, வெற்றி பெற செய்கிறோம். தேர்தல் முடிந்ததும் அக்கட்சி, தி.மு.க., உடன் கூட்டணி அமைக்காது என்பதற்கு, என்ன
உத்தரவாதம்?இதே கதை தான், தி.மு.க., கூட்டணி கட்சிகளும். எனவே மக்கள், நிதானித்து ஓட்டு அளிக்க வேண்டும்.


ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம்!அ.சீனிவாசன், கோவையிலிருந்து எழுதுகிறார்: ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுகளால், நம் சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. மாறாக, ஜாதிகள் நிலை நிறுத்தப்பட்டு, வன்மம் தான் துாண்டப்படுகிறது.இந்நிலையில் வன்னியருக்கு, 20 சதவீத உள் ஒதுக்கீடு வேண்டுமென, பா.ம.க.,வினர் போராடுகின்றனர்; கலவரத்திலும் ஈடுபட்டனர். இந்த கோரிக்கை நிறைவேறினால், மற்ற ஜாதிக் கட்சியினரும், தங்களுக்கும் உள் ஒதுக்கீடு வேண்டும் என, போராடுவர் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை.இப்பிரச்னைக்கு தீர்வு காண, சமூகத்தில் நல்ல மாற்றம் உருவாக, ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். ஜாதி சான்று வழங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொருளாதார ரீதியாக, இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.இதை சாத்தியமாக்கினால், காலப்போக்கில் நல்ல ஒரு சமுதாய அமைப்பு உருவாகி, ஜாதி பிரிவினை குறைய துவங்கும். ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் மலரும்.

'நிகழ்கால கக்கன்' நன்மாறன்!

க.சோணையா, திருமங்கலம், மதுரை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசு பஸ்சில் பயணித்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தன் இறுதி நாட்களை கழித்த, காங்., முன்னாள் அமைச்சர் கக்கனை நினைவு கூறுகிறார், இன்றைய மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., நன்மாறன்.இன்றைய அரசியல்வாதிகளின் ஆடம்பரங்களை கண்டு, 'காமராஜர், கக்கன் போல், இனி எவரும் பிறக்கப் போவதில்லை' என வருந்தியிருக்கிறோம்; ஆனால் நம் கண் முன் இருந்த, நன்மாறனை மறந்து விட்டோம். கடந்த, 2001, 2006 சட்டசபை தேர்தல்களில், மார்க்சிஸ்ட் சார்பில் போட்டியிட்டு வென்ற நன்மாறன், மதுரையில் குடியிருக்க சொந்த வீடு கூட இல்லாமல், வாடகை வீட்டில் தான் வாழ்ந்து வருகிறார் எனும்போது, 'நிகழ்கால கக்கன்' என்றே அவரைச் சொல்லலாம்.
பொதுமக்களின் பிரச்னைக்காக, அரசு பஸ்சில் பயணித்து, கலெக்டரிடம் மனு கொடுக்கிறார் என்றால், 'நிகழ்கால காமராஜர்' என்றே, அவரைச் சொல்லலாம்.தற்போது, எம்.எல்.ஏ., பென்ஷன் வாங்கினாலும், அதைக் கட்சிக்குக் கொடுத்து விடுகிறார். கட்சி கொடுக்கும், 'அலவன்ஸ்' மூலம் வாழ்ந்து வருகிறார்.வயோதிகம் காரணமாகவும், வீட்டு வாடகை கொடுக்க போதிய வருவாய் இன்றியும் தவிக்கும் நன்மாறன், தள்ளாடும் தன் மனைவியுடன் குடியிருக்க, ஒரு இலவச வீடு வேண்டும் என, மதுரை டி.ஆர்.ஓ.,விடம் மனு கொடுத்திருக்கிறார்.இதற்கு, அவர் சார்ந்த கட்சி தான் வெட்கி தலைகுனிய வேண்டும். கூட்டணி அமைக்க, கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை வாங்கும் அளவுக்கு, கம்யூ., தோழர்கள், 'வளர்ந்து' வருகின்றனர்.இன்றைக்கு சாதாரண வார்டு கவுன்சிலர் கூட கமிஷன் மற்றும் ஊழலில் மிதந்து, ஆடம்பர பங்களாவில் வசித்து, சொகுசு காரில் வலம் வருகின்றனர்.ஆனால், 10 ஆண்டுகள் தன்னலம் பாராது மக்கள் பணியாற்றிய நன்மாறனுக்கு, ஒரு சொந்த வீடு கூட இல்லை என்பது, வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரின் கோரிக்கையாவது, லஞ்சமில்லாமல் நிறைவேறுமா என்பது தெரியவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
20-பிப்-202121:23:25 IST Report Abuse
Anantharaman Srinivasan நன்மாறன் தன்னுடைய ஒய்வுதியத்தை கட்சிக்கு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இன்றய கம்யூனிஸ்ட் கட்சியில் தங்கள் பிழைப்பை நடத்தி கொள்பவர்களே அதிகம்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20-பிப்-202106:14:59 IST Report Abuse
D.Ambujavalli இந்த மாதிரி வாழும் கக்கன், காமராஜருக்கெல்லாம் இன்றைய பட்ட பெயர் 'பிழைக்க தெரியாதவர்' 'ஏமாளி'
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X