பொது செய்தி

இந்தியா

கல்வான் தாக்குதல் வீடியோவை வெளியிட்ட சீனா

Updated : பிப் 20, 2021 | Added : பிப் 20, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: இந்திய - சீன வீரர்கள் மோதும் கல்வான் தாக்குதல் சம்பவத்தின் வீடியோவை, சீன செய்தி நிறுவனமாக குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.கடந்த ஜூன் 15ம் தேதி இரவில், லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய - சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின்
Global Times, releases, Galwan valley video, PLA, China

புதுடில்லி: இந்திய - சீன வீரர்கள் மோதும் கல்வான் தாக்குதல் சம்பவத்தின் வீடியோவை, சீன செய்தி நிறுவனமாக குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.


latest tamil news




கடந்த ஜூன் 15ம் தேதி இரவில், லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய - சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் சீன தரப்பில், பலியானவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது.


latest tamil news




latest tamil news



இந்நிலையில், இந்த மோதலில் 4 வீரர்கள் மட்டுமே இறந்ததாக, சீனா முதன்முறையாக வெளி உலகத்துக்கு அறிவித்துள்ளது. ஆனால் இழப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கல்வான் தாக்குதல் சம்பவத்தின் வீடியோ தொகுப்பை சீன செய்தி நிறுவனம் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உயிர் தியாகத்தை அங்கீகரித்து அவர்களுக்கு விருதுகள் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வால்டர் - Chennai,இந்தியா
25-பிப்-202117:42:27 IST Report Abuse
வால்டர் "பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் சீன தரப்பில், பலியானவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது." - அந்த காலகட்டத்துல அவங்களோட செய்தித்தாள்களை படித்திருந்தாலே தெரிந்திருக்குமே. சீன ராணுவம் எப்படியும் செய்தி தாள்களுக்கு அறிவித்திருக்கும்.
Rate this:
dhandapani - Tiruppur,இந்தியா
26-பிப்-202108:43:35 IST Report Abuse
dhandapaniஅப்படி எதையும் செய்யவில்லையே சீனா ராணுவம்...
Rate this:
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
23-பிப்-202110:45:53 IST Report Abuse
ganapati sb ராணுவத்தை பொறுத்தவரை கண்னுக்கு கண் பல்லுக்கு பல் என செயல்படுதல் அவசியமான ஒன்று ஊடுருபவர்க்ளை தடுக்க பனிமலையில் பள்ளத்தாக்கில் துணிச்சலோடு செயல்படும் நமது பாரத தேச வீரர்களுக்கு பாராட்டுக்கள் மறைந்தவர்களுக்கு வீர வணக்கங்கள்
Rate this:
Cancel
ashok - madurai,இந்தியா
20-பிப்-202111:51:05 IST Report Abuse
ashok நமது ராணுவ வீரர்களை நினைத்து பெருமை கொள்கிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X